உலகம் முழுவதும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு முக்கியமான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதா மூலம் ஏற்கனவே ஹெச்1பி விசாவில் அதிகளவில் நன்மை அடையும் இந்தியர்களுக்கு டபுள் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. ஆனால் இந்த மசோதா இறுதி ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்..?
குறிப்பாக இந்த மசோதா மூலம் புதிதாக ஹெச்1பி விசா வாங்குவோருக்கு அதிகப்படியான நன்மை கிடைக்க உள்ளது. குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கு..
ரஷ்யாவை அசைக்க முடியாது.. உலகம் முழுவதும் வர்த்தகம்..!

அமெரிக்கா
அமெரிக்காவில் ஊழியர்கள் தட்டுப்பாட்டைக் குறைக்கவும், ஏற்கனவே ஹெச்1பி விசா பெற்று அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருவரின் கணவன் அல்லது மனைவிக்கு, டிபெண்டென்ட் விசாவான ஹெச்4 விசா அளிக்கப்படும். இந்த ஹெச்4 விசா பெற்றுள்ளவர்கள் I-765 படிவத்தைச் சமர்ப்பித்து அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி பெற்ற சட்டம் உள்ளது.

ஹெச்4 விசா
இந்நிலையில் இந்த ஹெச்4 விசா-வின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருதரப்பு ஒப்புதல் பெற்ற மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான கரோலின் போர்டோக்ஸ் மற்றும் மரியா எல்விரா சலாசர் ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர்.

I-765 விண்ணப்பம்
தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள புதிய மசோதா மூலம், H-4 விசா வைத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கீகாரம் அளிக்கும் I-765 விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்காமலே தானாகவே பணி செய்ய அங்கீகாரம் வழங்க உரிமையை அளிக்கும்.

பணியாற்றும் அனுமதி
கிட்டதட்ட ஹெச்4 விசா பெற்றும் போதே பணியாற்றும் அனுமதி கிடைக்கும். ஹெச்4 விசா வைத்துள்ளவர்கள் உரியக் கல்வி மற்றும் வேலை அனுபவம் இருத்தால் அதிகச் சம்பளத்திலேயே வேலை வாய்ப்பை பெற்ற முடியும். இந்த மசோதா அங்கீகரிக்கப்படுவதற்குச் சில மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

ஊழியர்கள் பற்றாக்குறை
இந்த மசோதாவின் நோக்கம் அமெரிக்க வணிகங்களைப் பாதிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையைக் குறைக்கவும், அதேபோல் அதிகப்படியான ஹெச்1பி விசா வழங்கும் நிலையைத் தவிர்க்கவும், அதே நேரத்தில் புலம்பெயர்ந்த குடும்பங்கள் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்த உதவும்.

இந்தியர்களுக்கு ஜாக்பாட்
இந்த மசோதா ஒப்புதல் பெற்று இயற்றப்பட்டால், ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களின் கணவன் அல்லது மனைவிக்கு அமெரிக்காவில் எளிதாக வேலைவாய்ப்பு பெற உதவும். பலர் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைச் சமர்ப்பித்துக் காத்திருக்கும் நிலையில் இந்த மசோதா ஜாக்பாட் தான்.