ஐடி நிறுவனங்களின் பணி நீக்கம்.. 20 நிறுவனங்களின் கசப்பான முடிவு.. இனி தொடரலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் டெக் நிறுவனங்கள் பலவும் பணி நீக்க நடவடிக்கையினை பெரியளவில் எடுத்து வருகின்றன. பல நிறுவனங்களும் பணியமர்த்தலை குறைத்துள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் மிக குறைந்த அளவிலேயே பணியமர்த்தி வருகின்றன.

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதத்தினால், அதிகளவிலான வட்டி விகிதம் என்பது தொடர்ந்து தேவையினை குறைத்து கொண்டுள்ளது.

87 போலி நிறுவனங்கள், ரூ.11675 கோடி அபேஸ்.. DHFL உரிமையாளர்களின் தில்லாலங்கடி வேலை..! 87 போலி நிறுவனங்கள், ரூ.11675 கோடி அபேஸ்.. DHFL உரிமையாளர்களின் தில்லாலங்கடி வேலை..!

நிறுவனங்கள் சரிவு

நிறுவனங்கள் சரிவு

கடந்த அக்டோபர் மாதத்தில் டெக் துறையில் 9,587 வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது நவம்பர் 2020-க்கு பிறகு அதிகபட்சமாகும். சமீபத்திய மாதங்களாக அமேசான், மெட்டா, ட்விட்டர், மைக்ரோசாப்ட் கார்ப் உள்ளிட்ட பல நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளன. இனியும் இந்த போக்கு தொடரலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஏனெனில் பல நிறுவனங்களும் நடப்பு ஆண்டில் மந்த நிலையால் சரிவினைக் கண்டு வருகின்றன.

அமேசான்

அமேசான்

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்கம் அமேசானின் பல்வேறு துறைகளில் இருக்கலாம் என்றும், குறிப்பாக சில்லறை வர்த்தக ஹெச் ஆர் பிரிவு என பல துறைகளிலும் இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதமே புதிய பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. புதிய சம்பள அதிகரிப்பினையும் தடை செய்தது.

ஆப்பிள்

ஆப்பிள்

உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான்களில் ஒருவரான ஆப்பிள் நிறுவனம் தனது புதிய பணியமர்த்தலை நிறுத்தியுள்ளது. குறிப்பாக அதன் ஆராய்ச்சி மற்றும் டெவலப்மென்ட் துறையில் நிறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், அடுத்த ஆண்டில் மந்த நிலை தொடரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.

Chime

Chime

டிஜிட்டல் பேங்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான சிமே பைனான்ஷியல் இன்க், மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 12% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யலாம். இது சுமார் 160 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்ந்து வெற்றியை தக்க வைத்துக் கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகின.

சிஸ்கோ

சிஸ்கோ

சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் அதன் மறுகட்டமைப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இதனால் அதன் ஊழியர்களில் 5% பேர் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. நிறுவனம் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்காக, அடுத்த வேலையை தேட கணிசமான தொகையையும் ஒதுக்கியது.

டாப்பர் லேப்ஸ்

டாப்பர் லேப்ஸ்

டாப்பர் லேப்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ரோஹாம் கரேகோஸ்லோ, நிறுவனம் 22% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் காரணிகளுக்கு மத்தியில் சவாலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

டிஜிட்டல் கரன்சி குழுமம்

டிஜிட்டல் கரன்சி குழுமம்

கிரிப்டோகரன்சி குழும நிறுவனத்தில் இருந்து 10 நிறுவனத்தினர் வெளியேறியுள்ளனர். நிறுவனம் அதன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

டோர்டாஷ்

டோர்டாஷ்

டோர்டாஷ் இன்க் நிறுவனம் 1250 பேரை குறைத்துள்ளது. இது கொரோனா காலத்தில் மிகப்பெரிய நஷ்டத்தினை கண்ட நிலையில், அதன் விரிவாக்கமும் செய்யத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் நிறுவனம் மொத்த ஊழியர் தொகுப்பில் 6% பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்கத்தில் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவினை தாண்டி பல ஊழியர்களும் அடங்குவர்.

கேலக்ஸி டிஜிட்டல்

கேலக்ஸி டிஜிட்டல்

கேலக்ஸி டிஜிட்டல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 20% பேரை பணி நீக்கம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது 15 - 20 என்ற விகிதத்திற்கு மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் 80% சரிவினைக் கண்டுள்ளது.

ஹெச் பி

ஹெச் பி

ஹெச் பி நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6000 பேரை பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இது தேவைச் சரிவினைக் கண்டு வரும் நிலையில் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது. குறிப்பாக பர்சனல் கம்ப்யூட்டர் என சிலவற்றின் தேவை என்பது குறைந்துள்ளது. இது லாபத்தினையும் குறைத்துள்ளது.

இன்டெல்

இன்டெல்

இன்டெல் நிறுவனம் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அடுத்த ஆண்டில் 3 பில்லியன் டாலர் செலவினைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் மெதுவாக பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-க்குள் 10 பில்லியன் டாலர் தொகையினை சேமிக்க திட்டமிட்டுள்ளது.

லிஃப்ட்

லிஃப்ட்

லிப்ட் இன்க் நிறுவனம் மந்த நிலைக்கு மத்தியில் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது 13% அல்லது 683 பேரை வெளியேற்றியுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் புதிய பணியமர்த்தலையும் நிறுத்தியுள்ளது. இது அடுத்த ஆண்டு வரையில் இந்த நிலை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்டா

மெட்டா

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் அதன் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த சமூக வலைதள நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பினை கண்டு வருகின்றது. இதற்கிடையில் அதன் பங்கு விலையும் சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் தான் நிறுவனம் செலவினைக் கட்டுப்படுத்தும் விதமாக இத்தகைய நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. இதன் பணியமர்த்தலையும் நிறுத்தியுள்ளது.

ஓபன் டோர்

ஓபன் டோர்

ஒபன்டோர் டெக்னாலஜி இன்க் நிறுவனம் சுமார் 550 பேர் அல்லது 18% பணி நீக்கம் செய்துள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து வீடுகளின் தேவையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், செலவினைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் அடமான கடன் விகிதம் அதிகரித்துள்ளதாலும், இதன் வளர்ச்சி சரிவினைக் கண்டுள்ளது.

பெலோடன்

பெலோடன்

பெலோடன் இண்டராக்டிவ் இன்க் அக்டோபர் மாதத்தில் 500 பேர் அல்லது 12% பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த ஆண்டு நிறுவனம் பணி நீக்கம் செய்வது இது நடப்பு ஆண்டில் 4வது முறையாகும். நிறுவனம் தொடர்ந்து செலவு குறைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது.

குவால்காம்

குவால்காம்

குவால்காம் இன்க் நிறுவனத்தின் பணியமர்த்தலை நிறுத்தியுள்ளது. தொடர்ந்து தேவையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், ஸ்மார்ட்போன் விற்பனையானது சரிவினைக் கண்டு வருகின்றது. சிப் பற்றாக்குறைக்கு மத்தியில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது சரிவினைக் கண்டுள்ளது.

சேல்ஸ்போர்ஸ்

சேல்ஸ்போர்ஸ்

சேல்ஸ்போர்ஸ் இன்க் நிறுவனம் தொடர்ந்து அதன் மார்ஜினில் கவனம் செலுத்தி வருகின்றது. இது அதன் தேவையில் சரிவினைக் கண்டு வரும் நிலையில், நிறுவனம் நூற்றுக் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

சீகேட்

சீகேட்

கம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவ்களின் மிகப்பெரிய தயாரிப்பாளரான சீகேட் டெக்னாலஜி ஹோல்டிங்கஸ் பி எல் சி, இது சுமார் 3000 வாய்ப்புகள் இருப்பதாக கூறியது. சீகேட் மற்றும் இன்டெல் உள்ளிட்ட கணினி வழங்குனர்கள் செலவினங்கள் அதிகரிப்பால் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில் விற்பனையும் பெரும் சரிவினைக் கண்டுள்ளன.

ஸ்ட்ரைப்

ஸ்ட்ரைப்

உலகின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்ட்ரைப் இன்க், 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை குறைத்து வருகின்றது. 14% ஊழியர்கள் குறைப்புக்கு பிறகு அதன் ஊழியர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7000 பேராக இருக்கலாம் என தெரிகிறது.

ட்விட்டர்

ட்விட்டர்

எலான் மஸ்க் கையகப்படுத்திய பிறகு ட்விட்டரில் அதிரடியான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ட்விட்டரில் சுமார் 3700 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரையில் ட்விட்டரில் இன்னும் பல மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அப்ஸ்டார்ட்

அப்ஸ்டார்ட்

ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனமான அப்ஸ்டார்ட், தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT layoffs: 20 IT firms making big lay off this year

Amidst the global recession, many tech companies are taking massive layoffs. 20 companies are laying off jobs in the IT sector.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X