விப்ரோ ரிஷாத் பிரேம்ஜி அட்ரிஷன் குறித்து செம அப்டேட்.. ஐடி நிறுவனங்களுக்கு சூப்பர் ஐடியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய காலாண்டுகளாக இந்திய ஐடி நிறுவனங்கள் பலவும் பற்பல சவால்களுக்கும் மத்தியில் அட்ரிஷன் பிரச்சனையையும் எதிர்கொண்டு வருகின்றன.

 

இதற்கிடையில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் வெளியேறுவதை கட்டுக்குள் வைக்க, தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வந்தன.

இதற்கிடையில் ஐடி நிறுவனங்கள் அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி என்ன கூறினார் வாருங்கள் பார்க்கலாம்.

அட்ரிஷன் விகிதத்துடன் போராட்டம்

அட்ரிஷன் விகிதத்துடன் போராட்டம்

கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நவம்பர் மாதம் 2-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, இந்திய ஐடி துறையானது அதிகளவிலான அட்ரிஷன் விகிதத்துடன் போராடி வருகின்றது.

புதிய இடங்கள் &  திறமைகள்

புதிய இடங்கள் & திறமைகள்

இதற்கிடையில் ஐடி நிறுவனங்கள் அட்ரிஷன் சவால்களை குறைக்க புதிய இடங்களையும், திறமைகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா நமக்கு வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளது. இது திறமைகளுக்கான குழுவை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இது விரிவாக்கத்தினை எளிதாக்குகிறது.

பெண்கள் & மாற்று திறனாளிகளுக்கு பயன்
 

பெண்கள் & மாற்று திறனாளிகளுக்கு பயன்


குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தொலைதூரத்தில் இருந்து பணிபுரிவதால் பயனடைவார்கள். இது அவர்களுக்கு ஒரு நெகிழ்வை தரும் என பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

விப்ரோவின் செப்டம்பர் காலாண்டு அட்ரிஷன் விகிதம் 23% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 20.5% ஆக இருந்தது.

பணியமர்த்தல்

பணியமர்த்தல்

இரண்டாவது காலாண்டில் விப்ரோ நிறுவனம் 14,000 பிரெஷ்ஷர்களை பணியில் அமர்த்தியது. இதன் முலம் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 2,59,179 பேராகும்.

எங்களிடம் நல்ல திறமை வாய்ந்த இளம் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.

திறமைகளை தேடி செல்லலாம்

திறமைகளை தேடி செல்லலாம்

எனினும் அதிகரித்து வரும் அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லலாம். அவர்கள் இருக்கும் இடத்திற்கு நாம் செல்லாமல், அவர்களை நகரங்களுக்கு வருமாறு வற்புறுத்துகிறோம். இது திறமையான குழுவை கட்டுப்படுத்தும். பெரிய நகரங்களில் உள்கட்டமைப்பினையும் அழுத்துகிறது. இது மக்களின் வாழ்க்கை செலவினங்களையும் உயர்த்துகிறது என்றும் பிரேம்ஜி கூறியுள்ளார்.

கர்நாடகா அரசுக்கு பாராட்டு

கர்நாடகா அரசுக்கு பாராட்டு

கர்நாடகா அரசின் பொருளாதார வளர்ச்சி குறித்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் புதிய டெக்னாலஜி கிளஸ்டர்களை அமைப்பது குறித்து தனது பாராட்டுகளை பிரேம்ஜி தெரிவித்துள்ளார். இது மாநில அரசின் வளர்ச்சியை மேம்படுத்தும். முதலீடுகளை அதிகரிக்கும்.

கணிசமான வளர்ச்சி கணிசமான வளர்ச்சி

கணிசமான வளர்ச்சி கணிசமான வளர்ச்சி

கடந்த மூன்று தசாப்தங்களில் இந்திய ஐடி துறையானது கணிசமான வளர்ச்சியினை எட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8% பங்கு வகிக்கிறது. இது 30 ஆண்டுகளுக்கு முன்பு 1% கீழாக இருந்தது என கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் சவால்கள் நிலவி வந்தாலும், நீண்டகால வாய்ப்புகள் குறித்து நாங்கள் உற்சாகமாக இருக்கிறேன் என்றும் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies needs to find new locations: Look for talent: Rishad premji

Rishad Premji chairman of Wipro, said the Indian IT industry is struggling with high attrition rates. He also said that IT companies need to find new places and talent to reduce attrition challenges
Story first published: Thursday, November 3, 2022, 13:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X