ஐடி நிறுவனங்களே எப்போ தான் திருந்தபோறீங்க.. ஐடி ஊழியர்கள் பாவம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஐடி துறை மிகப்பெரிய ஊழியர்கள் தட்டுப்பாட்டில் இருக்கும் இதே வேளையில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

அதிகப்படியான ஊழியர்கள் வெளியேற்ற விகிதம், மூன்லைட்டிங் பிரச்சனை, அலுவலகத்திற்கு வர மறுக்கும் ஊழியர்கள், பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்ப்பதில் தாமதம் என எப்போதும் இல்லாத அளவிற்குப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல சந்தை வல்லுனர்கள் தலைவர்கள் ஊழியர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளைச் சரி செய்தாலே பல பிரச்சனைகள் தீரும் எனக் கூறுகின்றனர்.

இன்போசிஸ், விப்ரோ தொடர்ந்து அக்சென்சர்.. ஐடி துறையில் என்ன நடக்கிறது.. ஊழியர்கள் கண்ணீர்..! இன்போசிஸ், விப்ரோ தொடர்ந்து அக்சென்சர்.. ஐடி துறையில் என்ன நடக்கிறது.. ஊழியர்கள் கண்ணீர்..!

2ஆம், 3ஆம் தர நகரங்கள்

2ஆம், 3ஆம் தர நகரங்கள்

கொரோனா தொற்றுக் காலத்தில் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், அலுவலகத்திற்குத் திரும்ப வர மறுக்கின்றனர். இதைச் சமாளிக்க விரைவில் ஐடி நிறுவனங்கள் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அதிகப்படியான அலுவலகத்தை அமைக்க வேண்டும் என இன்போசிஸ் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர், ஹெச்ஆர் பிரிவு தலைவர் டிவி மோகன்தாஸ் பாய்த் தெரிவித்துள்ளார்.

பெண் ஊழியர்கள்

பெண் ஊழியர்கள்

ஐடி ஊழியர்களின் வாழ்க்கை முறை பெரிய அளவில் மாறியுள்ளது, இந்த நிலையில் அனைத்து ஊழியர்களையும் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் உத்தரவு போடும் இதே நேரத்தில் அலுவலகத்திற்குள்ளேயே childcare centres கொண்ட வர வேண்டும். இதன் மூலம் பெண் ஊழியர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

கோ வொர்கிங் ஸ்பேஸ்

கோ வொர்கிங் ஸ்பேஸ்

இதேபோல் ஐடி நிறுவனங்கள் கோ வொர்கிங் ஸ்பேஸ் தளத்தை அதிகளவில் பயன்படுத்தி ஐடி ஊழியர்களின் பயண நேரத்தை குறைக்க வழி வகைச் செய்ய வேண்டும். இது அதிகப்படியான ஊழியர்களை அலுவலகத்திற்கு வர ஊக்குவிக்கும்

ஊழியர்களின் தேவை

ஊழியர்களின் தேவை

இதேபோல் ஊழியர்களின் தேவை என்ன என்பதை அவ்வப்போது தெரிந்துகொண்டு வேகமாகவும், உடனடியாகவும் சரி செய்ய வேண்டும் என CIEL HR Services நிறுவனத்தின் சிஇஓ ஆதித்ய நாராயண் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

மூன்லைட்டிங் பிரச்சனை

மூன்லைட்டிங் பிரச்சனை

மேலும் மூன்லைட்டிங் பிரச்சனையைத் தீர்க்க முதலில் முழுமையான விளக்க அறிக்கையை அளிக்க வேண்டும், அதாவது பொழுதுபோக்காக அல்லது NGO அமைப்பிற்காகத் தனது வேலை நேரத்திற்குப் பின்பு பணியாற்றுவது மூன்லைட்டிங் செய்வதா என்பது போன்ற விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

போதுமான சம்பளம்

போதுமான சம்பளம்

இதேபோல் மூன்லைட்டிங் செய்யும் பெரும்பாலானோர் போதுமான சம்பளம் கிடைக்காத காரணத்தால் மட்டுமே செய்கின்றனர். எனவே கடந்த 10 -15 வருடத்தில் பிரஷ்ஷர்களின் சம்பளம் உயரவேயில்லை. இதேபோல் சீஇஓ சம்பள வளர்ச்சியைப் பார்க்கும் போது உயர் அதிகாரிகளின் சம்பள அளவு தற்போது 5 மடங்கு அதிகரிக்க வேண்டும்.

புதிய பயிற்சிகள், திறன்கள்

புதிய பயிற்சிகள், திறன்கள்

ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ளத் தொடர்ந்து புதிய பயிற்சிகள், திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் அளிக்க வேண்டும். இதேபோல் கற்ற திறனைப் பயன்படுத்த உடனடியாக வாய்ப்பு அளிக்க வேண்டும் இதைச் செய்தாலே 85 சதவீத ஊழியர்களை எளிதாக நிறுவனத்தில் தக்க வைத்துக்கொள்ள முடியும் என Randstad ஆய்வுகள் கூறுகிறது.

ஐடி ஊழியர்கள் - ஐடி நிறுவனங்கள்

ஐடி ஊழியர்கள் - ஐடி நிறுவனங்கள்

ஐடி ஊழியர்களுக்குச் சாதகமாகவும், நன்மை அளிக்கும் விதமாகவும் எவ்விதமான விஷயங்களையும் செய்யாமல், ஊழியர்கள் நிர்வாகத்திற்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம். இந்தச் சலுகைகளை அளிக்க முடியாவிட்டால் சீஇஓ சம்பள உயர்வுக்கு இணையாக ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies needs massive changes on work locations, salaries, employee benefits,

IT companies needs massive changes on work locations, salaries, employee benefits, etc
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X