இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமும், மக்களுக்கு ஏற்ற பட்ஜெட் விமான நிறுவனமுமான இண்டிகோ, 877 ரூபாய் முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய சலுகையை அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 13ம் தேதியன்று தொடங்கிய இந்த சேவைக்கு, இன்றே கடைசி நாள். இண்டிகோவின் இந்த அதிரடி சலுகை மூலம் ஏப்ரல் 1, 2021 முதல் செப்டம்பர் 30, 2021 வரை பயணித்துக் கொள்ளலாம்.
The big fat indigo sale என்ற பெயரில் இந்த சலுகையை தொடங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை இண்டிகோ நிறுவனம் கடந்த வாரமே தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

சலுகை & கவனிக்க வேண்டிய விஷயம்
இண்டிகோவின் சலுகைகள் உண்மையில் குறைந்த விமானத்தில் பயணிக்க ஒரு நல்ல வாய்ப்பாகும். எனினும் இதில் கவனிகதக்க ஒரு விஷயமும் உண்டு. இந்த சலுகை மூலம் பயணம் செய்ய பதிவு செய்பவர்கள், ஒரு வேளை டிக்கெட்டினை ரத்து செய்தால், ரத்து கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும். அதே போல இந்த சலுகையானது ஒரு சில வழிதடங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தில் இதெல்லாம் சேர்க்கலாம்
மேலும் இந்த சலுகையானது டிக்கெட் இருப்பினை பொருத்தே வழங்கப்படும். எனினும் இந்த திட்டத்தில் மொத்தமாக டிக்கெட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதோடு மேற்கண்ட இந்த சலுகை கட்டணத்தில் விமான நிலைய கட்டணம் மற்றும் மாநில அரசு வரி சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கேஷ்பேக் சலுகையும் உண்டு
குறிப்பாக ஹெச்எஸ்பிசி மற்றும் இந்தஸிந்த் வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலம், டிக்கெட் பதிவு செய்யப்பட்டால் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. இதில் ஹெச்எஸ்பிசி கிரெடிட் கார்டினை பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்தால் 5 சதவீதம் கேஷ்பேக்கினை பெற முடியும். இதே இந்தஸிந்த் வங்கிகளின் கிரெடிட் கார்டினை பதிவு செய்தால் 12 சதவீத கேஷ்பேக் சலுகையினையும் பெற முடியும். ஆனால் இந்த சலுகையை பெறவும் சில விதிமுறைகள் உண்டு.

ஸ்பைஸ்ஜெட் சலுகைகள்
இதே பட்ஜெட் விலையில் விமான சேவையை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் 899 ரூபாய் முதல் டிக்கெட் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் ஏப்ரல் 1, 2021 முதல் செப்டம்பர் 30, 2021 வரை பயணித்துக் கொள்ளலாம். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் Book Befikar Sale என்ற பெயரில் இந்த சலுகையை தொடங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இண்டிகோவினை போலவே இந்த சலுகைகள் வழங்கப்பட்டாலும், ஸ்பைஸ்ஜெட்டில் ரத்து கட்டணம் இல்லை. டிக்கெட்டினை ரத்து செய்தால் பூஜ்ஜிய கட்டணமாகும்.

சூப்பர் சலுகை தான்
இந்த சலுகையில் சில பல விதிமுறைகள் கடுமையாக இருந்தாலும், இந்த சலுகையானது ரயில் கட்டணங்களை விட மலிவான விலையில் இருப்பதால் அடித்தட்டு ,மக்களும் விமானத்தில் பயணிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு கொரோனா காலகட்டத்தில் முடங்கி போன சேவையை மீட்டெடுக்க இது இந்த நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமையும். வாங்க வாங்க ஜாலியா ஒரு ரெய்டு தான் போய்ட்டு வருவோமே..!