ஐடி ஊழியர்களுக்கு இது மோசமான காலம்.. பாதியாக குறைந்த வேலை வாய்ப்பு.. இனி எப்போது மீளும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஐடி துறையானது பெரியளவில் தாக்கத்தினை எதிர்கொண்டு வருகின்றது. பற்பல டெக் ஜாம்பவான்களும் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளன. புதிய பணியமர்த்தலையும் பெரியளவில் முடக்கியுள்ளன.

 

இதன் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது எனலாம். முன்னணி ஐடி நிறுவனங்கள் பலவும் பணியமர்த்தலை குறைத்துள்ளன.

கடந்த ஆண்டினை காட்டிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் 50% பணியமர்த்தலானது குறைந்துள்ளது.

முன்லைட்டிங்-ஐ சரி செய்ய 'இது'தான் ஓரே வழி.. ஐடி ஊழியர்களுக்கு இனி ஜாலி தான்..! முன்லைட்டிங்-ஐ சரி செய்ய 'இது'தான் ஓரே வழி.. ஐடி ஊழியர்களுக்கு இனி ஜாலி தான்..!

வேலை வாய்ப்பு சரிவு

வேலை வாய்ப்பு சரிவு

Xpheno's Active Jobs Outlook Report தரவின் படி, ஐடி சேவைத் துறையில் அக்டோபர் மாதத்தில் 60,000 வேலை வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. இது கடந்த 22 மாதங்களில் மிக குறைவான எண்ணிக்கையாகும். இது கடந்த ஆண்டினை காட்டிலும் 50% எனும் அளவுக்கு குறைந்துள்ளது. இதே கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது வேலை வாய்ப்பானது 14% குறைந்துள்ளது.

முன்னணி நிறுவனங்களில் சரிவு

முன்னணி நிறுவனங்களில் சரிவு

தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக பணியமர்த்தல் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வருகின்றது. இது 20 மாதங்களில் முதல் முறையாக 30% என்ற அளவுக்கு கீழாக காணப்படுகிறது.

முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியமர்த்தல் எண்ணிக்கையானது 45% சரிவினைக் கண்டுள்ளது.

சரிவில் ஐடி துறை
 

சரிவில் ஐடி துறை

ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்ல, ஸ்டார்ட் அப்கள், சேவை நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் என பலவும் தங்களது வேலைகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டன. பலரும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனுடன் ஒப்பிடும்போதும் ஐடி துறையில் வேலை வாய்ப்பு என்பது கணிசமாக இருந்தாலும், கடந்த ஆண்டினை காட்டிலும் 50% சரிவினைக் கண்டுள்ளது.

மூன்று ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சரிவு

மூன்று ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சரிவு

இது மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக இந்தளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. டெக் துறையானது தற்போது மிகப்பெரிய பணியமர்த்தல் துறை என்ற நிலையை இழந்துவிட்டது.

இந்த நிறுவனங்களின் செயலில் உள்ள வேலைகளின் அளவு கடந்த மாதத்தினை விட 12% சரிவினைக் கண்டுள்ளது. செப்டம்பரில் 1,21,000 ஆக இருந்தது, அக்டோபரில் 1,06,000 ஆக சரிவினைக் கண்டுள்ளது.

பணியமர்த்தல் வேகம் சரிவு

பணியமர்த்தல் வேகம் சரிவு

டெக் நிறுவனங்களில் பணியமர்த்தல் வேகம் என்பது பணவீக்கம் காரணமாக குறையத் தொடங்கியுள்ளது. இது மேற்கோண்டு சர்வதேச காரணிகளால் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் முதல் பாதியில் சரிவில் காணப்பட்ட நிலையில், பிற்பாதியில் சீரமைப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பானது இருந்து வருகின்றது.

செலவு குறைப்பு நடவடிக்கை

செலவு குறைப்பு நடவடிக்கை

இது உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனால் ஐடி செலவினங்களை குறைத்துள்ளன. இந்த நிலையில் இன்னும் தொடரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு சரிவினைக் காண வழிவகுக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

 எப்போது மீட்சி காணும்

எப்போது மீட்சி காணும்

எனினும் இது 2022ம் ஆண்டின் கடைசி பகுதியிலும், 2023ம் ஆண்டின் தொடக்கத்திலும், மீண்டு எழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப சேவைகளில் ஏற்பட்ட பணியமர்த்தல் சரிவினைக் ஈடுகட்டும் விதமாக, தொழில் நுட்பம் அல்லாத துறைகளில் பணியமர்த்தல் அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பரில் 42% இருந்த நிலையில், அக்டோபரில் 53% ஆக அதிகரித்துள்ளது.

மற்ற துறைகளின் நிலவரம்

மற்ற துறைகளின் நிலவரம்

கடந்த ஐந்து மாதங்களாகவே வீழ்ச்சி கண்ட மற்ற துறைகளில், அக்டோபரில் சற்று மேல் நோக்கி உயர்ந்து வரத் தொடங்கியுள்ளன. முந்தைய மாதத்தினை விட அக்டோபரில் 7% கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. இது செப்டம்பரில் 2,10,000 ஆக இருந்த நிலையில், அக்டோபரில் 2,25,000 ஆக அதிகரித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT sector slowdown: 50% decline in IT jobs compared to last year

Leading IT firms including Tata Consultancy Services, Wipro, Infosys, HCL Tech saw a 45% decline in hiring numbers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X