ஐஆர்சிடிசி-யின் ஷிவ் சாணி சாய் யாத்ரா பேக்கேஜ்.. கட்டணம் எவ்வளவு.. மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி, பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக நீண்டதூரம் செல்ல வேண்டிய ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செயல்படுத்தி வருகின்றது.

கொரோனாவிற்கு பிறகு மீண்டும் செயல்படுத்த தொடங்கியுள்ள இந்த சுற்றுலா சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினையும் பெற்றுள்ளது.

இதற்கிடையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஐஆர்சிடிசி இது குறித்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் ஆன்மீக பயணிகளுக்கு முக்கிய பாரம்பரிய ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஒரு வாய்ப்பாக அமையலாம்.

யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி! யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஷிவ் ஷனி சாய் யாத்ரா

ஷிவ் ஷனி சாய் யாத்ரா

இது குறித்த ட்விட்டரில் ஐஆர்சிடிசி-யின் 5D/4N டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான பேக்கேஜ் கட்டணம் 18,500 ரூபாயாகும்.

 

இது குறித்த அதிகாரப்பூர்வ இணைதளத்தின் படி, இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள முக்கிய மத மற்றும் பாரம்பரிய சுற்றுலா தளங்களை உள்ளடக்கியது. இதில் ஏசி III அடுக்கு வகுப்பில் பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலில், ஷிவ் ஷனி சாய் யாத்ரா என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

முக்கிய  அம்சம்

முக்கிய அம்சம்

இந்த திட்டத்தில் இரண்டு முக்கிய ஆன்மீக தளங்களான நாசிக்கில் உள்ள ஜோதிர்லிங்கங்கம் மற்றும் அவுரங்காபாத்தில் உள்ள கிரிஷ்னேஸ்வர்,ஷீரடி சாய் & ஷானி கோவில் மற்றும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான எல்லோரா குகைகளை 5 நாட்களில் காணலாம் என தெரிவித்துள்ளது.

கவனிக்க வேண்டியது என்ன?

கவனிக்க வேண்டியது என்ன?

சுற்றுலா திட்டத்தின் பெயர் - ஷிவ் ஷனி சாய் யாத்ரா

காலம் - 5D/4N நாட்கள்

சுற்றுபயணம் - 17.10.2022

பயணத்திட்டம் - டெல்லி - ஷீரடி - ஷானி சிக்னாபூர் - கிரிஷ்னேஷ்வர் - எல்லோரா குகைகள் - திரிம்பகேஷ்வர் - டெல்லி

இருக்கைகள் எண்ணிக்கை - 600

 

பாரத் கெளரவ் திட்டம்

பாரத் கெளரவ் திட்டம்

இந்திய ரயில்வே கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள வரலாற்றுத் தலங்களை இணைக்கும் விதமாக, பாரத் கௌரவ் ரயில்களை அறிமுகப்படுத்தியது. இதில் பல்வேறு வசதிகளுடன் கூடிய சேவையை அளித்து வருகின்றது. இதில் அவசர காலங்களில் உதவுவதற்காக மருத்துவர், ரயில்வே காவலர் என பல வசதிகளுடன் இந்த சிறப்பு ரயில்கள் இயங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRCTC shared shiv shani sai yatra train packages: How much is the charges? What are the other key

IRCTC shared shiv shani sai yatra train packages: How much is the charges? What are the other key details?/ஐஆர்சிடிசி-யின் ஷிவ் சாணி சாய் யாத்ரா பேக்கேஜ்.. கட்டணம் எவ்வளவு.. மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள்?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X