இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தாலும், சர்வதேச சந்தையும் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்காத காரணத்தால் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாமல் தங்கம், கச்சா எண்ணெய் மற்றும் நாணய சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த மோசமான சூழ்நிலையிலும் சில முக்கியப் பங்குகள் அதிரடியான வளர்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்களைப் பண மழையில் கொண்டாட வைத்துள்ளது.
ஆம், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஐஆர்சிடிசி நிறுவனம் கடந்த 4 மாதத்தில் மட்டும் சுமார் 500 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முதலீட்டாளர்களின் நம்பிக்கை
இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களத்தில் இறங்கிய ஐஆர்சிடிசி நிறுவனம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு லாபத்தையும் வளர்ச்சியையும் கொடுத்துள்ளது இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு.
320 ரூபாய்
2019ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தையில் ஐஆர்சிடிசி நிறுவனம் ஒரு பங்கின் விலை 320 ரூபாய் என்ற விலைக்கு ஐபிஓ சந்தையில் முதலீட்டாளர்களுக்குத் தனது பங்குகளை விற்பனை செய்தது. முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்ற காரணத்தால் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது சுமார் 101.25 சதவீத வளர்ச்சியில் 644 ரூபாய் என்ற விலைக்குப் பட்டியலிடப்பட்டது.
52 வார வளர்ச்சி
அதன் பின்பு படிப்படியான வளர்ச்சி என இந்நிறுவனத்தின் பங்கு விலை மளமளவென உயர்ந்து கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவன பங்குகள் சுமார் 1976 ரூபாய் என்ற 52 வார உயர்வை எட்டியது. இது கிட்டதட்ட 500 சதவீத வளர்ச்சி.
500 சதவீத வளர்ச்சி
அதாவது ஐஆர்சிடிசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்டபோது இப்பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் சுமார் 500 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 4 மாதங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் இப்போது 5 லட்சம் ரூபாய்க் கிடைத்திருக்கும்.
இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் நீங்களாக இருந்தால் கமெண்ட் பதிவு செய்யுங்கள்.
லாபம், வருவாய், விற்பனை
ஐஆர்சிடிசி நிறுவனம் கடந்த வரும் வெறும் 73.60 ரூபாய் லாபம் பெற்று இருந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் 205.80 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. இது கிட்டதட்ட 179.6 சதவீத வளர்ச்சி.
இதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் 310.16 சதவீதம் வளர்ச்சி அடைந்து 226.90 கோடி ரூபாய் பெற்றுள்ளது, இதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை 64.6 சதவீதம் வளர்ச்சி அடைந்து 715.98 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications