ஐடி ஊழியர்களே எச்சரிக்கை.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ அறிக்கைகளை கவனிச்சீங்களா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி துறையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு பலத்த ஒப்பந்த விகிதங்களுக்கு மத்தியில், பணியமர்த்தலானது வரலாறு காணாத அளவில் இருந்தது. எனினும் தற்போது உலகளாவிய அளவில் இருந்து வரும் மந்த நிலைக்கு மத்தியில், தேவை சரியலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.

ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் பலவும் தங்களது பணியமர்த்தலை குறைக்க தொடங்கியுள்ளன. இனியும் இந்த போக்கானது தொடரலாம் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த சில சில வாரங்களாகவே தங்களது காலாண்டு அறிக்கையினை முன்னணி ஐடி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

ஸ்விக்கியில் வேலை கிடைச்சாச்சு.. குட்டி பெண்ணும், அப்பாவின் கொண்டாட்டத்தையும் பாருங்க! ஸ்விக்கியில் வேலை கிடைச்சாச்சு.. குட்டி பெண்ணும், அப்பாவின் கொண்டாட்டத்தையும் பாருங்க!

பாதியாக குறைந்த பணியமர்த்தல்

பாதியாக குறைந்த பணியமர்த்தல்

அதில் அவர்களின் பணியமர்த்தல் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் காலாண்டில் பணியமர்த்தலை பாதியாக குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் கடந்த காலாண்டில் 42,590 பேரை பணியமர்த்தியிருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 20,144 பேரை பணியமர்த்தியுள்ளன.

என்ன காரணம்?

என்ன காரணம்?

கடந்த ஆண்டில் அட்ரிஷன் விகிதமான மிக மோசமான நிலையில் உச்சம் தொட்டிருந்த நிலையில், தற்போது உலகளாவிய நிலையில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, எண்ணெய் நெருக்கடி, அமெரிக்க மெதுவான வளர்ச்சி, பணவீக்கம், முக்கிய பொருளாதார நாடுகள் என பலவும் மந்த நிலையில் உள்ளன. இதனால் தேவையானது சரிவினைக் காணலாம் என்ற அச்சத்தில் மத்தியில் பணியமர்த்தலானது சரிவினைக் கண்டுள்ளது.

சம்பளம் அதிகரிப்பு,

சம்பளம் அதிகரிப்பு,

கடந்த ஆண்டு நிலவிய திறமை போருக்கு மத்தியில், சம்பள விகிதத்தினை உந்தியது. ஒரே நேரத்தில் திறமையான ஊழியர்களுக்கு பல வாய்ப்புகளை கொடுத்தது.

இது ஐடி துறையில் மட்டும் அல்ல, வங்கி, சில்லறை வணிகம் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களின் தேவை மற்றும் சம்பளத்தினை உயர்த்தியது.

ட்ஜிட்டல்மயமாக்கல்

ட்ஜிட்டல்மயமாக்கல்

தொற்று நோயால் டிஜிட்டல்மயமாக்கல் என்பது துரிதப்பட்டது. உள்நாட்டில் அதிகளவில் பணியமர்த்தல் இருந்தது. ஆனால் இன்றோ நிலைமையே வேறு. தற்போது வளர்ச்சியும் குறைந்துள்ளது. தேவையும் சரிவினைக் கண்டுள்ளது. இதனால் பணியமர்த்தலும் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும், முன்னணி மூன்று ஐடி நிறுவனங்களின் பணியமர்த்தலானது மெதுவாகியுள்ளது.

விப்ரோ

விப்ரோ

இதில் விப்ரோ நிறுவனம் 94.7% சரிவினைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் 11,475 பேரை பணியமர்த்திய நிலையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 605 பேரை சேர்த்துள்ளது.

விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, மைண்ட் ட்ரீ உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் பலவும், ஊழியர்களுக்கான ஆஃபர் லெட்டரை கொடுத்துள்ள நிலையில், பல மாதங்கள் ஆகியும் அவர்களை பணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் தேதிகளை ஒத்தி வைத்து வருகின்றன. இந்த நிலையில் இருக்கும் வேலையினை தக்க வைத்துக் கொள்வதே ஐடி ஊழியர்களின் புத்திசாலித்தனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT hiring cool down: TCS, wipro, & infosys cut quarterly net employees additions

Many IT companies are started reducing their hiring. Industry experts warn that this trend may continue.
Story first published: Monday, October 17, 2022, 22:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X