ஊழியர்களுக்கு வேக்சின் கேம்ப்.. இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா அசத்தல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவி வருவதைத் தொடர்ந்து தனது ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கோவிட் வேக்சின் முறையாக, பிரச்சனையும் இல்லாமல் கொண்டு சேர்க்கும் விதமாக அலுவலகங்களிலேயே வேக்சின் கேப் ஏற்பாடு செய்து வருகிறது.

 

 மே 1 முதல் வேக்சின்

மே 1 முதல் வேக்சின்

இந்தியாவில் தற்போது 45 வயதிற்கு அதிகமானோர் மட்டுமே கொரோனா தடுப்பு மருந்தைப் பெற அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு அதிகம் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பு மருந்து பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகாரம்

தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகாரம்

இதோடு கொரோனா தடுப்பு மருந்தை வாங்கும் உரிமையை மத்திய அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும், மாநில அரசு தனது கைகளுக்குக் கொடுத்துள்ளது. இதனால் மாநில அரசும், தனியார் மருத்துவமனையும் தனது விருப்பத்தின் படி எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.

 நேரடியாக விற்பனை
 

நேரடியாக விற்பனை

இதேபோல் மே 1 முதல் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற வேண்டும் என்றால் அரசை நாடவேண்டியது இல்லை, தனியார் மருத்துவமனைகள் நேரடியாகச் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் பேசி பெற வேண்டும்.

 விலையை உயர்த்திய சீரம்

விலையை உயர்த்திய சீரம்

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வேக்சின்-ஐ, தற்போது தனியார் நிறுவனத்திற்கு 600 ரூபாய்க்கும், அரசு நடத்தும் மருத்துவமனைகளுக்கு 400 ரூபாய்க்கும் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

 இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா

இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா

இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்தை அளிக்க முயற்சி செய்து வருகிறது.

 எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகம்

எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகம்

இன்போசிஸ் முதல் முறையாகப் பெங்களூரில் இருக்கும் தனது எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகத்தில் வேக்சின் கேம்ப் நடத்தியுள்ளது. மேலும் இன்போசிஸ் இந்தியாவில் சுமார் 130 மருத்துவமனைகளுடன் கூட்டணி வைத்து தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கும் தடுப்பு மருந்தை அளித்து வருகிறது.

 டாப் 5 ஐடி நிறுவனங்கள்

டாப் 5 ஐடி நிறுவனங்கள்

மேலும் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களில் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை வேக்சின் கொண்டு காப்பாற்றுவதன் மூலம் பெரும் தொற்றைப் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys, Wipro, Tech Mahindra etCovid-19 vaccination camps for employees

Infosys, Wipro, Tech Mahindra start Covid-19 vaccination camps for employees
Story first published: Wednesday, April 21, 2021, 20:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X