மூத்த குடிமக்களுக்கு செம நியூஸ்: இனி சந்தோஷமாக பறக்கலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனியர் சிட்டிசன்கள் சலுகை விலையில் விமானத்தில் பயணம் செய்யலாம் என இண்டிகோ நிறுவனம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'கோல்டன் ஏஜ்' என்ற பெயரில் ஒரு சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த சலுகையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு குறைந்த கட்டணத்தில் சீனியர் சிட்டிசன்கள் விமானத்தில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் - இண்டிகோ புதிய ஒப்பந்தம்: இந்திய பயணிகளுக்கு சாதகமா?

சுற்றுலா

சுற்றுலா

58 வயதுவரை குடும்பத்திற்காக உழைத்து விட்டு அதன் பின் ஓய்வு பெறும் சீனியர் சிட்டிசன்கள், ஓய்வு நேரத்தில் பெரும்பாலும் சுற்றுலா செல்வதையே விரும்புவார்கள். உள்நாட்டில் உள்ள பல இடங்களிலும் வெளிநாட்டிலுள்ள இடங்களுக்கும் அவர்கள் சுற்றுலா செல்வதற்கு வசதியாக தற்போது இண்டிகோ நிறுவனம் 'கோல்டன் ஏஜ்' என்ற புதிய திட்டத்தின் மூலம் சலுகை விலையில் பறக்கலாம் என அறிவித்துள்ளது.

கோல்டன் ஏஜ்

கோல்டன் ஏஜ்

இந்தியாவின் மிகப் பெரிய விமான போக்குவரத்து சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோவில் இந்த அறிவிப்பு சீனியர் சிட்டிசன்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. www.goindigo.in என்ற இணையதளத்தில் சென்று சீனியர் சிட்டிசன்களுக்கு 'கோல்டன் ஏஜ்' என்ற பெயரில் உள்ள சலுகையில் டிக்கெட் புக் செய்தால் அவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்

சீனியர் சிட்டிசன்கள்
 

சீனியர் சிட்டிசன்கள்

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை சீனியர் சிட்டிசன்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு வழக்கமான டிக்கெட் விலையில் தான் பயணம் செய்யவேண்டும் என்பதால் சீனியர் சிட்டிசன்கள் அதற்கு முன்பே தங்களது பயணத்தை திட்டமிட வேண்டும்

லக்கேஜ்

லக்கேஜ்

டிக்கெட் புக்கிங் செய்யும் போதும் சரி, பயணம் செய்யும் போதும் சரி சீனியர் சிட்டிசன்கள் தங்களது வயதுக்கான சான்றிதழ்களை விமான நிறுவன அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சலுகை விலையில் விமானத்தில் பயணம் செய்யும் சீனியர் சிட்டிசன் தங்களுடன் அதிகபட்சமாக 15 கிலோ எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்து செய்யலாம். ஹேண்ட்பேக் ஆக இருந்தால் 7 கிலோ மட்டுமே இருக்க வேண்டும்

டிக்கெட் கேன்சல்

டிக்கெட் கேன்சல்

முன்பதிவு செய்து கொண்ட டிக்கெட்டை கேன்சல் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆனால் கேன்சல் செய்யும்போது ஒரு சிறு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஏழு நாட்களுக்கு முன்பு டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

நிபந்தனைகள்

நிபந்தனைகள்

இந்த சலுகையை பெறுவதற்கு சீனியர் சிட்டிசன்களுக்கான நிபந்தனைகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

* இண்டிகோ அடிப்படைக் கட்டணத்தில் மட்டும் 10% வரை தள்ளுபடி வழங்குகிறது.

* இந்த சலுகையின் கீழ் பயணம் செய்யும் சீனியர்கள் இருக்கை மற்றும் காலை உணவுக்கு பணம் செலுத்த வேண்டும்.

* இந்த சலுகை ஒரு வழி மற்றும் சுற்றுப்பயணம் ஆகிய இரண்டிற்கும் செல்லுபடியாகும்.

* இண்டிகோவின் 6E மூத்த குடிமக்கள் தள்ளுபடி திட்டத்தின் கீழ் முன்பதிவுகளை மாற்றலாம் மற்றும் ரத்து செய்யலாம்.

* இந்தத் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியாது.

* இண்டிகோவின் பிற சலுகைகளுடன் இந்தத் திட்டம் இணைக்கப்படவில்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indigo Airlines launches golden age offer for senior citizens, adults to benefit from travel

Indigo Airlines launches golden age offer for senior citizens, adults to benefit from travel | சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு செம நியூஸ்: இனி ஹேப்பியாக பறக்கலாம்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X