டிசிஎஸ்-ஐ ஓரம்கட்டிய இன்போசிஸ்.. மகிழ்ச்சியில் சலில் பாரீக்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மென்பொருள் துறை கடந்த சில வருடங்களாகவே பல வர்த்தகப் பிரச்சனைகளைச் சந்தித்து வந்த நிலையில், அதைச் சரியான முறையில் எதிர்கொண்டு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நிறுவனங்களுக்கு மத்தியிலான வர்த்தக வளர்ச்சியில் இருக்கும் போட்டி சற்றும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எப்போதும் டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் தான் பெரு நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் நிலையில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி அளவீட்டைப் பார்க்கும் போது அனைத்து தரப்பினருக்கும் ஆச்சரியம் அளிக்கும் அளவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

எப்போதும் இல்லாத வகையில் நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தை விடவும் இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி வேகமாகவும் அதிகமாகவும் இருப்பதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள். இது உண்மையெனில் டிசிஎஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அதேசமயம் இன்போசிஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான பங்கு மதிப்பு வளர்ச்சி பார்க்க முடியும்.

சரி இந்தத் திடீர் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன..? இந்த அதீத வளர்ச்சி மேலும் தொடருமா..?

 

காரணம்

காரணம்

இந்தத் திடீர் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணம் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனங்களை விடவும் அளிக்கப்படும் குறைவான விலையும், சமீபத்தில் இன்போசிஸ் செய்த நிறுவன கைப்பற்றலும் தான்.

ஆம், கடந்த 2 வருடத்தில் இன்போசிஸ் தனது விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவில் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளது இதனால் இந்நிறுவனத்திற்குக் கிடைத்துள்ள ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

நீண்ட கால வாடிக்கையாளர்

நீண்ட கால வாடிக்கையாளர்

அதேபோல் இன்போசிஸ் கடந்த 2 வருடமாக நீண்ட காலத் திட்டங்களைக் கைப்பற்றுவதில் தனிப்பட்ட ஆர்வத்தைச் செலுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்க டெலிகாம் நிறுவனமான வெரிசோன் உட்படப் பல பெரிய நிறுவனங்களின் நீண்ட காலத் திட்டங்களைக் கைப்பற்றியுள்ளது இன்போசிஸ்.

இந்த இடத்தில் தான் டிசிஎஸ் நிறுவனத்தை இன்போசிஸ் முந்தியுள்ளதாகத் தெரிகிறது.

 

வளர்ச்சி விகிதம்

வளர்ச்சி விகிதம்

2019-20ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் தனது நிலையான நாணய அளவீடுகள் உடன் 8 - 8.5 சதவீத வளர்ச்சியை அடையும் நிலையில், இன்போசிஸ் 9 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

2020ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கூடச் சலில் பாரீக் நிர்வாகத்தில் இன்போசிஸ் சுமார் 10.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Stater

Stater

கடந்த மே மாதம் இன்போசிஸ், ABM AMRO நிறுவனத்தின் கிளை நிறுவனமான Stater என்னும் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. இந்த நிறுவனம் Benelux (Belgium, Netherlands மற்றும் Luxembourg) பகுதியில் முழுமையான அடைமான கடன் சேவையை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி ஆரம்பத்தில் குறைவாக இருந்த நிலையில், சலில் பாரீக் நிர்வாகத்தில் Stater நிறுவனமும் அதீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys pip TCS in growth: acquisitions and competitive pricing plays big role

Infosys is likely to grow faster than larger rival TCS this fiscal year, analysts said, on the back of its acquisitions and competitive pricing strategy. Over the past two years, the software services provider has been investing in an aggressive sales and marketing team and to attract digital- tech-focused deals.
Story first published: Tuesday, December 31, 2019, 7:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X