ஐடி துறையில் சமீபத்திய மாதங்களாகவே பற்பல விவாதங்கள், சவால்கள் இருந்து வருகின்றன. இது உலக அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ஐடி நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்ளலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் தான் ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக புதிய பணியமர்த்தலை தற்காலிக தடை செய்துள்ளன. பல நிறுவனங்கள் பணியமர்த்தலை குறைத்துள்ளன. பல நிறுவனங்கள் தேவைக்கு அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.

நிரந்தர ஊழியர்கள்
இதற்கிடையில் ஆய்வறிக்கை ஒன்றானது ஐடி துறையில் கிட்டத்தட்ட 20% ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தலானது குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் தற்போது நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில், ஓப்பந்த ஊழியர்களை தவிர்த்து நிரந்த ஊழியர்களின் பக்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒப்பந்தங்களை அதிகரிக்க முயற்சி
ஐடி நிறுவனங்களின் இத்தகைய முடிவானது மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கு மத்தியில் வந்துள்ளது. இதற்கிடையில் தான் ஐடி நிறுவனங்கள் நிரந்தர ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ளவும், தேவை குறைந்து வருவதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகின்றன.

ஒப்பந்த ஊழியர்கள்
நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து ஊழியர்களுக்கான தேவையானது குறைந்துள்ள நிலையில், 10 - 20% பணியர்த்தலானது குறைந்துள்ளது.
8 வருடத்திற்கும் கீழான பணி அனுபவம் கொண்ட ஊழியர்கள், ஐடி மற்றும் ஐடி துறையில் சுமார் 10 - 12% இருப்பதாக adecco மதிப்பிட்டுள்ளது.

தேவை சரிவு
கொரோனா காலத்தில் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது நெருக்கடிக்கு மத்தியில் ஒப்பந்தங்களின் அளவு குறைந்துள்ளது. இதனால் ஊழியர்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன. நிறுவனங்கள் முதல் கட்டமாக ஒப்பந்த ஊழியர்கள், பெஞ்ச் மார்க் ஊழியர்களை குறைத்து வருகின்றன. இதற்கிடையில் தான் ஒப்பந்த ஊழியர்களின் பணியமர்த்தல் பெரும் அளவு குறைந்துள்ளது.

கொரோனா காலம்
2021ம் ஆண்டின் பிற்பாதியில் தேவைகள் உச்சம் தொட்டிருந்த காலக்கட்டத்தில் 60 - 70% சம்பள உயர்வுகள் இருந்தன. இது மட்டும் அல்ல, இன்னும் பற்பல சலுகைகளையும் வாரி வழங்கின. கொரோனா காலத்தில் பற்பல நிறுவனங்களும் தங்களது வணிகத்தினை டிஜிட்டல் மயமாக்க ஊக்கப்படுத்தப்படுத்தின. இதனால் அந்த காலகட்டத்தில் தேவையானது பெரியளவில் இருந்தது. புதிய புதிய ஒப்பந்தங்களை எதிர்கொள்ள பெஞ்ச் மார்க் ஊழியர்களையும் சகட்டு மேனிக்கு பணியமர்த்தின.

தலைகீழாய் மாறிப்போன நிலை
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இதனால் நிறுவனங்கள் இருக்கும் ஊழியர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதேசமயம் திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதிலும் போராடி வருகின்றன. மீடியம் டெர்மில் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் தான், நிறுவனங்கள் பணியமர்த்தலிலும் யோசனை செய்து வருகின்றன.

வருமானம் குறையலாம்
தற்போதைய நிலையானது மேற்கொண்டு இப்படியே தொடர்ந்தால் அது அதிகளவில் ஒப்பந்த ஊழியர்களைத் தான் பாதிக்கும் எனலாம். ஏனெனில் ஐடி நிறுவனங்களின் சுமார் 40% வருவாய் ஒப்பந்த ஊழியர்களை சார்ந்தே வருகின்றது. கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் தேவையானது 30% சரிவினைக் கண்டுள்ளது. ஆக இதே நிலை தொடர்ந்தால், ஒப்பந்த ஊழியர்களின் வருமானம் 12 - 15% சரியலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மொத்தத்தில் ஐடி ஊழியர்கள் தற்போதைக்கு பணி மாறுதல் செய்வதோ? மாறுதல் செய்ய நினைப்பதோ? தற்போதைக்கு வேண்டாம் என்பதே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.