டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா அதிபரின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையினால், அங்குள்ள இந்திய நிறுவனங்கள், குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தினை சந்தித்து வருகின்றன.

 

கடந்த ஜூன் மாதத்தில் தான் ஹெச் 1பி விசாவினை தடை செய்தது. இந்த நிலையில் தற்போது மேலும் மேலும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றது.

அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு, பிற நாட்டினருக்கு வழங்கப்படும் விசா தான் ஹெச் 1 பி விசா. இந்த ஹெச் 1பி விசாவினால் இந்தியாவின் ஐடி துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.

அரசு பணிகளில் பணியமர்த்த தடை

அரசு பணிகளில் பணியமர்த்த தடை

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, தொடர்ந்து அமெரிக்கர்களுக்கே முதலுரிமை என்று கூறி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஹெச் 1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் மத்திய முகமைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படும் பணிகளில், அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இந்த பணிகளில் ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களை பணியில் அமர்த்துவதற்கு, தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய ஐடி பங்குகள் சரிவு

இந்திய ஐடி பங்குகள் சரிவு

டிரம்பின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு பின்பு, பிஎஸ்இ-யில் ஐடி துறை சார்ந்த டெக் மகேந்திரா 3.18% சரிவுடனும், இன்ஃபோசிஸ் நிறுவனம் 1.29% சரிவுடனும் காணப்படுகிறது. இதோடு டிசிஎஸ் பங்கு விலையானது 1.11% வீழ்ச்சியுடனும் காணப்படுகின்றது. இதில் நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் 1.20% வீழ்ச்சி கண்டுள்ளது. பிஎஸ்இ ஐடி இன்டெக்ஸ் 165 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,967 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கே வேலை
 

அமெரிக்கர்களுக்கே வேலை

அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் 2020 இறுதி வரை ஹெச் 1 பி விசா மற்றும் இதர வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படாது என்று ஜுன் 23 ஆம் தேதி அறிவித்த நிலையில், புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு பற்றி கூறும்போது, அமெரிக்க அரசு ஒரேயொரு எளிமையான விதியின் கீழ் செயல்படுவதை உறுதி செய்யும் உத்தரவில் இன்று நான் கையெழுத்திடுகிறேன். இது அமெரிக்கர்களை பணியில் அமர்த்த வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஹெச் டிஎஃப்சி பங்கு விலை

ஹெச் டிஎஃப்சி பங்கு விலை

இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது, சென்னையை சேர்ந்த ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக நெட்மெட்ஸை கையகப்படுத்தும் என்று ஒருஅறிக்கையில் வெளியான நிலையில், ரிலையன்ஸ் பங்கு விலையானது அதிகரித்துள்ளது. இதே போல் ஹெச் டிஎஃப்சி பங்கின் விலையும் 4% ஏற்றம் கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT shares falls after trump bars govt agencies from hiring foreign workers

IT shares falls after trump bars govt agencies from hiring foreign workers, but at this same time RIL and HDFC bank shares also trade higher.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X