ஐடி நிறுவனங்களின் முக்கிய முடிவு.. ஊழியர்களுக்கு பலன் அளிக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் முன்னணி சாப்டேவேர் நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக் மற்றும் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள், சர்வதேச மந்த நிலையின் தாக்கத்தினை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதனால் ஏற்கனவே செலவு குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் பணியமர்த்தல் தொடங்கி பல்வேறு மறுசீரமைப்பு திட்டங்களை கையில் எடுத்துள்ளன.

தற்போது பணவீக்கம் என்பது மிகப்பெரிய பிரச்சனையான முன்னணி சந்தைகளில் உருவெடுத்து வரும் நிலையில், அவர்களின் செலவினங்களும் குறைந்துள்ளன.

இந்தியாவின் முக்கிய ஆலையை விற்பனை செய்யும் ஜான்சன் & ஜான்சன்.. என்ன காரணம்? இந்தியாவின் முக்கிய ஆலையை விற்பனை செய்யும் ஜான்சன் & ஜான்சன்.. என்ன காரணம்?

மார்ஜின் பாதிக்கலாம்

மார்ஜின் பாதிக்கலாம்

இது முன்னணி ஐடி நிறுவனங்களின் செலவினங்களையும் குறைக்க வழிவகுத்துள்ளது. இத்துறை சார்ந்த நிபுணர்கள் ஐடி நிறுவனங்கள் தற்போது மாற்று வழியினை தேட ஆரம்பித்துள்ளன. நிறுவனங்களின் செயல்பாட்டு மார்ஜின் வரும் காலாண்டுகளில் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய சந்தைகள்

முக்கிய சந்தைகள்

இது நிறுவனங்களை புதிய துறைகளில், புதிய சந்தைகளில் நுழைய வழிவகுக்கலாம்.

டிசிஎஸ் நிலையான கரன்சி காரணமாக முந்தைய ஆண்டினை காட்டிலும் 15.45% வளர்ச்சியினை எட்டியது. இந்தியா, ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் அதன் 55,309 கோடி ரூபாய் வருவாயில், 15% முக்கிய பங்கு வகித்தன. இதில் இந்தியா 5.1% பங்கை மட்டுமே கொண்டுள்ளது.

வருவாய் சரியலாம்

வருவாய் சரியலாம்

டிசிஎஸ்-ன் ஒட்டுமொத்த வருவாயில் இந்தியா ஓரளவு வருவாய் கொண்டிருந்தாலும், ஐரோப்பிய(இங்கிலாந்து உட்பட) நாடுகளில் 16.7% அதிகரிப்புடன் வருவாய் விகிதம் முக்கிய பங்கினை வகித்தது. ஆக தற்போது ஐரோப்பிய நாடுகள் மோசமான பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதனால் இதன் தாக்கம் வருவாயில் எதிரொலிக்கலாம்.

இன்ஃபோசிஸ்-ன் நிலைப்பாடு

இன்ஃபோசிஸ்-ன் நிலைப்பாடு

இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செப்டம்பர் வருவாய் 36,538 கோடி ரூபாயில், இந்தியாவின் பங்கு 2.9% ஆகும். இந்த விகிதமானது மிகச் சிரியதாக தோன்றினாலும், இது கடந்த ஆண்டினை காட்டிலும் மிக அதிகமாகும். இது மற்ற சர்வதேச சந்தைகளை காட்டிலும் மிக அதிகமாகும்.

பெரும் தலைவலிகள்

பெரும் தலைவலிகள்

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தற்போது முக்கிய சந்தைகளில், மந்த நிலையில் இருந்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மோசமான நிலை இருந்து வருகின்றது. இது இந்திய நிறுவனங்களை அதன் வணிகத்தினை பல்வேறு நாடுகளில் செய்ய வழிவகுக்கலாம்.

ஒப்பந்தங்கள் சரிவு

ஒப்பந்தங்கள் சரிவு

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் செப்டம்பர் காலாண்டிலேயே இந்திய ஐடி நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் குறைந்துள்ளன. இது இனி வரவிருக்கும் காலாண்டுகளில் இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 103 புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 117 வாடிக்கையாளர்களை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 10% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இது ஐடி சந்தையில் நிலவும் மந்த நிலையை சுட்டிக் காட்டுகின்றது.

ஹெச்சிஎல் டெக்

ஹெச்சிஎல் டெக்

இதற்கிடையில் தான் ஐடி சேவை வழங்குனர்கள் புதிய சந்தைகளில் நுழைய திட்டமிட்டு வருகின்றனர்.

ஹெச் சி எல் டெக் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே தொடர்ந்து அலுவலகங்களை அமைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. அதனை புதிய விஸ்டாஸ் என்று அழைப்பதாகவும், ஏற்கனவே இந்த அலுவலகங்களில் 25,000 பேர் பணி புரிகின்றனர். மேற்கொண்டு விரிவாக்கத்தின் மூலம் 5- 10% பணியமர்த்தல் அதிகரித்துள்ளது என ஹெச்சிஎல் சிஇஓ சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ் சிஇஓ  கருத்து

இன்ஃபோசிஸ் சிஇஓ கருத்து

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சிஇஓ சலீல் பரேக் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு டிஜிட்டல் மாற்றம் குறித்தான திட்டங்களை செய்து வருகின்றது. இது சர்வதேச சந்தைகளில் அழுத்தம் நிலவி வரும் நிலையில், இந்திய சந்தையிலான வலுவான வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது என கூறியுள்ளார்.

தொடர்ந்து விரிவாக்கம்

தொடர்ந்து விரிவாக்கம்

ஐடி துறையில் நிலவி வரும் இத்தகைய மந்த நிலைக்கு மத்தியில், ஐடி நிறுவனங்கள் தங்களது சேவையினை பல்வேறு நாடுகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகின்றன. இது அவர்களின் மார்ஜினை தக்கவைத்துக் கொள்ள உதவும் என ஐடி நிறுவனங்கள் நினைக்கின்றன. இது ஐடி ஊழியர்களுக்கும் சாதகமாக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies may pull up new markets

Amid the slowdown in India IT companies' core markets, companies are now planning to focus on other markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X