பாத்ரூம் சுத்தம் செய்து.. பல்லை பிடுங்கி.. இன்போசிஸ் நாராயண மூர்த்தி-யின் 40 வருட ரகசிய கதை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் ஐடி சேவை துறை மிகவும் முக்கியமானதாக இன்று மாறியுள்ளது, இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சியில் இன்போசிஸ் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

மிடில் கிளாஸ் குடும்பங்களில் இருந்த வந்த 7 பட்டதாரிகள் உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். 40 வருட வெற்றியை ஜூலை மாதம் இன்போசிஸ் கொண்டாடியது. புதன்கிழமை இன்போசிஸ் உருவாக்கிய 7 நிறுவனங்கள் மற்றும் அவர்களது குடும்பம் மற்றும் இன்போசிஸ் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் சிறப்புச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தச் சந்திப்பில் 40 வருடத்திற்கு முன்பு 1 பெட்ரூம் வீட்டில் துவங்கிய இன்போசிஸ் ஐடியா இன்று 71.41 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனமாக உருவெடுத்துள்ளது மட்டும் அல்லாமல் இந்திய பொருளாதாரத்தின் அசைக்க முடியாத சொத்தாக மாறியுள்ளது.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி மகன் ரோஹன் மூர்த்தி-யின் மனைவி யார் தெரியுமா..?! இன்போசிஸ் நாராயண மூர்த்தி மகன் ரோஹன் மூர்த்தி-யின் மனைவி யார் தெரியுமா..?!

7 பேர்

7 பேர்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் என் ஆர் நாராயண மூர்த்தி, நந்தன் நிலேகனி, கிரிஸ் கோபாலகிருஷ்ணன், எஸ்டி ஷிபுலால், கே.தினேஷ், என்எஸ் ராகவன் மற்றும் அசோக் அரோரா ஆகிய 7 பேர் இணைந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவினார்.

மிடில்கிளாஸ் குடும்பம்

மிடில்கிளாஸ் குடும்பம்

இவர்கள் அனைவரும் மிடில்கிளாஸ் குடும்பத்தில் இருந்து பெரிய பின்புலம் இல்லாமல் மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரிகள். இன்ஃபோசிஸ் தொடங்குவது குறித்து நாராயண மூர்த்தி, மும்பையில் உள்ள தனது ஒரு பெட்ரூம் வீட்டில் மற்ற இணை நிறுவனர்களுடன் சேர்ந்து பல நாள் தூங்காமல் விவாதித்துத் துவங்கப்பட்டது.

சுதா மூர்த்தி
 

சுதா மூர்த்தி

நாராயண மூர்த்தித் தனது மனைவி சுதா மூர்த்தியிடம் இருந்து 10000 ரூபாய் கடன் வாங்கி இன்போசிஸ் நிறுவனத்தைத் துவங்கினார், நிறுவனம் துவங்கி 2 வருடங்கள் கம்ப்யூட்டரே இல்லாமல் தான் இயங்கி வந்தது. கம்ப்யூட்டர் கூட வாங்குவதற்குப் பணம் இல்லாத நிலையில் தான் இன்போசிஸ் துவங்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

1976ல் முதல் தோல்வி

1976ல் முதல் தோல்வி

நாராயண மூர்த்தித் துவங்குவதற்கு முன்பு 1976ல் softronics என்னும் நிறுவனத்தைத் துவங்கினார், இந்த நிறுவனம் 1.5 வருடம் கூடத் தாக்குப்பிடிக்கவில்லை, பின்பு மூடப்பட்டது. இதன் பின்பு தான் தனது 7 நண்பர்கள் உடன் இணைந்து 10000 ரூபாய் பணத்துடன் இன்போசிஸ் துவங்கப்பட்டது.

புனே டூ பெங்களூர்

புனே டூ பெங்களூர்

1981 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் இன்போசிஸ் கன்சல்டெட்ன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் துவங்கினர். 1983 ஆம் ஆண்டில் பெங்களூரை தலைமையிடமாக மாற்றினர்.

இன்போசிஸ் லிமிடெட்

இன்போசிஸ் லிமிடெட்

தொடர் வளர்ச்சி பாதையில் 1992ல் இன்போசிஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்று நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது, 1992ல் ஐபிஓ வெளியிடும் போது இன்போசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்றானது, 2011 ல் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்போசிஸ் லிமிடெட் என்ற தற்போதைய பெயரை பெற்றது.

பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி

பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி

இன்போசிஸ் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் இன்போசிஸ் நிறுவனர்கள் புதன்கிழமை பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள பெங்களூரு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். இதில் சில உங்களுக்காக..

சொல்லப்படாத கதைகள்

சொல்லப்படாத கதைகள்

இன்போசிஸ் ஆரம்ப நாட்களில் நடந்த யாருக்கும் இதுவரை சொல்லப்படாத கதைகளை இன்போசிஸ் நிறுவனர்கள் பகிர்ந்து கொண்டனர். இதில் இன்போசிஸ் நிறுவனரான கே தினேஷ் கூறுகையில் 1990 இல் பிரான்சில் நாங்கள் ஒரு திட்டத்தை வைத்திருந்தோம்.

கே தினேஷ்

கே தினேஷ்

நான் குழுவை வழிநடத்திக்கொண்டிருந்தேன், நாராயண மூர்த்தி மற்றும் பிரகலாத்துக்கு ஒரு அப்பார்ட்மென்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்போது மூர்த்திச் சரியாகத் தூங்காமல் இருப்பதை நான் கவனித்தேன். நான் விசாரித்தபோது, எங்கள் 'ஜுகல்பந்தி' குறட்டை அவரைத் தொந்தரவு செய்வதைக் கண்டேன்.

பாத்ரூம்

பாத்ரூம்

அவருக்குத் தனி அறை கொடுக்கப்பட்டது. நாராயண மூர்த்தி அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளிப்பார். அதிகாலை 4.30 மணிக்கு குளித்துவிட்டு, மற்றவர்களுக்காகப் பாத்ரூம் முழுவதையும் சுத்தம் செய்வார். அவர் சக ஊழியர்களை இப்படித்தான் மதித்தார். அலுவலகத்திற்குத் தாமதமாகச் சென்றவர்கள் அனைவருக்கும் உணவு சமைத்தார்கள், தாமதமாக வருபவர்கள் பாத்திரங்களைக் கழுவி, வீட்டைச் சுத்தம் செய்வார்கள்.

ஷிபுலால்

ஷிபுலால்

நாராயண மூர்த்தி ஒருமுறை ஷிபுலால்-க்கு ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்கும் வரை வீட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று கூறியதை நினைவு கூர்ந்தார். இரண்டு நாட்களுக்கு அலுவலகத்திலேயே இருந்து அங்கேயே தூங்கி, அலுவலகப் பாத்ரூம்-லேயே குளித்துப் பணியாற்றியுள்ளார்.

பல்லை பிடுங்கி இன்போசிஸ்

பல்லை பிடுங்கி இன்போசிஸ்

நாராயண மூர்த்தி 1999 இல் டொராண்டோ -வில் முக்கியமான பிரசென்டேஷன் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் தனக்கு பல் வலி அதிகமாக இருந்த நிலையில் வெட்டு இடுக்கி மூலம் பல்லை பிடுங்கிவிட்டு பிரசென்டேஷன் செய்ததை நினைவு கூர்ந்தார். இப்படி ஒவ்வொருவரும் இன்போசிஸ் 40 வருட வளர்ச்சியில் தங்களது நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

சுதா மூர்த்தி டான்ஸ் வீடியோ

புதன்கிழமை பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள பெங்களூரு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனர் நாராணயன மூர்த்தியின் காதல் மனைவி சுதா மூர்த்தி ஸ்ரேயா கோஷல் பாட்டுக்கு ஜாலியாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மருமகன் ரிஷி சுனக்-கிற்கு மாமனார் நாராயணமூர்த்தி செய்த காரியம்.. இப்போ பிரதமர் பதவி..! மருமகன் ரிஷி சுனக்-கிற்கு மாமனார் நாராயணமூர்த்தி செய்த காரியம்.. இப்போ பிரதமர் பதவி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys at 40 years; Narayana Murthy cleans bathroom; Sudha Murty dance for Shreya Ghoshal song

Infosys at 40 years; Narayana Murthy cleans bathroom; Sudha Murty dance for Shreya Ghoshal song. infosys founders N R Narayana Murthy, Nandan Nilekani, Kris Gopalakrishnan, SD Shibulal, K.Dinesh, NS Raghavan, Ashok Arora recollects their memory
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X