ஆமதாபாத் - மும்பை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஆமதாபாத்தில் இருந்த மும்பைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மும்பைக்கு வந்து சேர்ந்தது.
ஆமதாபாத் - மும்பை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 630 பயணிகளுக்கு தலா 100 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக இந்தியா ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

ஆமதாபாத்தில் புதங்கிழமையன்று காலை 6.42 மணிக்கு அந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த நிலையில் புதன் கிழமை மதியம் 1.10 மணிக்கு அந்த ரயில் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மதியம் 2.36 மணிக்குத்தான் அந்த ரயில் மும்பை வந்து சேர்ந்தது.
ஏனெனில் அந்த ரயில் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பயந்தர் மற்றும் தஹிசார் நிலையங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தேஜஷ் ரயில் மற்றும் புற நகர் மற்றும் வெளி ரயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. மும்பையின் புறநகர் பகுதிகளில் உள்ள பயந்தர் மற்றும் தஹிசார் நிலையங்களுக்கு இடையிலான தொழில் நுட்ப சிக்கல் காரணமாக பிற்பகல் 3.30 மணி வரை குறைந்தது எட்டு புற நகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வர முடியாமல் தாமதம் ஏற்பட்டது.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்து சேர்ந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கொள்கை வரையறை செய்யப்பட்டுள்ளது. ரயில் 1 மணி நேரம் தாமதமானால் தலா ரூ.100 இழப்பீடும், 2 மணி நேரம் தாமதமானால் தலா ரூ.200 இழப்பீடும் கொடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேஜஷ் ரயில் 1 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால், ஒவ்வொரு பயணிக்கும் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications