ஆகாசா முதல் விமானத்தின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் இண்டிகோ எடுத்த முடிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாசா விமானம் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே தனது முதல் விமானத்தை இயக்க உள்ளது.

முதல் விமானத்தை இந்நிறுவனம் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க உள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 13ஆம் தேதி பெங்களூர் - கொச்சி வழித்தடத்திலும் விமானத்தை இயக்க உள்ளது.

ஆகாசா விமான நிறுவனம் தனது முதல் விமானத்தை இயக்க உள்ளதாக அறிவித்தவுடன் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

ஆபீஸ்-க்கு வர முடியாது, அதுவும் 5 நாளெல்லாம் ரொம்ப ஓவர்.. ஐடி ஊழியர்கள் பதில்..! ஆபீஸ்-க்கு வர முடியாது, அதுவும் 5 நாளெல்லாம் ரொம்ப ஓவர்.. ஐடி ஊழியர்கள் பதில்..!

ஆகாசா முதல் விமானம்

ஆகாசா முதல் விமானம்

பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களின் ஆகாசா விமான நிறுவனம் ஜூலை 22 ஆம் தேதி அன்று அகமதாபாத், பெங்களூரு, மும்பை மற்றும் கொச்சி இடையிலான விமானங்களுக்கான முன்பதிவு செய்யலாம் என அறிவித்திருந்தது. இந்நிறுவனத்தின் முதல் விமானம் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே வாராந்திர விமானங்களையும் ஆகஸ்ட் 28 முதல் இயக்க உள்ளது.

இண்டிகோ

இண்டிகோ

இந்த நிலையில் புதிய விமான நிறுவனமான ஆகாசாவை வரவேற்றுள்ள இண்டிகோ விமான நிறுவனம், ஆகாசாவின் முதல் விமானம் குறித்த அறிவிப்பு வந்த ஒரு சில மணி நேரங்களில் கொச்சி - பெங்களூரு வழித்தடத்தில் இன்டர்குளோப் ஏவியேஷன் நடத்தும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஜூலை 22 அன்று பெங்களூரு - கொச்சி வழித்தடத்தில் 7வது விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

போட்டி

போட்டி

ஏற்கனவே விமான சந்தையில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, அதன் ஆக்ரோஷமான வழித்தடங்கள் மற்றும் அந்த வழிகளில் இறக்கும் புதிய விமானங்கள் மூலம் போட்டி நிறுவனங்களை திணறடித்த வரலாறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் ஏசியா-விஸ்தாரா

ஏர் ஏசியா-விஸ்தாரா

கடந்த 2014ஆம் ஆண்டு ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை தொடங்கியபோது, ​​இண்டிகோ, போட்டியாளர்களை திணறடிக்கும் பணியை செய்தது என்று மூத்த பாதுகாப்பு மற்றும் விமானப் பகுப்பாய்வாளர் லோகேஷ் சர்மா கூறினார்.

பெரும் சவால்

பெரும் சவால்

கோவிட்-19 தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பு, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், இந்திய விமான நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க இண்டிகோ அதன் விமான எண்ணிக்கை அளவை அதிகப்படுத்தி புதிய நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

ஏகபோக சூழ்நிலை

ஏகபோக சூழ்நிலை


2018 ஆம் ஆண்டில், முன்னாள் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் டெப், விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் அகர்தலா-கொல்கத்தா வழித்தடத்தில் ஒரு ஏகபோக சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது. குமார் தனது கடிதத்தில், இண்டிகோ தனது விமான எண்ணிக்கை அளவு, நிதி வலிமையையும் பயன்படுத்தி மற்ற நிறுவனங்களை சந்தையில் இருந்து வெளியேற்றிய பிறகு, அகர்தலா-கொல்கத்தா வழித்தடத்தில் விமான கட்டணம் 150 சதவீதம் உயர்த்தியதாகவும் கூறியுள்ளார்.

550 வழித்தடங்கள்

550 வழித்தடங்கள்

இந்தியாவில் ஏறக்குறைய 550 வழித்தடங்களில் இண்டிகோ தற்போது இயங்குகிறது. இது நாட்டில் உள்ள வேறு எந்த விமான நிறுவனமும் வழங்கும் வழித்தடங்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று ஏவியேஷன் பகுப்பாய்வு இணையதளமான நெட்வொர்க் தாட்ஸின் அமேயா ஜோஷியின் டேட்டாக்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் இரண்டும் நாட்டில் சுமார் 270 வழித்தடங்களில் மட்டுமே இயங்குகின்றன.

வழித்தடங்கள்

வழித்தடங்கள்

மேலும், இண்டிகோ இயக்கும் 550 வழித்தடங்களில் 194 வழித்தடங்களில், ஏர்லைன்ஸ் முழுமையான ஏகபோக உரிமையை கொண்டிருந்தது என்றும், இது 470 வழித்தடங்களில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் பங்கையும் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் அதன் 26.7 சதவீத வழித்தடங்களில் ஏகபோக செயல்பாடுகளை கொண்டுள்ளது என்றும், ஏர் இந்தியா அதன் வழித்தடங்களில் 21 சதவீதத்தில் மட்டுமே ஏகபோக செயல்பாடுகளை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-ஆதரவு ஆகாசா ஏர் ஜூலை 22 அன்று அகமதாபாத், பெங்களூரு, மும்பை மற்றும் கொச்சி இடையே விமானங்களுக்கான முன்பதிவுகளை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில் இண்டிகோ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதை அந்நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IndiGo launches 7th Bengaluru-Kochi flight within hours after Akasa airline announces routes

IndiGo launches 7th Bengaluru-Kochi flight within hours after Akasa airline announces routes | ஆகாசா முதல் விமானத்தின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் இண்டிகோ எடுத்த முடிவு:!
Story first published: Monday, July 25, 2022, 8:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X