ஐடி நிறுவனங்களில் வரலாறு காணாத சரிவு.. இனி ஊழியர்களின் நிலைமை எப்படியிருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி துறையில் 100 மில்லியன் டாலருக்கு மேலான வருடாந்திர ஒப்பந்தங்களின் மதிப்பு குறைந்துள்ளது. இது குறிப்பாக ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 10% குறைந்துள்ளது.

இது சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் ஐடி தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்கள், சர்வதேச ஐடி நிறுவனங்கள் என பலவும் மோசமான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக டெக்னாலஜி ஆய்வு நிறுவனமாக ISG தெரிவித்துள்ளது.

2023ல் எந்தெந்த பங்குகளை வாங்கலாம்.. ஐடி துறையில் எந்த பங்கினை வாங்கலாம்?2023ல் எந்தெந்த பங்குகளை வாங்கலாம்.. ஐடி துறையில் எந்த பங்கினை வாங்கலாம்?

வருடாந்திர சராசரி ஒப்பந்தம்

வருடாந்திர சராசரி ஒப்பந்தம்

ISG அறிக்கையின் படி, மூன்றாவது காலாண்டில் மொத்தம் 705 மில்லியன் டாலர் வருடாந்திர சராசரி ஒப்பந்தங்களை வென்றுள்ளது. 2017ம் ஆண்டிலிருந்து இந்த துறையில் மிக குறைந்த அளவிலான ஒப்பந்தங்கள் இதுவாகும். மாறாக வருடாந்திர சராசரி ஒப்பந்தத்தில் 5 - 19 மில்லியன் டாலர் வரையிலான சிறிய பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், இந்த துறையில் குறிப்பிடத்தக்க ஆண்டு வளர்ச்சி இருந்தது. எனினும் பெரியளவிலான ஒப்பந்தங்கள் என்பது தொடர்ந்து சீராகவே உள்ளது.

மெதுவான வளர்ச்சி

மெதுவான வளர்ச்சி

ஐடி துறையானது சர்வதேச அளவில் மிக மெதுவான அளவில் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. இது மேற்கோண்டு நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில், பணவீக்கம், ரெசசன் அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் ஐடி தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் ஐடி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இது ஐடிக்காக நிறுவனங்களின் செலவினை குறைக்க வழிவகுத்துள்ளன.

 மெகா ஒப்பந்தங்கள்

மெகா ஒப்பந்தங்கள்

ஜனவரி - செப்டம்பர் மாதங்களில் 18 மெகா ஒப்பந்தங்களை செய்துள்ளன. இதன் மொத்த மதிப்பு 2.7 பில்லியன் டாலராகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை செய்துள்ளன.

கடந்த ஆண்டு விவாதித்தை போலவே ஐடி நிறுவனங்கள் சிறிய ஈடுபாட்டினை ஆதரிக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கின் முடிவுகளை விரைவாக உணர வேண்டும். மேலும் அவை பரிமாற்றத்தை குறைக்க வேண்டும்.

 

நிச்சயமற்ற தன்மை

நிச்சயமற்ற தன்மை

நாங்கள் ஒப்பந்தங்களை வெற்றிகளின் அடிப்படையில் இதுபோன்ற போக்கை கவனித்து வருகிறோம். ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையே நிலவி வருகின்றது. கடந்த சில நாட்களாக அந்த நிலைமை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. மூன்றாவது மற்றும் 4வது காலாண்டில் பொருளாதாரம் குறித்த நிலையற்ற தன்மையே இருந்து வந்தது.

இனி வளர்ச்சி அதிகரிக்கலாம்

இனி வளர்ச்சி அதிகரிக்கலாம்

இதனால் நிறுவனங்கள் செலவினைக் தவிர்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இதன் விளைவாக அவர்கள் விருப்பமான செலவினங்களை தவிர்த்துக் கொண்டிருந்தனர். அதே நேரம் பணத்தினை சேமிப்பதற்கான சில ஒப்பந்தங்களை தாமதப்படுத்தினர். ஆனால் இனி வளர்ச்சி அதிகரிக்கலாம் . இனி வரும் காலாண்டுகளில் இந்த வளர்ச்சி அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. எனினும் தற்போதைக்கு சரிவு என்பது ஐடி துறையை பதம் பார்த்துக் கொண்டுள்ளது எனலாம்.

செயல்திறன் குறைப்பு

செயல்திறன் குறைப்பு

ஹெச்சிஎல் டெக் மற்றும் அசெஞ்சர் நிறுவனங்கள் தங்களது டிசம்பர் காலாண்டு வளர்ச்சியினை குறைத்துள்ளன. அன்னிய செலவாணி விகிதமும் சரிவினைக் காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் ஐடி நிறுவனங்கள் தங்களது செயல்திறனை குறைத்து வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT mega deals of over $100 million hit a historic low in sep quarter

Annual contracts worth more than $100 million in the IT sector have declined. This is particularly the case for the July-September quarter which has declined by 10%.
Story first published: Friday, December 23, 2022, 20:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X