இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி காணும். மீடியம் டெர்மில் குறைந்தபட்சம் 2 லட்சம் பேரையாவது பணியமர்த்தலாம் என தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க டெக் நிறுவனங்கள் பலவும் நிலவி வரும் மந்த நிலையால், பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இது இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்குமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இந்த நிலையில் ஐடி ஊழியர்களுக்கும், ஐடி பிரெஷ்ஷர்களுக்கும் பெரும் ஆறுதலை கொடுக்கும் விதமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஒரு அப்டேசனை கொடுத்துள்ளனர்.

பணியமர்த்தல் தொடரும்
உலகம் முழுக்க பல நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐடி நிறுவனங்களில் பணியமர்த்தல் தொடரும் என்று கூறியிருப்பது மிக மிக ஆறுதலான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவும் குறைந்தபட்சம் 2 லட்சம் பேரை தேர்வு செய்யலாம் எனும் போது, அது இன்னும் ஆறுதலாகவும் வந்துள்ளது.

தொடர்ந்து வளர்ச்சி காணும்
ஐடி துறையானது டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தில் அடுத்து வரும் ஆண்டுகளில் முதலீடு என்பது தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், ஐடி துறையில் முதலீடுகள் தொடரும். இதன் காரணமாக ஐடி துறையானது தொடர்ந்து வளர்ச்சி காணும்.
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலையால் ஏற்ற இறக்கம் என்பது மீடியம் டெர்மில் தொடரலாம். குறுகிய காலத்திற்கு ஐடி துறையானது சவால்களை எதிர்கொள்ளலாம். எனினும் நீண்டகால நோக்கில் அப்படியிருக்காது.

என்னென்ன சவால்கள்
ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வருதல், அட்ரிஷன் விகிதம், மூன்லைட்டிங் உள்ளிட்ட சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன.
எனினும் வளர்ச்சி தொடரலாம் என்ற நிலையில், தொடர்ந்து பணியமர்த்தலை செய்யலாம். குறுகிய காலத்தில் ஐடி துறையில் 2 லட்சம் பேரை ஐடி நிறுவனங்கள் பணியமர்த்தலாம் என பெங்களூரு டெக் உச்சி மாநாட்டில் கிரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு
கொரோனாவின் வருகைக்கு பிறகு சர்வதேச அளவில் இந்தியா ஐடி நிறுவனங்களின் தேவையானது அதிகரித்தது. இந்திய நிறுவனங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்தது.
இதற்கிடையில் ஐடி தொழில்துறையானது 8 - 10% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 220 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒரு துறையாகும். ஆக இது சிறியளவிலான வளர்ச்சி இல்லை. ஐடி துறைக்கு இது மிகவும் உற்சாகமாக காலகட்டம்.

எவ்வளவு வளர்ச்சி?
கடந்த 25 ஆண்டுகளை விட, ஐடி துறையானது அடுத்து வரும் 25 ஆண்டுகள் நல்ல வளர்ச்சியினை காணலாம் என நான் எதிர்பார்க்கிறேன்.
ஐடி நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிற்கு அருகில் இருக்க வசதியாக பெங்களூருக்கு அப்பால், டயர் 2 நகரங்களிலும் ஐடி மையங்களை உருவாக்கி வரப்படுகிறது. குறிப்பாக மைசூர், மங்களூரு, ஹூப்ளி, தார்வாட் மற்றும் பெல்காம் போன்ற நகரங்களில் சிறிய மையங்களை உருவாக்கி வருகின்றன என கிரிஸ் தெரிவித்துள்ளார்.

புரிந்து கொள்ளுங்க
உலகளாவிய பொருளாதார பிரச்சனைகளுக்கு மத்தியில் சவால்கள் இருப்பது நியாயமானது தான். ஆனால் ஒருவர் இந்த துறையை முழுமையாக பார்க்க வேண்டும். அந்த கண்ணோட்டத்தில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கொரோனா காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடானது அபரிதமாக துரிதப்பட்டது. இது அந்த சமயத்தில் வேலை சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.