இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகளுக்கும், வர்த்தகத்திற்கும் அதிகப்படியான கட்டுப்பாடுகள், வரி விதிப்புகள் இருக்கும் காரணத்தால் கிரிப்டோ முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் உலகின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால் பல வர்த்தகத் தளங்கள் திவாலாகியுள்ளது.

கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் FTX
சமீபத்தில் உலகின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமான FTX திவாலாக அறிவித்தது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் சொந்த கிரிப்டோ-வும் மதிப்பை மொத்தமாக இழந்து செல்லா நாணயமாக மாறிய நிலையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பணத்தை இழந்தனர்.

மார்க் மொபியஸ்
இந்த நிலையில் மார்க் மொபியஸ் முக்கியமான தகவலை கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறந்து ஜெர்மனி நாட்டின் எமர்ஜிங் மார்கெட்ஸ் பன்ட் மேனேஜராக இருப்பவர் Mark Mobius. அமெரிக்காவின் MIT கல்லூரியில் பொருளாதாரத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றவர்.

டெம்பிள்டன் எமர்ஜிங் மார்கெட்ஸ்
டெம்பிள்டன் எமர்ஜிங் மார்கெட்ஸ் குரூப்-ன் தலைவராக இருந்து 18 சர்வதேச சந்தையில் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை நிர்வாகம் செய்தவர். 2018ல் மார்க் மொபியஸ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மொபிஸ் கேப்பிடல் பார்னர்ஸ் எனச் சொந்த நிறுவனத்தை உருவாக்கி தற்போது பல துறையில், பல சந்தைகளில் முதலீடு செய்து வருகிறார்.

கிரிப்டோ
இந்த நிலையில் கிரிப்டோ குறித்து இவருடைய கருத்து பல பெரும் முதலீட்டாளர்களையும் கலங்கடித்துள்ளது என்றால் மிகையில்லை. அப்படி என்ன சொன்னார்..? வாங்க பார்ப்போம்.

பிட்காயின்
கிரிப்டோகரன்சி நீண்ட காலக் குளிர்காலத்திற்குள் நுழைந்துள்ளது. இதில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினமாக இருக்கும் பட்சத்தில் பிட்காயின் 10000 டாலருக்குக் கீழ் சரிய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனப் பில்லியனர் முதலீட்டாளரான மார்க் மொபியஸ் தெரிவித்துள்ளார்.

FTX திவால் பிரச்சனை
மேலும் அவர் கிரிப்டோ சந்தையும், முதலீட்டாளர்களும் இன்னும் FTX திவால் பிரச்சனையில் இருந்து வெளிவராத நிலையில் அதிகளவிலான தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. FTX வீழ்ச்சிக்கு பின்பு பிட்காயின் 21 சதவீதமும், 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 66 சதவீதம் சரிந்துள்ளது.

பிட்காயின் 10000 டாலர்
இந்த நிலையில் மார்க் மொபியஸ் சொன்னபடி பிட்காயின் 10000 டாலர் வரையில் சரியும் என்பது நினைவாகும் பட்சத்தில் தற்போதைய நிலையில் இருந்து 40 சதவீதம் சரிய வேண்டும், அதாவது பிட்காயின் தொடர்ந்து சரியும் என்பதில் உறுதியாக உள்ளார்.

நீண்ட காலப் பிரச்சனை
மேலும் மார்க் மொபியஸ் கிரிப்டோகரன்சி நீண்ட காலப் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், பிட்காயின் அல்லது பிற கிரிப்டோகரன்சியை வைத்திருப்பதும் சரி, முதலீடு செய்வதும் சரி மிகவும் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.

டாப் 20 கிரிப்டோகரன்சி
- பிட்காயின் - 16,478.5700 டாலர்
- எதிரியம் - 1,207.2400 டாலர்
- டெதர் - 0.9997 டாலர்
- பிஎன்பி - 302.0800 டாலர்
- USD Coin - 1.00 டாலர்
- பைனான்ஸ் USD - 1.00 டாலர்
- ரிப்பிள் - 0.3938 டாலர்
- டோஜ்காயின் - 0.1028 டாலர்
- கார்டானோ - 0.3116 டாலர்
- பாலிகான் - 0.8410 டாலர்
- போல்கடோட் - 5.2800 டாலர்
- டேய் - 1.00 டாலர்
- லைட்காயின் - 76.4900 டாலர்
- ஷிபா இனு - 0.0000 டாலர்
- சோலானா - 13.6900 டாலர்
- டிரான் - 0.0538 டாலர்
- யூனிஸ்வாப் - 5.4500 டாலர்
- UNUS SED LEO - 4.0800 டாலர்
- செயின்லிங்க் - 7.4400 டாலர்
- அவலான்சி - 12.5000 டாலர்