இந்திய ஐடி நிறுவனங்கள் எந்த அளவிற்குப் புதிய திட்டங்களைப் பெறுகிறதோ, அதே அளவிற்கு ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது.
இதனால் ஐடி ஊழியர்கள் சக போட்டி நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான ஊழியர்களை ஈர்த்து வரும் காரணத்தால் ஐடி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதேபோல் வெளியேறிய ஊழியர்கள் இடத்தில் புதிய ஊழியர்களை நியமிக்கும் போது அதிகப்படியான சம்பளத்தில் ஊழியர்களை நியமிக்க வேண்டி இருக்கும் காரணத்தால் செலவுகள் அதிகரித்து லாபத்தைப் பாதிக்கிறது.
இந்த நிலையைச் சமாளிக்க இன்போசிஸ் புதிய கட்டுப்பாட்டைத் தனது ஊழியர்கள் மீது விதித்துள்ளது. தற்போது இதே கட்டுப்பாட்டை டிசிஎஸ் நிறுவனமும் கையாண்டு வருவதாகத் தெரிகிறது.
காளையின் பிடியில் சந்தை.. சென்செக்ஸ் மீண்டும் தொடர் ஏற்றம்..முதலீட்டாளர்கள் ஹேப்பி!

இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து சமீபத்தில் வெளியேறிய ஊழியர்கள் அனைவருக்கும் புதிதாக ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டியாளர்கள் எனப் பட்டியலிட்டு உள்ள 5 நிறுவனத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளரும் அதாவது Client-ம் போட்டி நிறுவனத்தின் Client-ம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் 6 மாதம் பணியாற்றத் தடை விதித்துள்ளது.

டிசிஎஸ்
இதன் மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்யும் முன்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் இதேபோன்ற கட்டுப்பாட்டை டிசிஎஸ்-ம் பின்பற்றுவதாக இந்தியன் எக்ஸ்பிர்ஸ் தெரிவித்துள்ளது.

போட்டி நிறுவனங்கள்
இன்போசிஸ் நிறுவனம் மென்பொருள் சேவை பிரிவில் டிசிஎஸ், ஐபிஎம், காக்னிசென்ட், விப்ரோ, அக்சென்சர் ஆகிய நிறுவனங்களையும், BPM துறையில் டெக் மஹிந்திரா, ஜென்பேக்ட், WNS, டிசிஎஸ், ஐபிஎம், காக்னிசென்ட், விப்ரோ, அக்சென்சர் மற்றும் ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்களைப் பட்டியலிட்டு உள்ளது.

6 மாதம் தடை
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்கள் மேல குறிப்பிட்டு உள்ள நிறுவனத்தில் அதே வாடிக்கையாளர்களுக்குப் பணியாற்ற 6 மாதம் தடை விதித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.

இன்போசிஸ் விளக்கம்
ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட கால அளவுக்குத் தகவல், வாடிக்கையாளர் இணைப்பு மற்றும் பிற முறையான வணிக நலன்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க, நியாயமான நோக்கம் கொண்டு உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்படும் இயல்பான வணிக நடைமுறையாகும்.

ஐடி ஊழியர்கள்
இன்போசிஸ் நிறுவனத்தில் சேர முடிவெடுப்பதற்கு முன், அனைத்து வேலை ஊழியர்களுக்கும் இத்தகைய விதிமுறைகள் குறித்து விளக்கம் கொடுக்கப்படுகிறது. இந்த விதிமுறை மூலம் ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் ஆர்வத்தை எந்த விதத்திலும் குறைபடுவது இல்லை என இன்போசிஸ் விளக்கம் கொடுத்துள்ளது.

NITES அமைப்பு
இந்த விதிமுறைகள் கடந்த சில காலமாக உள்ளது. சந்தையில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன, இதன் காரணமாக அட்ரிஷன் விகிதம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. திறமையான ஊழியர்களைத் தக்கவைக்கப் போட்டி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற சம்பளத்திற்கு இணையான சம்பளம் அளிக்கப்படுகிறது.

65-70 புகார்கள்
இந்நிலையில் கடந்த சில வாரங்களில், சுமார் 65-70 புகார்கள் வந்துள்ளன, இன்ஃபோசிஸ் விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடு காரணமாகப் பல புதிய வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் NITES அமைப்பு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாக NITES அமைப்பின் தலைவரான ஹர்ப்ரீத் சிங் சலுஜா கூறினார்.