ஒவ்வொரு ஆண்டும் இந்திய மக்களின் திருவிழாவாக மாறி வரும் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் ஆரம்பம் முதல் பிரச்சனைகளை மட்டுமே சந்தித்து வருகிறது. முதலில் ஐபிஎல் போட்டிகள் துவங்குவதை ஒத்திவைக்கப்பட்டது, தற்போது மக்கள் யாரும் இல்லாமல் போட்டிகள் நடத்தத் திட்டமிட்டு வரப்படுகிறது.
இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல விளையாட்டு வீரர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் உள்ளது, ரசிகர்கள் இல்லாமல் காலி கிரவுண்டில் போட்டிகள் இதுவரை நடைபெற்றது இல்லை அதுவும் ஆராவாரம் மிகுந்த ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று.
இந்தப் பிரச்சனை ஒருபக்கம் இருக்க ஐபிஎல் போட்டிகளில் விளம்பர செய்வதற்காகவே பல நிறுவனங்கள் முன்கூட்டியே முதலீடு செய்து காத்திகிடக்கும் இந்த நேரத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்புக் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கும் தாண்டி விளம்பரதாரர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட்டால் சுமாப் 1200 கோடி ரூபாய் மதிப்பிலான விளம்பர ஒப்பந்தங்கள் வரவேற்பு இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்படும்.

கொரோனா
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வேகமாகப் பரவி வரும் காரணத்தால் மக்கள் உச்சக்கட்ட பயத்தில் உள்ளனர். சொல்லப்போனால் மக்கள் வெளியில் செல்ல கூடப் பயந்து வீட்டிலேயே இருக்கின்றனர். இதற்கு ஏற்றார் போல் அரசு நிறுவனங்கள் உட்படத் தனியார் நிறுவனங்கள் வரையில் அனைத்தும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற Work From Home சலுகை கொடுத்துள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடும் ஐபிஎல் போட்டியை எப்படி நடத்துவது..? என்பதால் தான் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடந்த திட்டமிட்டு வருகிறது ஐபிஎல் நிர்வாகம்.

1200 கோடி ரூபாய் வர்த்தகம்
ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவால் 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஆன்-கிரவுண்ட் ஸ்பான்சர்ஷிப், 500 கோடி ரூபாய் மதிப்பிலான டீம் ஸ்பான்சர்ஷிப் கடுமையான பாதிப்பை எட்டியுள்ளது.
மக்கள் யாரும் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் காரணத்தால் விளம்பரதாரர்கள் விளம்பர ஒப்பந்தத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட உள்ளது.

ஒத்திவைப்பு
மார்ச் 29 முதல் மே 24 வரையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிட்டு பல நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து தங்களது சேவை அல்லது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் 15 வரையில் போட்டிகளை ஒத்திவைத்துள்ளது.

முக்கிய நிறுவனங்கள்
இந்த ஐபிஎல் போட்டிக்கு கோகோ கோலா, விவோ, அமேசான், போன்பே ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளது. இந்த 4 நிறுவனங்களும் ஆன்-கிரவுண்ட் ஸ்பான்சர்ஷிப் மற்றும் டீம் ஸ்பான்சர்ஷிப் திட்டத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவோ
இந்த ஐபிஎல் லீக் தொடரின் டைடில் ஸ்பானசர்-க்கு சுமார் 2,199 கோடி ரூபாயை விவோ முதலீடு செய்துள்ளது, இது மொத்தமாக 5 வருடத்திற்கு. ஆன்-கிரவுண்ட் ஸ்பான்சர்ஷிப்-காக டாடா மோட்டார்ஸ், FBB மற்றும் ட்ரீம் 11 ஆகிய நிறுவனங்கள் ஒரு சீசனுக்கு 40 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்துள்ளது. Umpire partner-க்காகப் பேடிஎம் 28 கோடி ரூபாயும், strategic time-out பார்ட்னர்-க்காகச் சியாட் 23 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளது.
இப்படிப் பல நிறுவனங்கள் பல கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்து காத்துக்கிடக்கிறது.