ஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. கலங்கி போன ஊழியர்கள்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் ஒவ்வொரு துறையும் பெருத்த அடி வாங்கி வருகின்றன.

அதிலும் சேவைத் துறையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறை மிக அடி வாங்கியுள்ளது எனலாம்.

ஏனெனில் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பாகுபாடின்றி படு வேகமாக பரவி வரும் நிலையில், ஒரு நாளைக்கு 100 பேர் குணமாகி வெளியே செல்கிறார்கள் என்றால், அதைவிட பல மடங்கு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதிய பணியமர்த்தல்  நிறுத்தம்

புதிய பணியமர்த்தல் நிறுத்தம்

இப்படி உள்ள நிலையில் மக்கள் இடையே சமூக இடைவெளி, அத்தியாவசியம் அற்ற பயணம், மேலும் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தர விடப்பட்டது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் புதிய பணியமர்த்தலை நிறுத்தி வைத்துள்ளது. அதிலும் மூத்த அதிகாரிகளை பணியமர்த்தும் போது 20- 25% சம்பளத்தினை குறைக்கப்படலாம் என்றும் இத்துறையினை சார்ந்த மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

அற்புதமான வேலை

அற்புதமான வேலை

மேலும் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, நாட்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற மாற்றுவதில், அற்புதமான நம்பமுடியாத வேலையை ஐடி துறை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்தே சுழற்சி முறையில் பணி

வீட்டில் இருந்தே சுழற்சி முறையில் பணி

ஐடி நிறுவனங்கள் கொரோனா வைரஸ் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், 25 -30% ஊழியர்கள் சுழற்சி முறையில் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள். அதோடு அலுவலகங்களில் இடத்திற்கான தேவையும் அதிகரிக்கும். ஏனெனில் நிறுவனங்கள் தங்களது நெருக்கடியான அலுவலக இடத்தில் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டியிருக்கும்.

அதிகப்படியான இடமும் கிடைக்கும்

அதிகப்படியான இடமும் கிடைக்கும்

ஆக இதனால் அவர்களுக்கு அதிக இடம் தேவைப்படும். எனவே 25% ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற செய்வது கூடுதல் இடத்தையும் வழங்கக்கூடும். மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க முடியும் என்றும் இத்துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இத்துறையில் அடுத்த ஒரு வருடத்துக்கு தேவை மென்மையாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

சம்பள குறைப்பு & ஆட்சேர்ப்பு நிறுத்தி வைப்பு

சம்பள குறைப்பு & ஆட்சேர்ப்பு நிறுத்தி வைப்பு

சில நிறுவனங்கள் பணி நீக்கம் சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள நிலையில், ஐடி ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் வேலை இழப்புகள் மற்றும் சம்பள குறைப்புகள் உள்ளிட்டவற்றை தடுக்க, சில பகுதிகளில் ஐடி நிறுவனங்களில் அதிக ஆட்களை புதிய பணியமர்த்துவதனையும் நிறுத்தி வைத்துள்ளன.

சம்பளம் குறைப்பு இருக்கலாம்

சம்பளம் குறைப்பு இருக்கலாம்

மேலும் இங்கு சம்பள குறைப்புகள் இருக்கும். மேலும் பெரும்பாலான மக்களுக்கு சம்பள உயர்வு இருக்காது. மூத்த மட்டத்தில் அவர்களை செலவுகளை குறைப்பதற்காக சம்பளத்தினை குறைக்கலாம். உதாரணத்திற்கு ஊழியர்கள் 75,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 20 -25% வரை குறைப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies to suspend hiring this year

India’s IT services industry would see hiring freeze this year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X