இப்பவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்! ஆனால் ஏப் 15க்கு பிந்தைய ரயில்களுக்குத் தான் கிடைக்கும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸால், ஒட்டு மொத்த உலகமும் இயங்காமல் ஸ்தம்பித்து இருக்கிறது.

இதில் இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் போக்குவரத்து துறையான இந்திய ரயில்வேஸும் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை தன் சேவையை நிறுத்திக் கொண்டது.

மீண்டும் ரயில் டிக்கெட் முன் பதிவு குறித்து சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள், அது உண்மை தானா..? ரயில்வே என்ன சொல்கிறது என விரிவாகப் பார்ப்போம்.

FD வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு! எஸ்பிஐ விட இந்த வங்கிகளில் அதிக வட்டி தருகிறார்கள்!FD வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு! எஸ்பிஐ விட இந்த வங்கிகளில் அதிக வட்டி தருகிறார்கள்!

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

இந்தியா முழுக்க லாக் டவுன் காலம் முடிந்த பின், ரயில்வே சேவைகள் ஏப்ரல் 14-க்குப் பின், வழக்கம் போல் இயங்கத் தொடங்கும். எனவே, ரயில்வே நிர்வாகம், ஏப்ரல் 15 முதல் மீண்டும் முன் பதிவைத் தொடங்கும் எனச் செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டு இருக்கின்றன.

அலர்ட்

அலர்ட்

ஆனால் உண்மை அது அல்ல. ஐ ஆர் சி டி சி புக்கிங் வலைதளத்தில் நுழைந்த உடனேயே "கோவிட்-19 அலர்ட்" என ஒரு பாப் அப் வருகிறது. "கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக, மார்ச் 22 - ஏப் 14 வரையான தேதிகளில் ஓடும் எல்லா ரயில்களுக்கும் முன் பதிவுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது" என தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த அறிவிப்பை மேலே படத்தில் பார்க்கலாம்.

ரீஃபண்ட்

ரீஃபண்ட்

அதோடு, இந்த மார்ச் 22 - ஏப்ரல் 14 வரை, இந்திய ரயில்வே ரத்து செய்து இருக்கும் ரயில்களில் முன் பதிவு செய்து இருப்பவர்களுக்கு முழு தொகை ரீஃபண்ட் வழங்கப்படும். பயனர்கள், டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஏப் 14க்கு முன் முயற்சி

ஏப் 14க்கு முன் முயற்சி

அதையும் மீறி ஏப்ரல் 14, 2020 தேதிக்குள் எந்த தேதியில், ரயிலில் டிக்கெட்டை முன் பதிவு செய்ய முயன்றாலும் "கோவிட்-19 காரணமாக 22 மார்ச் 2020 - 14 ஏப்ரல் 2020 வரையான ரயில்களுக்கு முன் பதிவு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது" என மீண்டும் தெளிவாக எச்சரிக்கிறது.

இப்போதே செய்யலாம்

இப்போதே செய்யலாம்

ஆனால், ஏப்ரல் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட தேதிகளில், நாம் ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால், இன்றே புக் செய்யலாம். அதாவது ஏப்ரல் 15-ம் தேதி, ரயிலில் பயணம் செய்ய, இன்றே முன் பதிவு செய்யலாம். அதை ஐ ஆர் சி டி சி அனுமதிக்கிறது.

உதாரணம்

உதாரணம்

இதை சோதித்துப் பார்க்க பெங்களூரில் இருந்து சென்னைக்கு வர, காலை 6 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் சதாப்தி 12028 ரயிலில் ஒரு ஏசி சேர் கார் டிக்கெட்டை புக் செய்து பார்த்தோம். வழக்கம் போலவே சரளமாக புக் செய்ய முடிகிறது. எனவே, ஐஆர்சிடிசியில் புக்கிங் சேவை, இப்போதும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது உறுதியாகிறது.

தவறான தகவல்

தவறான தகவல்

ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கும், ரயில் புக்கிங் சேவை மீண்டும் தொடங்கப்படுவதையும் தெளிவாக புரிந்து கொள்ளாமல் யாரோ ஒருவர் சொன்ன செய்தி, காட்டுத் தீயாக பரவிக் கொண்டு இருக்கிறது. மக்கள் இதை நம்ப வேண்டும். ஏப்ரல் 15-ல் இருந்து, ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள், இப்போதே கூட ரயில் டிக்கெட் புக் செய்யலாம்.

ரயில்வே தரப்பு

ரயில்வே தரப்பு

"சில மீடியாக்களில், ரயில்வே வரும் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் புக்கிங் சேவையை மீண்டும் தொடங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகிறது. இது தவறு. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்களை புக் செய்யலாம். எனவே ஏப்ரல் 15, 2020 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிகள் ரயில் டிக்கெட்களை லாக் டவுன் காலத்துக்கு முன்பில் இருந்தே புக் செய்ய முடியும்" என இந்திய ரயில்வே தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார்கள். . ட்விட்டைக் காண க்ளிக் செய்யவும்:

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRCTC Booking: Book train tickets right now for April 15 and further dates

You can book IRCTC train tickets right now, but you can book only for April 15 and further dates only.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X