இடியாக இறங்கிய அந்த செய்தி! தடுமாற்றத்தில் இந்திய ஐடி கம்பெனி பங்குகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிரடிக்கு பெயர் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், தற்போது இந்தியாவையும் ஒரு உரசு உரசி இருக்கிறார்.

ஆனால் இந்த உரசலை இந்தியா பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, தன் வருத்தத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.

அப்படி என்ன செய்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்? சுந்தர் பிச்சை ஏன் வருத்தப்பட்டார். எல்லாவற்றுக்கும் மேல் இந்திய ஐடி கம்பெனி பங்குகள் ஏன் தடுமாறுகின்றன? வாருங்கள் பார்ப்போம்.

விசா பிரச்சனை

விசா பிரச்சனை

"இதோ பூச்சாண்டி வருதோ, அதோ பூச்சாண்டி வருது பார்.." என பயம் காட்டிக் கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்ப் உண்மையாகவே தான் சொன்னதைச் செய்துவிட்டார். அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வழங்குவது, வேலை தொடர்பான விசாக்களான H-1B & H-4 விசாக்களை எல்லாம் இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குடியேற்றம் மற்றும் ஹெச் 1 பி விசாக்களை இந்த ஆண்டு இறுதி வரை தடை செய்தது தனக்கு ஏமாற்றமளிப்பதாகச் சொல்லி இருக்கிறார் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை. அதோடு அமெரிக்க பொருளாதாரத்துக்கு, இந்த குடியேற்றம் நிறைய பங்களித்து இருக்கிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஐடி ப்ரோஸுக்கு பிரச்சனை

ஐடி ப்ரோஸுக்கு பிரச்சனை

எப்படியாவது, அமெரிக்கா போய்விட வேண்டும் என்கிற கனவுகளோடு, ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு, இந்த செய்தி பேரிடியாக விழுந்திருக்கிறது. இதனால் ஐடி கம்பெனிகளுக்கு என்னங்க பாதிப்பு என்று கேட்கிறீர்களா..? அவர்கள் தானே இந்த H-1B விசாவை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஐடி கம்பெனிகள்

ஐடி கம்பெனிகள்

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற இந்தியாவின் மிகப் பெரிய ஐடி கம்பெனிகள், அமெரிக்காவின் H-1B விசாக்களை அதிகமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது அந்த விசாவை 2020-ம் ஆண்டு இறுதி வரை வழங்கப் போவதில்லை எனச் சொன்ன உடன், ஐடி கம்பெனி பங்குகளின் விலை தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.

ஐடி பங்குகள் விலை

ஐடி பங்குகள் விலை

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெக்ஸாவேர் டெக்னாலஜீஸ் போன்ற பல ஐடி கம்பெனி பங்குகள் ஒரு சதவிகிதம் கூட ஏற்றம் காண முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. நிஃப்டி ஐடி இண்டெக்ஸில் இருக்கும் 10 பங்குகளில் 2 அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சந்தை ஏற்றத்தில் ஐடி எங்கே

சந்தை ஏற்றத்தில் ஐடி எங்கே

நிஃப்டி செக்டோரியல் இண்டெக்ஸில், எஃப் எம் சி ஜி, மீடியா, மெட்டல், பார்மா, பொதுத் துறை வங்கிகள் போன்ற இண்டெக்ஸ்கள் நல்ல விலை ஏற்றம் கண்டு சந்தையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றன. இந்த பட்டியலில் நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் 0.84 % மட்டுமே ஏற்றம் கண்டு, சராசரியாக வர்த்தகமாகவே தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT stocks are struggling to go up after US suspend some visa

Indian IT company stocks are struggling to go up after US suspend some work visa till the year end. Nifty IT index is on 0.84% up but many other sectors are shining.
Story first published: Tuesday, June 23, 2020, 11:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X