வருமான வரி தாக்கல் செய்ய 'புதிய' இணையதளம்.. ஜூன் 7 அறிமுகம்.. அப்படி இதில் ஸ்பெஷல்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வருமான வரித் தாக்கலில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது வருமான வரித் துறை வருகிற ஜூன் 7ஆம் தேதி புதிதாக ஒரு வருமான வரி தாக்கல் செய்யும் தளத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

 

 ஏர் இந்தியா தளத்தில் சைபர் அட்டாக்.. 45 லட்சம் பேரின் தகவல் திருட்டு.. யாருக்கு, என்ன பாதிப்பு..! ஏர் இந்தியா தளத்தில் சைபர் அட்டாக்.. 45 லட்சம் பேரின் தகவல் திருட்டு.. யாருக்கு, என்ன பாதிப்பு..!

ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்ய ஒரு தளம் பயன்பாட்டில் இருக்கும் வேளையில் எதற்காக இப்புதிய தளம்..? பழைய வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளம் முடக்கப்படுமா..? புதிய வருமான வரித் தளத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்..? யாருக்கு இது உதவிக்கரமாக இருக்கும்..?

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

ஜூன் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் புதிய வருமான வரி தாக்கல் இணையத் தளம் (www.incometaxgov.in ) மூலம் பழைய இணையதளம் (www.incometaxindiaefiling.gov.in) பயன்பாட்டில் இருந்து முழுமையாக நீக்கப்படும் என வருமான வரித்துறை தெளிவுபடுத்துகிறது.

இதன் மூலம் வருமான வரி செலுத்துவோருக்கும், வருமான வரித் துறை அதிகாரிகளுக்குப் பழைய வருமான வரி தளமான www.incometaxindiaefiling.gov.in பயன்படுத்த முடியாது.

தற்காலிக முடக்கம்

தற்காலிக முடக்கம்

இந்த மாற்றங்கள் முழுமையாகச் செய்து முடிக்க ஜூன் 1 முதல் 6ஆம் தேதி வரையில் www.incometaxindiaefiling.gov.in தளம் அதாவது பழைய வருமான வரி தாக்கல் செய்யும் தளத்தையே முழுமையாக முடக்கப்பட்டுக் காரணத்தால் பயன்படுத்த முடியாது.

உடனடி ஐடிஆர் அறிக்கை ஆய்வு
 

உடனடி ஐடிஆர் அறிக்கை ஆய்வு

வருமான வரித்துறை புதிதாக அறிமுகம் செய்ய உள்ள வருமான வரி தாக்கல் தளத்தில் உடனடியாக ஐடிஆர் அறிக்கையை ஆய்வு செய்யும் சேவையும், வரைவில் ரீபண்ட் செய்யும் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வருமான வரி செலுத்துவோர் தங்களது வரி அறிக்கைக்கான ரீபண்ட் தொகையை உடனடியாகப் பெற முடியும்.

ஒற்றை டேஷ்போர்டில்

ஒற்றை டேஷ்போர்டில்

மேலும் வருமான வரி செலுத்துபவர் அப்லோடு செய்யப்பட்ட அறிக்கை, நிலுவையில் இருக்கும் பணிகள் என வரி தொடர்புடைய அனைத்தையும் ஒற்றை டேஷ்போர்டில் மக்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள காரணத்தால், வரி குறித்த பணிகளை எவ்விதமான தாமதமின்றிச் சிறப்பாகச் செய்ய முடியும்.

இலவசமாகச் சாப்ட்வேர் சேவை

இலவசமாகச் சாப்ட்வேர் சேவை

இதேபோல் ITR அறிக்கையைத் தயாரிக்க இலவசமாகச் சாப்ட்வேர் பயன்படுத்த முடியும். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் ஆப்லைன் மற்றும் ஆன்லைனிலும் ITR அறிக்கையைத் தயார் செய்ய முடியும். மேலும் இந்தச் சாப்ட்வேர் மூலம் வரி குறித்து முழுமையான புரிதல் இல்லாதவர்கள் கூட எளிதாக வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியும்.

வரைவில் மொபைல் ஆப்

வரைவில் மொபைல் ஆப்

மேலும் வருமான வரி தாக்கல் சேவைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாகவே செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்தப் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்ட பின் மொபைல் ஆப் வாயிலாக வரும் வருமான வரி அறிக்கை மட்டும் அல்லாமல் இணையத்தில் இருக்கும் அனைத்து சேவைகளும் மொபைல் ஆப் வாயிலாகப் பெற முடியும்.

பணப் பரிமாற்ற முறைகள்

பணப் பரிமாற்ற முறைகள்

புதிய இணையத்தளத்தில் நெட்பேங்கிங் மட்டும் அல்லாமல் யூபிஐ, கிரெடிட் கார்டு, ஆர்டிஜிஎஸ், NEFT என அனைத்து விதமான பேமெண்ட் முறையை அறிமுகம் செய்ய உள்ளது வருமான வரித் துறை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பழைய வருமான வரி தாக்கல் தளத்தை விடவும் பல புதிய சேவைகள் உடன் எளிதாக இயக்கக் கூடிய தளமாக மாறிவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT department introducing new e-filing portal from June7: Know advantages of new website

IT department introducing new e-filing portal from June7: Know advantages of new website
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X