சூப்பர் கூட்டணி.. மாஸ் காட்டும் இன்ஃபோசிஸ்.. வாகன துறையிலும் இனி டிஜிட்டல் வளர்ச்சி தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ், ஜெர்மனை அடிப்படையாகக் கொண்ட டைம்லர் ஏஜி நிறுவனத்திடம் இருந்து ஓரு மெகா டீலை பெற்றுள்ளது.

 

உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் அரங்கேறி வரும் இந்த நிலையில், இந்த மெகா கூட்டணியானது அமைந்துள்ளது. இது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மற்றொரு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

ஏனெனில் நடப்பு ஆண்டில் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் இன்ஃபோசிஸ் நிறுவனம், ஏற்கனவே ஒரு மெகா டீலில் கையெழுத்திட்டுள்ளது.

மகாராஷ்டிராவுக்கு செம ஜாக்பாட் தான்.. பஜாஜ் ஆட்டோவின் பிரம்மாண்ட திட்டம்..!

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

சரி வாருங்கள் அப்படி என்ன டீல் இது? இதில் எவ்வளவு முதலீடு செய்யப்படவுள்ளது விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். இந்த இரு மெகா கூட்டணியின் மூலம் பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த திட்டத்தின் மூலம் டைம்லர் அதன் தொழில்நுட்ப திறன்களை வலுபடுத்த அனுமதிக்கும்.

வாய்ப்புகள் பெருகும்

வாய்ப்புகள் பெருகும்

இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக ஜெர்மன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தினை சேர்ந்த வாகன ஐடி உள்கட்டமைப்பு வல்லுனர்கள் டைம்லர் ஏஜியில் இருந்து இன்ஃபோசிஸிக்கு மாறுவார்கள். இந்த மாற்றங்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாகன வணிகத்தினை மேம்படுத்துவதற்கும், வளர்ப்பதற்கும் உதவும். அதே நேரம் டைம்லர் ஊழியர்களுக்கும், நீண்டகால தொழில் வளர்ச்சிக்கான வலுவான வாய்ப்புகளை வழங்கும்.

புதிய அனுபவம்
 

புதிய அனுபவம்

நாங்கள் இந்த பயணத்தில் இறங்கும்போது, திறன்கள், சுற்றுசூழல் அமைப்புகள் மற்றும் ஹைபிரிட் கிளவுட் உள்கட்டமைப்பு ஆகியவற்றை கொண்டு வருவோம். இது டைம்லர் ஏஜிக்கு மட்டும் அல்ல, இந்த தொழில்துறைக்கும் புதிய அனுபவங்களை கொடுக்கும். உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் டிஜிட்டல் பயணங்களுக்கு செல்ல உதவுவதில் இன்ஃபோசிஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாகனத் தொழிலில் தரம்

வாகனத் தொழிலில் தரம்

ஆக இந்த கூட்டாண்மை மூலம், வாகனத் தொழிலில் நாங்கள் ஒரு புதிய தரத்தினை கொண்டு வருவோம் என இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான வான்கார்ட்டிடமிருந்து, பல ஆண்டு டிஜிட்டல் உருமாற்ற ஒப்பந்தத்தினை வென்றது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 1.5 பில்லியன் டாலராகும். இதுவரை இந்த நிறுவனம் இப்படியொரு மெகா டீலை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் வளர்ச்சி

டிஜிட்டல் வளர்ச்சி

இது டிஜிட்டல் தொழில் நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதனை சுட்டிக் காட்டுகிறது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் சீராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுவாக ஐடி துறை நிறுவனங்களுக்கு பலவீனமாக காலமாகும் என்று சலீல் பரேக் ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.

டிஜிட்டல் வருவாய்

டிஜிட்டல் வருவாய்

ஏனெனில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகளில் இந்த காலாண்டுகளில் பருவகால பலவீனமாக கருதப்படுகிறது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் வணிகம் 25.4% வளர்ச்சி கண்டுள்ளது. இது அதன் வருவாயில் 47.3% பங்கு வகித்துள்ளதாகவும், இது அடுத்த சில காலாண்டுகளில் 50% ஆக அதிகரிக்கும் என்றும் சலீல் கூறியுள்ளார். இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று கிட்டதட்ட 4% ஏற்றம் கண்டு, 1220.50 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys wins a billion dollar deal from Daimler AG

Infosys updates.. Infosys wins a billion dollar deal from Daimler AG
Story first published: Tuesday, December 22, 2020, 22:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X