பட்ஜெட் 2023: இது மட்டும் நடத்துவிட்டல் வேற லெவல்..! #Logistics

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறை கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது மறக்க முடியாது. தொற்றுநோய்க்குப் பாதிப்பு குறைந்த பின்பு நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் வளர்ச்சியின் மூலம் இத்துறை பெரிய அளவில் மீண்டது.

ஆனால் தற்போது மீண்டும் இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறை புதிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டு உள்ளதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே விலைவாசி உயர்வு மக்களைப் பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில், தற்போது போக்குவரத்துத் துறையில் உருவாகியுள்ள பிரச்சனை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

Budget 2023: இந்திய பங்கு சந்தையை ஊக்குவிக்க அறிவிப்புகள் வருமா? Budget 2023: இந்திய பங்கு சந்தையை ஊக்குவிக்க அறிவிப்புகள் வருமா?

லாஜிஸ்டிக்ஸ் துறை

லாஜிஸ்டிக்ஸ் துறை

இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு டிரக் டிரைவர்கள், ஃபோர்க்லிஃப்ட் ஆப்ரேட்டர்கள், கிடங்குகளுக்கான மனிதவளம் மற்றும் பல முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட்

பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட்

இந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நேரத்தில் நாட்டின் வர்த்தகத்தின் முதுகெலும்பாக இருக்கும் லாஜிஸ்டிக்ஸ் துறையைப் பாதிக்கும் விஷயங்களைச் சரிசெய்ய முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கான முடிவை மத்திய நிதியமைச்சகம் தான் எடுக்க வேண்டும்.

வேலைவாய்ப்பின்மை
 

வேலைவாய்ப்பின்மை

இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையைச் சரி செய்யவும் லாஜிஸ்டிக்ஸ் துறை முக்கியக் கருவியாக உள்ளது. இந்தியாவில் உற்பத்தித் துறை பெரிய அளவில் மேம்படுத்தி வரும் நிலையில் உள்நாட்டுப் போக்குவரத்து முதல் வெளிநாட்டுக்கான ஏற்றுமதி கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

இந்த நிலையில் லாஜிஸ்டிக்ஸ் துறைக்குத் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டால், வேலைவாய்ப்பு முதல் ஏற்றுமதி வரையில் பெரும் மாற்றத்தை இந்தியா முழுவதும் பார்க்க முடியும்.

டெலிவரி துறை

டெலிவரி துறை

இந்திய பொருளாதாரத்தில் சக்கரமாக இருக்கும் போக்குவரத்துத் துறையில் தற்போது டெலிவரிக்கான ஓட்டுனர்கள் பற்றாக்குறையை அதிகமாக இருப்பதாக iThink Logistics நிறுவனத்தின் இணை நிறுவனர் Zaiba Sarang கூறியுள்ளார்.

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் போக்குவரத்துக்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கும் வேளையில் ஓட்டுநர்கள் அதிகமாக இல்லாதது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் தவித்தன, இதன் விளைவாக வாடிக்கையாளர்களுக்குச் சரியான சேவை அளிக்க முடியாமல் தவித்துள்ளது.

ஒழுங்கமைக்கப்படாத துறை

ஒழுங்கமைக்கப்படாத துறை

இந்தியாவிலேயே லாஜிஸ்டிக்ஸ் தான் மிகவும் ஒழுங்கமைக்கப்படாத மற்றும் துண்டு துண்டான இயக்கி வரும் துறையாகும். போக்குவரத்து துறையின் செயல்பாடுகளை மிகவும் திறம்பட மற்றும் மேம்படுத்தப்பட்ட தளமாக மாற்றுவதற்கு இத்துறை முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும் என iThink Logistics நிறுவனத்தின் இணை நிறுவனர் சரங் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி


பிப்ரவரி 1 ஆம் தேதி மோடி அரசு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்-ஐ தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டுப் பிப்ரவரி 1 ஆம் தேதி மோடி அரசு இடைக்காலப் பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும்.

பட்ஜெட் எதிர்பார்ப்பு

பட்ஜெட் எதிர்பார்ப்பு

இதனால் இந்தப் பட்ஜெட் அறிவிப்புகள் தனிநபர்களுக்குச் சாதகமாக இருக்கும் என அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும் வேளையில் இந்தப் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைத்து தரப்புக்கும் உள்ளது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிப்பதற்கான பணிகளை டிசம்பர் மாதமே துவங்கிவிட்ட நிலையில், சமீபத்தில் அவர் கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டத்தைப் போல இந்தப் பட்ஜெட்டும் அதே உத்வேகத்துடன் இருக்கும் எனத் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is modi govt ready to change; logistics sector needs major attention in budget 2023

Is modi govt ready to change; logistics sector needs major attention in budget 2023
Story first published: Friday, January 13, 2023, 21:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X