பெங்களூர்: ஐடி நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் கடந்த 2021 - 22ம் நிதியாண்டில் 42,000 ஊழியர்களை ஊக்குவித்தது. இதற்காக இந்த நிறுவனம் 130 மில்லியன் டாலர்களையும் செலவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.
காக்னிசண்ட் நிறுவனம் மட்டும் அல்ல, மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களும் கடந்த ஆண்டு சம்பளத்தினை வாரி வழங்கின. ஒரு முறைக்கு இரு முறை சம்பள அதிகரிப்பினை கூட சில நிறுவனங்கள் செய்தன.

இன்ஃபோசிஸ்
காக்னிசண்ட் நிறுவனம் மட்டும் அல்ல, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களும் கடந்த ஆண்டில் நிறுவனங்கள் நல்ல சம்பள அதிகரிப்பினை கொடுத்தன. குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் அதன் ஊழியர்களுக்கு 10 - 13% சம்பளத்தினை உயர்த்தியது. இதே சிறந்த ஊழியர்களுக்கு 20 -25% சம்பள அதிகரிப்பினை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற ஐடி நிறுவனங்கள்
இன்ஃபோசிஸ், காக்னிசண்ட் நிறுவனத்திற்கு முன்னதாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களும் அவர்களது ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பினை கொடுத்தன.
எனினும் தற்போது நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமும் சரிவினைக் கண்டுள்ளது. இதனால் ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் தங்களது பணியமர்த்தலையும் குறைத்துள்ளன. மேலும் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சம்பள அதிகரிப்பினையும் குறைத்துள்ளன.

செலவு குறைப்பு நடவடிக்கை
இன்னும் சம்பள செலவினை குறைக்க முயற்சி செய்து வருகின்றன. இதற்கிடையில் நிறுவனங்கள் பிரெஷ்ஷர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்தெடுத்திருந்தாலும், பல மாதங்கள் கடந்தும் திரும்ப அழைக்கவில்லை. சில நிறுவனங்கள் பல மாத காத்திருப்புக்கு பின்னர் ஆர்டர்களையே கேன்சல் செய்யும் முடிவுக்கு வந்துள்ளன.

சலுகைகள் கிடைப்பது சந்தேகம் தான்
கடந்த ஆண்டில் ஐடி ஊழியர்கள் பெரும் சலுகைகளை பெற்றாலும், நடப்பு ஆண்டில் அவை கிடைப்பது சந்தேகம் தான். சிலருக்கு கிடைக்கும் சம்பளம் சரிவர கிடைக்குமா? என்பதே பெரும் சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது. நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஏற்கனவே செலவு குறைப்பு நடவடிக்களை எடுக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக

நிபுணர்கள் எச்சரிக்கை
கடந்த ஆண்டில் அதிகளவில் பணியமர்த்திய நிறுவனங்களில் டிசிஎஸ் , விப்ரோ மற்றும் காக்னிசண்ட் நிறுவனங்கள், இந்த ஆண்டில் கூடுதலாக பணியமர்த்தலாம் என்று ஒரு கருத்து கணிப்பு கூறினாலும், நிலவி வரும் சூழலில் அப்படியானதாக இல்லை என்றே கூறலாம். ஆக ஊழியர்கள் இருக்கும் வேலை சம்பளத்தினை தற்போதைக்கு தக்க வைத்துக் கொள்வதே சிறப்பு என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.