இந்தியாவில் பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து வரும் மிகப்பெரிய நிறுவனமான ஐடிசி, யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் மிகப்பெரிய தொகையில் மசாலா பொருட்கள், இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொருட்களைத் தயாரித்து மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது.
ஐடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துடன், இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளைக் கைப்பற்ற இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஐடிசி நிறுவனத்தின் இந்தத் திடீர் அறிவிப்பின் மூலம் முதலீட்டாளர்கள் குஷியாகியுள்ளனர். இதன் எதிரொலி செவ்வாய்க்கிழமை தெரியும்.
2000 கோடி ரூபாய்
ஐடிசி நிறுவனம் சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தைக் கிட்டதட்ட 2000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ள நிலையில், இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெற்றாலும், பங்கு கைப்பற்றல், பணம் கைமாற்றம் அனைத்தும் லாக்டவுன் காலம் முடிந்த பின்பு தான் நடக்கும் எனத் தெரிகிறது.
மேலும் 2000 கோடி ரூபாய் மதிப்பீடு என்பதை ஐடிசி உறுதி செய்யவில்லை.
70 வருட நிறுவனம்
சுமார் 70 வருட வர்த்தக வரலாற்றைக் கொண்டுள்ள சன்ரைஸ் பிராண்டு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான turnover செய்து அசத்தியுள்ளது சன்ரைஸ் புட்ஸ்.
கிழக்கு இந்தியாவில் சன்ரைஸ் பிராண்டு மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டுள்ள மட்டுமல்லாமல் வர்த்தகச் சந்தையில் முன்னோடியாக உள்ளது. இந்நிறுவனம் உத்தரப் பிரதேசம், டெல்லி, NCR, ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய பகுதிகளிலும் வர்த்தகம் செய்து வருகிறது. இதோடு பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற வெளிநாடுகளிலும் தனது தயாரிப்புகளை வர்த்தகம் செய்து வருகிறது.
தொழிற்சாலை
சன்ரைஸ் புடஸ் கொல்கத்தா, ஆக்ரா, Bikaner மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. 70 வருடங்களாக வர்த்தகம் செய்யும் காரணத்தால் மக்கள் மத்தியில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும், நம்பிக்கையும் உள்ளது. இதன் காரணமாகவே ஐடிசி இந்நிறுவனத்தை வாங்குகிறது.
ஐடிசி பங்கு மதிப்பு
பல்வேறு வர்த்தகப் பிரச்சனையின் காரணமாக ஐடிசி நிறுவனப் பங்குகளை ஜனவரி மாதத்தில் இருந்தே சரியத் துவங்கிய நிலையில், லாக்டவு அறிவிக்கப்பட்ட போது 175 ரூபாயில் இருந்து 147.35 ரூபாய்க்குச் சரிந்தது.
இந்நிலையில் பல வர்த்தக மாற்றங்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை (22 மே) 186.70 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
மத்திய அரசு
இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது மோடி தலைமையிலான அரசு. இந்தப் பங்கு விற்பனை மூலம் சுமார் 22,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு மார்ச் 31, 2020ஆம் தேதி வெளியிட்ட தகவல்களின் படி Specified Undertaking ஆப் யூனிட் டிர்ஸ்ட் ஆப் இந்தியா கீழ் மத்திய அரசு வைத்திருக்கும் மொத்த ஐடிசி நிறுவன பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் மோடி தலைமையிலான அரசு ஐடிசியின் 7.94 சதவீத பங்குகளை விற்பனை செய்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications