இன்போசிஸ் நாராயண மூர்த்தி மகன் ரோஹன் மூர்த்தி இப்போ என்ன செய்கிறார் தெரியும்..? இவரின் மனைவி யார்?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாராயண மூர்த்தி தனது இளம் வயதிலேயே மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து தனது சக நண்பர்கள் உடன் இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கி இந்தியாவில் அதிக லாபம் கொடுத்துள்ள நிறுவனமான இன்போசிஸ் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்துள்ளது.

நாராயணமூர்த்தி மனைவி சுதா மூர்த்திப் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டு இளம் தலைமுறையினருக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு ரோல் மாடலாகி வருகிறார்.

நாராயண மூர்த்தி-யின் மகள் அக்ஷதா மூர்த்தி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்-ன் மனைவி ஆவார், இதோடு பிரிட்டனில் சில நிறுவனங்களையும் நிர்வாகம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாராயணமூர்த்தி-யின் ஓரே மகனான ரோஹன் மூர்த்தி என்ன செய்கிறார் தெரியுமா..?!

சம்பளம் கட்.. இன்போசிஸ் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி..! யாருக்கெல்லாம் பாதிப்பு..? சம்பளம் கட்.. இன்போசிஸ் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி..! யாருக்கெல்லாம் பாதிப்பு..?

ரோஹன் மூர்த்தி

ரோஹன் மூர்த்தி

39 வயதான ரோஹன் மூர்த்தி-யும் சளைத்தவர் அல்ல, Soroco என்னும் டேட்டா அனலிசிஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கார்பரேட் நிறுவனத்தில் இருக்கும் பல பிரச்சனைகளைத் தீர்க்கும் வண்ணம் பல்வேறு டேட்டா-வை அனலிசிஸ் செய்து அலுவலகப் பணிகளைச் சீர்படுத்துவது தான் Soroco-வின் பணி.

டோயோட்டா

டோயோட்டா

உற்பத்தி துறையில் செலவுகளைக் குறைக்கவும், எதிர்வரும் டிமாண்ட் அடிப்படையில் எப்படிப் பொருட்களை வாங்க வேண்டும், கையில் இருக்கும் வளத்தை எப்படி முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை டோயோட்டா செய்தது, தற்போது இதை அனைத்துக் கார்பரேட் நிறுவனத்திலும் ரோஹன் மூர்த்தி Soroco செய்கிறது.

Soroco நிறுவனம்

Soroco நிறுவனம்

Soroco நிறுவனம் ஒரு நிறுவனத்தில் ஒவ்வொரு அணியும் எப்படி மென்பொருளை பயன்படுத்துகிறது என்பது குறித்துத் தரவுகளைச் சேகரித்து அதன் மூலம் ஒரு வடிவத்தை உருவாக்கி தினசரி பணிகளில் இருக்கும் பிரச்சனைகளைச் சீர்படுத்துவது மட்டும் அல்லாமல் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் திறன் அதிகரிக்கும், செலவுகளைக் குறைக்கும். இந்த ஆய்வு மூலம் ஒரு நிறுவனம் மாற்றுத் தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்வது முதல் ஆட்டோமேஷன் செய்வது வரையில் பல விஷயத்தைத் தீர்மானிக்க முடியும்.

பெங்களூர், பாஸ்டன்

பெங்களூர், பாஸ்டன்

ரோஹன் மூர்த்தி-யின் ஸ்டார்ட்அப் நிறுவனமான Soroco பெங்களூர் ஜேபி நகரிலும், அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலும் தலைமை அலுவலகத்தை வைத்து இயங்கி வருகிறது. மெஷின் லேர்னிங் மூலம் எப்படி ஊழியர்களும், அணிகளும் ஒரு பணியை முடிக்கிறார் என்பதை அறிந்து நிறுவனங்களுக்குத் தேவையான தரவுகளை அளிக்கிறது.

முக்கிய வாடிக்கையாளர்

முக்கிய வாடிக்கையாளர்

ரோஹன் மூர்த்தி-யின் Soroco நிறுவனம் தற்போது பார்மா நிறுவனமான Bayer, இன்ஜினியரிங் நிறுவனமான Robert Bosch GmbH, சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான Mars Inc முதல் பல வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கிகள், உலகளவில் வர்த்தகம் செய்யும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வரையில் பல துறையில் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளனர்.

இன்போசிஸ் பங்குகள்

இன்போசிஸ் பங்குகள்

ரோஹன் மூர்த்தி-யிடம் இன்போசிஸ் நிறுவனத்தின் 1.45 சதவீத பங்குகள் உள்ளது, இது அவருடைய சந்தை உருவாக்கிய நிறுவனம் என்பதால் அவரின் மூலம் 1.45 சதவீத பங்குகளைப் பெற்று இன்போசிஸ்-ன் 2வது பெரிய தனிநபர் பங்குதாரர் ஆக உள்ளார். Soroco நிறுவனத்தில் தற்போது 250க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர், 40 பேடென்ட் பெற்றுள்ளது.

ரோஹன் மூர்த்தி - லட்சுமி வேணு

ரோஹன் மூர்த்தி - லட்சுமி வேணு

ரோஹன் மூர்த்தி TVS மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணுவை ஜூன் 2011 இல் திருமணம் செய்து கொண்டார், 2015 இல் இருவரும் தனிப்பட்ட காரணத்திற்காக விவாகரத்து செய்தனர். நாராயணமூரத்தி 2வது முறையாக இன்போசிஸ் நிர்வாகத்தைக் கையில் எடுத்த போது 2013ல் ரோஹன் மூர்த்தி நிர்வாக உதவியாளர் பணியில் அமர்த்தப்பட்டார், 2014 ஜூன் மாதத்தில் மொத்தமாக வெளியேறினார்.

ரோஹன் மூர்த்தி - அபர்ணா கிருஷ்ணன்

ரோஹன் மூர்த்தி - அபர்ணா கிருஷ்ணன்

இதன் பின்னர்க் கொச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற SBI ஊழியர் சாவித்திரி கிருஷ்ணன் மற்றும் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் கே.ஆர்.கிருஷ்ணன் ஆகியோரின் மகளான அபர்ணா கிருஷ்ணன் என்பவரை டிசம்பர் 2019ல் ரோஹன் மூர்த்தி மணந்தார்.

மூன்லைட்டிங் செய்பவருக்கு வருமான வரி அதிகாரிகள் எச்சரிக்கை..!! ஐடி ஊழியர்களே உஷார்..! மூன்லைட்டிங் செய்பவருக்கு வருமான வரி அதிகாரிகள் எச்சரிக்கை..!! ஐடி ஊழியர்களே உஷார்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys Narayana Murthy's Son, Rohan Murty doing wonders with Startup Soroco

Infosys Narayana Murthy's Son, Rohan Murty doing wonders with Startup Soroco
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X