வங்கி டெபாசிட்-ஆக மாறிய மியூச்சுவல் பண்ட் முதலீடுகள்: கொரோனா எதிரொலி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் முன்னணி மியூச்சுவல் பண்ட் சேவை நிறுவனங்களில் ஒன்றான பிராங்கிளின் நிறுவனம் அதிக லாபம் தரும் பல கடன் திட்டங்களை மூடியுள்ள நிலையில், மியூச்சவல் பண்ட் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நாட்டின் முன்னணி முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது முதலீட்டைக் காப்பாற்றிக்கொள்ள மியூச்சவல் பண்ட் மற்றும் கடன் சந்தையில் இருக்கும் முதலீடுகளை வங்கி டெப்பாசிட் திட்டத்திற்கு மாற்றி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில் வங்கி வைப்பு நிதிகள் தான் முதலீட்டாளர்களின் பிரதான முதலீட்டுத் தளமாக அமைந்துள்ளது.

மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால்.. இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்.. ரகுராம் ராஜன்!

வங்கி டெப்பாசிட்
 

வங்கி டெப்பாசிட்

பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சவல் பண்ட் நிறுவனம் கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 6 கிரெடிட் திட்டங்களை முடக்கிய செய்தி வெளியான பின்பு அதிகளவிலான முதலீடுகள் வங்கி வைப்பு நிதிக்கு வருவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பின் காரணமாகத் தற்போது இந்திய பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

4 பில்லியன் டாலர்

4 பில்லியன் டாலர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் முதலீட்டுக்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கும் காரணத்தாலும், பணப்புழக்கத்திற்கான வழிகளும் இல்லாத நிலையில் தான் பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சவல் பண்ட் நிறுவனம் 6 கிரெடிட் திட்டங்களை முடக்கியது.

இந்நிறுவனம் சுமார் 28,000 கோடி ரூபாய் அதாவது 4 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் பெரும் பகுதி higher-yielding, lower-rated கடன் திட்டங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேற்ற

வெளியேற்ற

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக முதலீட்டாளர்கள் அனைவரும் மியூச்சவல் பண்ட் திட்டத்தில் இருக்கும் முதலீடுகளை மொத்தமாக வெளியே எடுத்துக் குறைந்த லாபமாக இருந்தாலும் சரி எனப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்து வருகின்றனர்.

வட்டி விகிதம்
 

வட்டி விகிதம்

வங்கிகளில் தற்போது அதிகளவிலான நிதி இருக்கும் காரணத்தாலும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து வருவதாலும், வைப்பு நிதிக்கான வட்டி வட்டி விகிதம் பிப்ரவரி-யில் இருந்து இன்று வரையில் 0.45 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

ஆயினும் ஏப்ரல் 10 வரையிலான 2 வார காலத்தில் மட்டும் வங்கி வைப்பு நிதியில் 9.45 சதவீத அதிகப் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு முந்தை வாரம் 7.93 சதவீத அதிகரித்து இருந்தது.

மார்ச் மாதம்

மார்ச் மாதம்

கடன் சந்தை தொடர்புடைய மியூச்சுவல் பண்டு முதலீடுகள் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமார் 1.95 லட்சம் கோடி ரூபாய் அளவில் வெளியேறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investors switch to bank deposits as concerns grow over debt fund

Rattled by the shock closure of some high-profile domestic funds investing in high-yielding debt, investors are quickly moving their cash into the safety of bank. Bankers sais that they have seen heavy inflows into their traditional deposit schemes after Franklin Templeton Mutual Fund, said last week it was shutting down six credit funds.
Story first published: Thursday, April 30, 2020, 13:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more