ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே.
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தலாம் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என்பது குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பணமே செலுத்தாமல் முன்பதிவு செய்யும் திட்டத்தை விரைவில் ஐஆர்சிடிசி அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Buy Now Pay Later
பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் தற்போது தேவையான பொருளை வாங்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து பணத்தை கட்டிக் கொள்ளலாம் என்ற 'Buy Now Pay Later' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த திட்டத்தின்படி நாம் தேவையான பொருளை வாங்கிக்கொண்டு ஒரு மாதம் கழித்து அதற்குரிய பணத்தை கட்டிக்கொள்ளலாம் என்றும் அதற்கு எந்தவிதமான கூடுதல் கட்டணம் விதிப்பது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Travel Now Pay Later
அதேபோல் ஐஆர்சிடிசி தற்போது கேஷ்-இ என்ற நிறுவனத்துடன் இணைந்து 'Travel Now Pay Later' என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. Travel Now Pay Later என்ற திட்டத்தின் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்து அதன்பின் ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அதற்கான பணத்தை கட்டிக்கொள்ளலாம்.
கேஷ்-இ நிறுவனம்
நாம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது கேஷ்-இ நிறுவனம் நமக்காக நமது டிக்கெட்டுக்கு உரிய பணத்தை செலுத்தி விடும். அதன் பின்னர் நம்மிடம் அந்நிறுவனம் எந்த விதமான கூடுதல் கட்டணம் இன்றி ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வசூல் செய்து கொள்ளும்.
இ.எம்.ஐ வசதி
அதுமட்டுமின்றி நமது ரயில் டிக்கெட் கட்டணத்தை தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் இ.எம்.ஐ வசதியையும் கேஷ்-இ நிறுவனம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15 லட்சம் டிக்கெட்டுக்கள்
ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் தினமும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய வசதி பயணிகளுக்கு மேலும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications