பெங்களுரு: கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன் மூலமாக மக்களை ஆட்டிப்படைத்து வரும் வைரஸ், தொழில் துறையையும் ஆட்டிப்படைத்து வருகிறது எனலாம்.
தொழில்கள் முடக்கத்தினால் ஊழியர்கள் பணி நீக்கம், சம்பளம் குறைப்பு, ஊதிய உயர்வு என பலவும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தாலும், தேவை குறைவு, புதிய திட்டங்கள் ஒப்பந்தம் இல்லாமை போன்றவற்றினால் கட்டாய விடுப்பிலோ அல்லது பணி நீக்கம் செய்யவே நிறுவனங்கள் தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர்களை அழைத்து வருவதில் கவனம்
இந்த நிலையில் தற்போது லாக்டவுனின் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நிறுவனங்களுக்கு அழைத்து வருவதில் மிகுந்த கவனமுடன் உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் கொரோனாவின் தாக்க ஆரம்பத்ததில் இருந்தே 147 பில்லியன் டாலர் அவுட்சோர்சிங் தொழில் நாடு முழுவதும் உள்ள 4 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைக்கு எந்த அவசரமும் இல்லை
இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு தேவையான கணினிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளும் அப்போதே வழங்கப்பட்டுள்ளது. ஆக அரசு தற்போது லாக்டவின் தளர்வுகள் அளித்திருந்தாலும், கொரோனா தாக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக முன்பை விட பாதிப்புகள் அதிகரித்து தான் உள்ளது. ஆக ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்ப எந்த அவசரமும் இல்லை என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்ஃபோசிஸ் என்ன சொல்கிறது?
இதற்கிடையில் ஐடி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் படிப்படியாக தனது ஊழியர்களை பணிக்கு திரும்ப செய்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது அதன் அலுவலகங்களில் சுமார் 15 சதவீதம் பேர் மட்டும் நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களில் இருந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

இழப்பு ஏதும் இல்லை
அதோடு அலுவலகங்களை கவனமாக கண்கானித்து, நிபந்தணைக்களுக்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே அலுவலங்களை திறக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றினாலும், உற்பத்தி திறனில் இழப்பு ஏதும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அலுவலகங்களுக்கு ஊழியர்கள் திரும்புவதில் எந்த அவசரமும் இல்லை என்பதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் பாதுகாப்பு தான் முக்கியம்
ஏனெனில் இதில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு, வணிகம் ஆகிய அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை HR ரிச்சர்ட் லோபோ கூறியுள்ளார்.

ஹெக்சாவேரின் எதிர்பார்ப்பு
இதே நடுத்தர ஐடி நிறுவனமான ஹெக்சாவேர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களை கொண்டிருக்கவில்லை. ஆக இது சுகாதார நிலையைப் பொறுத்து அதிகபட்சமாக 50 சதவீத ஊழியர்களை வைத்து பணியாற்ற வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸூக்கு சரியான தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்கும் வரை அலுவலகங்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இருப்பதை காண முடியாது என்றும் கூறப்படுகிறது.

எங்கள் தேவை பூர்த்தியாகிறது
எனினும் ஹெக்சாவேர் நிறுவனம் எங்களது கொள்கையின் முதல் கவனமே ஊழியர்களின் பாதுகாப்பினை பலப்படுத்துவது. உலகளவில் உள்ள எங்களது வாடிக்கையாளார்களுக்கு சேவையை தொடர்ச்சியாக உறுதி செய்வதாகும். ஆக இந்த இரண்டு நோக்கங்களுமே ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் எங்களுக்கு பூர்த்தியாகிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஹெக்சாவேர் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஹெச்சிஎல்லின் அதிரடி நடவடிக்கை
இதே மற்றொரு ஐடி ஜாம்பவான் ஆன ஹெச்சிஎல் நிறுவனம், அதன் ஊழியர்களில் 4% பேரை மட்டுமே அலுவலகம் மற்றும் வாடிக்கையாளர் இடங்களில் இருந்து பணியாற்ற கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக இது குறைந்தபட்ச ஆட்களை மட்டுமே வைத்து செயல்பட்டு வருகிறது. அதுவும் அத்தியாவசிய தேவைகளூக்கு மட்டுமே ஆட்களை வைத்து செயல்பட்டு வருகின்றது.

இது நல்லா இருக்கே
பொதுவாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் போது அதன் உற்பத்தி விகிதம் குறையும் என்று கூறுவார்கள். ஆனால் ஹெச்சிஎல் நிறுவனம் அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் அதன் சேவை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அவர்களின் வேலை திறனும் அதிகரித்துள்ளது. எங்களது ஊழியர்களின் உற்பத்தி திறன் 16- 17% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

விப்ரோ என்ன சொல்கிறது?
விப்ரோவின் 97 சதவீதம் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அலுவலகங்களை மீண்டும் திறப்பதில் யோசித்து வருவதாகவும் தெரித்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தின் அதன் பணியாளர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் அதன் வசதிகளில் பணிக்கு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெக் மகேந்திராவின் திட்டம் என்ன?
விப்ரோவும் ஹெச்சிஎல்லை போலவே ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால், உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டெக் மகேந்திராவும் தனது பணியாளர்களை மீண்டும் ஒன்றினைக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரிவான திட்டத்தினை வகுத்துள்ளதாக அந்த நிறுவனம், தெரிவித்துள்ளது.

யுஎஸ்டி குளோபலின் திட்டம்
திருவனந்தபுரத்தினை தளமாகக் யுஎஸ்டி குளோபல் நிறுவனம் எட்டு முதல் 10 வாரங்களுக்குள் பணியாளர்களைக் பகுதி பகுதியாக கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது அதன் அனைத்து அலுவலகங்களிலும் 10 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களே பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.