சர்வதேச நிறுவனங்கள் பலவும், குறிப்பாக மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன.
உலகின் டெக் ஜாம்பவான்கள் ஆனால் கூகுள், பேஸ்புக், ஆப்பிள், மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன.
இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகிறது எனலாம். இந்தியாவிலும் மேற்கண்ட டெக் நிறுவனங்கள் பணி நீக்கத்திற்கு பிறகு பணியமர்த்தலை கணிசமாக குறைத்துள்ளன. பணி நீக்கமும் செய்துள்ளன. இந்த நிலையில் இந்தபோக்கு இன்னும் சில காலத்திற்கு தொடரலாம் என்ற அச்சமே இருந்து வருகின்றது.
பணி வாய்ப்புகள் சரிவு
அதுமட்டும் அல்ல, இந்தியாவிலும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி நீக்கத்திற்கு பிறகு , பணி வாய்ப்புகள் என்பது 95% குறைந்துள்ளது என எஸ்க்பீனோ அறிக்கை தெரிவித்துள்ளது. இது மேற்கொண்டு நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேறுவதும் அதிகரிக்கும் என்றும் இதன் இணை நிறுவனர் கமல் காரந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா டெக் பணியமர்த்தல்
அமெரிக்கா டெக் நிறுவனங்கள் பலவும் கடந்த சில மாதங்களாகவே பணியமர்த்தலை குறைத்துள்ளன. கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 9000 பேராக இருந்த தேவை, அக்டோபர் மத்தியில் 4,000 பேராக சரிவினைக் கண்டது. இது கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 80% சரிவினைக் கண்டுள்ளன.
இவ்வளவு சரிவா?
கடந்த காலாண்டில் இந்த நிறுவனங்களில் பணியமர்த்தலை 70% சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு தற்போது 95% சரிவினைக் கண்டுள்ளது. பணியமர்த்தல் என்பது முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது, பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டர், மெட்டா, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 15,150 பேரை பணி நீக்கம் செய்துள்ளன.
இனியும் தொடரலாம்?
டெஸ்லா, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஐடி நிறுவனங்களும் பணியமர்த்தலை முடக்கியுள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இதனால் ஐடி துறைக்கான செலவினங்கள் குறைந்துள்ளது. இது ஐடி நிறுவனங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் மாற்றம்
மொத்தத்தில் மிகப்பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, கொரோனா காலகட்டத்தில் தேவையானது மிகப்பெரியளவில் உச்சம் தொட்டிருந்தது. பல நிறுவனங்களும் தங்களது சேவையை, டிஜிட்டல் சேவைக்கு மாற்றினர். அந்த சமயத்தில் வீட்டில் இருந்து பணி, எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்ற சூழலுக்கு மாற்றினர்.
இயல்பு நிலை
ஆனால் தற்போது கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் என்பது தளர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தேவையானது சரியத் தொடங்கியுள்ளது. அதோடு உலகம் முழுக்க பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், மத்திய வங்கிகள் மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பணப்புழக்கம் என்பதும் குறைந்துள்ளது.
தொடர் நிகழ்வு
ஏற்கனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதன் தாக்கத்தினை பெரியளவில் உணரத் தொடங்கி விட்டன. இந்த தாக்கமானது இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய பணியமர்த்தல் என்பது குறையலாம். பற்பல நிறுவனங்களில் பணி நீக்கமும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications