அசத்தல் பெர்பார்மன்ஸில் ஐடி துறை.. சர்வதேச நிறுவனங்களுக்கே சவால் விடும் இந்திய நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவினை பொறுத்தவரையில் ஐடி துறையானது, முதன்மை துறைகளில் ஒன்றாக உள்ளது. அதிலும் கொரோனா காலகட்டத்திலும் கூட நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது.

சொல்லப்போனால் சர்வதேச அளவில் கொரொனா காலகட்டத்தில் முடங்கி போன நிறுவனங்களுக்கு மத்தியில், இந்திய நிறுவனங்கள் வேற லெவல் பெர்பார்மன்ஸை காட்டியுள்ளன.

இது டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தின் தேவை உள்ளிட்ட பல காரணங்களினால், இந்திய ஐடி துறையானது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 194 பில்லியன் டாலர்களாக வளர்ச்சி காணலாம் என்று நாஸ்காம் கணித்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் சர்வதேச நிறுவனங்கள் 3.2 சதவீதம் வீழ்ச்சி காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜிடிபியில் முக்கிய பங்கு

ஜிடிபியில் முக்கிய பங்கு

நாஸ்காம் New World: The Future is Virtual என்ற ஆய்வில், 2020ம் ஆண்டில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தபோதிலும், இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியானது, ஜிடிபியில் சுமார் 8 சதவீத பங்களிப்பினை வழங்கியுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி சேவையில் 52 சதவீதமும், மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 50 சதவீதமும், ஏப்ரல் - செப்டம்பர் 2020 காலத்தில் கொண்டுள்ளது.

எவ்வளவு பேர் பணியமர்த்தல்

எவ்வளவு பேர் பணியமர்த்தல்

கொரோனா காலகட்டத்தில் பல துறைகளில் பெரும் சரிவினை கண்ட நிலையில் கூட, டிஜிட்டல் துறையின் வளர்ச்சியானது அபரிமிதமாக இருந்தது. அது தற்போதும் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் ஐடி துறையானது 1,38,000-க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியில் அமர்த்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் திறன் உள்ள ஊழியர்கள்
 

டிஜிட்டல் திறன் உள்ள ஊழியர்கள்

இதே தற்போது இந்த துறையில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையானது சுமார் 4.4 மில்லியனாகும். இதில் டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்கள் 1.17 மில்லியனைக் கடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 32% வளர்ச்சி கண்டுள்ளது.

CEO பணியமர்த்தல்

CEO பணியமர்த்தல்

அதே போல தலைமை நிர்வாக அதிகாரிகள் பணியமர்த்தலானது 95 சதவீதத்தினை கடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதே நாஸ்காம் ஆய்வில், இந்திய தொழில்நுட்ப துறையில் தலைமை நிர்வாக அதிகாரிகள் பணியமர்த்தலானது, கடந்த ஆண்டை காட்டிலும் 67 சதவீதம் வளர்ச்சி காணலாம் என கூறியுள்ளது.

டிஜிட்டல் துறையில் வருவாய்

டிஜிட்டல் துறையில் வருவாய்

டிஜிட்டல் துறையில் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த துறையில் முதலீடு செய்வது இந்த துறையினருக்கு இன்றியமையாததாக மாறி வருகின்றது. இதனால் நிறுவனங்களும் ஊழியர்களும் டிஜிட்டல் திறன்களை வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சொல்லப்போனால் இத்துறையில் மொத்த வருவாயில், டிஜிட்டல் துறையில் 28 - 30% பங்களித்துள்ளது.

டிஜிட்டல் தேவை

டிஜிட்டல் தேவை

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் தேவை அதிகரித்து வருகின்றது. டிஜிட்டல் உருமாற்றம் என்பது உலகளவில் முன்னுரிமையாக இருந்து வருகிறது. குறிப்பாக இது 2020ம் நிதியாண்டின் பிற்பாதியுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் கிளவுட் சேவையானது 80% அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஐரோப்பா மற்றும் ஆசியா பசிபிக் ஆகியவை வலுவான வளர்ச்சி கண்ட பகுதிகளாக உருவெடுத்துள்ளன.

வாய்ப்புகள் உருவாகும்

வாய்ப்புகள் உருவாகும்

குறிப்பாக வங்கி, நிதி சேவைகள், இன்சூரன்ஸ் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவை முக்கிய வளர்ச்சி காணும் துறைகளாக இருந்து வருகின்றன. இதற்கிடையில் 2020ம் ஆண்டில் 1600 டெக் ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டுள்ளன.

உண்மையில் சர்வதேச நிறுவனங்களுக்கே சவால் விடுக்கும் வகையில் இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருவது, இந்தியாவின் வளர்ச்சியினை ஊக்குவிக்கும். வேலை வாய்ப்பினை உருவாக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT industry may grow 2.3% in current financial year

IT news updates.. IT industry may grow 2.3% in current financial year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X