தடுப்பூசி போட்டுக் கொண்டால் ரூ.18,600.. இன்டெல் கொடுத்த செம ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ள இன்டெல் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால், அவர்களுக்கு 250 டாலர்கள் (சுமார் 18,000 ரூபாய்) ஊக்கத் தொகையாக கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கமானது மிக மோசமான அளவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இருந்து வந்தது. எனினும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றது.

தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது, எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இந்திய நிறுவனங்கள், இந்திய ஊழியர்களின் நிலை என்ன..?!

அனைவருக்கும் தடுப்பூசி

அனைவருக்கும் தடுப்பூசி

இதனை தடுக்க ஒரே வழி அனைவருக்கும் தடுப்பூசி என்பது தான். ஆக முடிந்த அளவில் எந்தளவுக்கு வேகமாக அனைவருக்கும் தடுப்பூசி என்பது போடப்படுகிறதோ அந்தளவுக்கு தடுக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால் பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, தொடர்ந்து பல அறிவிப்புகளை கொடுத்து வருகின்றன.

ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு

ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு

சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ், ஊக்கத் தொகை என வழங்கி வருகின்றன. சில நிறுவனங்கள் சமீபத்தில் கார் பரிசு கொடுப்பதாக கூற அறிவித்தது நினைவில் கொள்ளதக்கது. இப்படி நிறுவனங்கள் பலவாறாக அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றன. இது மேற்கொண்டு மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இன்டெல்லின் சூப்பர் அறிவிப்பு
 

இன்டெல்லின் சூப்பர் அறிவிப்பு

அந்த வகையில் தற்போது இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Pat Gelsinger, சில தினங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில் டிசம்பர் 2021க்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டெல்லின் இந்த அறிவிப்பானது அதன் ஊழியர்களை விரைந்து தடுப்பூசி போட வழிவகுக்கும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் ஊழியர்கள்

இந்தியாவில் ஊழியர்கள்

இன்டெல்லில் தற்போது 1,10,000 ஊழியர்கள் தற்போது உலகளவில் உள்ளனர். இதில் இந்தியாவிலும் ஊழியர்கள் உள்ளனர். இன்டெல்லின் அலுவலகம் இந்தியாவில் பெங்களூரில் 4 இடங்களிலும், ஹைத்ராபாத்தில் ஒரு இடத்திலும் உள்ளது. இந்தியாவில் மொத்தம் எத்தனை ஊழியர்கள் உள்ளனர் என நிறுவனம் அறிவிக்காவிட்டாலும், சுமார் 7,000 பேர் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

இன்டெல் தற்போதைக்கு தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்காவிட்டாலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்கிறது. ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டோரை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நிறுவனம் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும், இந்தியாவில் சுமார் 18,600 ரூபாய் வரையில் ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது.

$100 மதிப்பிலான வவுச்சர்

$100 மதிப்பிலான வவுச்சர்

இதே தங்களது hourly employees-களுக்கு 100 டாலர்கள் மதிப்புள்ள வவுச்சர்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது ஊழியர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும். இதன் மூலம் தடுப்பூசி போடுவோரின் விகிதங்களை அதிகரிக்க முடியும். இதன் மூலம் மூன்றாம் அலையை கட்டுபடுத்த நிறுவனங்கள் முயன்று வருவது மிக நல்ல விஷயமே.

அமேசான் அறிவிப்பு

அமேசான் அறிவிப்பு

சமீபத்தில் அமேசான் நிறுவனம் அதன் முன்னிலை ஊழியர்களுக்கு ஒரு பிரம்மாண்ட அறிவிப்பினைக் கொடுத்தது. அதில் ஊழியர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்கும் விதமாக லாட்டரி முறையில் பரிசினை அறிவித்தது. அதில் ஏறக்குறைய 2 மில்லியன் டாலர் மதிப்புடைய 18 பரிசுகளை அறிவித்தது.

பாதுகாப்பும் அதிகரிக்கும்

பாதுகாப்பும் அதிகரிக்கும்

இந்த போட்டியில் இரண்டு 5,00,000 டாலர்களும், ஆறு பேருக்கு 1,00,000 டாலர்களும், புதிய வாகனங்கள், 5 விடுமுறை பேக்கேஜ்கள் என பலவும் அடங்கும் என கூறியது. தற்போது அமெரிக்காவில் உருமாற்றம் அடைந்து பரவி வரும் டெல்டா வகையான கொரோனாவின் காரணமாக, இந்த அறிவிப்பு ஊழியர்களை ஊக்குவிக்கும் என்பதோடு, ஊழியர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கும் என நம்புகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: intel இன்டெல்
English summary

Intel inc offer Rs.18,600 to its employees globally, including Indian employees to get vaccinated

Intel inc offer around Rs.18,600 to its employees in globally, including Indian employees to get vaccinated.
Story first published: Friday, August 20, 2021, 14:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X