கேரளாவில் IBM, கனடாவில் இன்போசிஸ்..! ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இதேவேளையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையிலும் சில முன்னணி ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் களத்தில் இறங்கியுள்ளதால் ஐடி ஊழியர்களுக்குப் புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

ஐபிஎம் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

ஹோம் லோன், கார் லோன் இஎம்ஐ இன்னும் சில தினங்களில் அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா? ஹோம் லோன், கார் லோன் இஎம்ஐ இன்னும் சில தினங்களில் அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா?

ஐபிஎம் நிறுவனம்

ஐபிஎம் நிறுவனம்

உலகின் மிகப்பெரிய வன்பொருள் மற்றும் மென்பொருள் சேவை நிறுவனமான ஐபிஎம் தனது உலகளாவிய வர்த்தகத்தை இந்தியாவை மையமாக வைத்து கட்டமைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஐபிஎம் நிறுவனம் புதிய அலுவலகத்தைக் கேரளாவில் துவங்கியுள்ளது.

கேரளா

கேரளா

கேரளா மாநிலத்தில் காக்கநாட் பகுதியில் அமைந்துள்ள பிரிகேட் வேர்ல்ட் டிரேட் சென்டர் இன்போபார்க்கில் அதிநவீன குளோபல் இன்னோவேஷன் சென்டரை ஐபிஎம் திறந்து வைத்துள்ளது. இப்புதிய ஐபிஎம் சாப்ட்வேர் லேப்-ஐ கேரளா முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

ஐபிஎம் சாப்ட்வேர் லேப்
 

ஐபிஎம் சாப்ட்வேர் லேப்

இப்புதிய ஐபிஎம் சாப்ட்வேர் லேப்-ல் டேட்டா, செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் பிரிவுகளில் அனைத்து விதமான இன்ஜினியரிங், டிசைன், டெவலப்மென்ட் ஆகிய பணிகளைச் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎம் நிறுவனம் இந்தியா-வை பற்றியும், இந்திய ஐடி ஊழியர்களைப் பற்றியும் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா..?

இன்போசிஸ்

இன்போசிஸ்

இதேவேளைவில் வர்த்தக விரிவாக்கத்தில் தீவிரமாக இருக்கும் இன்போசிஸ் கனடா நாட்டின் முக்கிய நகரமான Calgary பகுதியில் சுமாப் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய டிஜிட்டல் சென்டரை திறந்துள்ளது. இதன் மூலம் இந்திய ஐடி ஊழியர்கள் கனடா செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இன்போசிஸ் கனடா டிஜிட்டல் சென்டர்

இன்போசிஸ் கனடா டிஜிட்டல் சென்டர்

இந்தப் புதிய டிஜிட்டல் சென்டர் மூலம் கனடா நாட்டில் இன்போசிஸ் வர்த்தகம் வளர்ச்சி அடைய மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் 2024 ஆம் ஆண்டுக்குள் இன்போசிஸ் தனது கனடா ஊழியர்கள் எண்ணிக்கையைச் சுமார் 8000 ஆக உயர்த்த உள்ளது.

முக்கியத் தொழில்நுட்பம்

முக்கியத் தொழில்நுட்பம்

இதேபோல் இந்த டிஜிட்டல் சென்டிரில் இருந்து இன்போசிஸ் இன்டலிஜென்ட் ஆட்டோமேஷன், கிரீன் டெக்னாலஜி, யூசர் எக்ஸ்பீரியன்ஸ், அட்வான்ஸ் டிஜிட்டல் டெக்னாலஜிஸ், பிக் டேட்டா, கிளவுட் ஆகிய பிரிவுகளில் பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys opens digital centre in Canada, IBM opens new software lab in Kochi

Infosys opens digital centre in Canada, IBM opens new software lab in Kochi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X