பிரதமரின் ஜன் தன் திட்டத்தால் வந்த பயன்! எத்தனை இந்திய பெண்களுக்கு வங்கி கணக்கு இருக்கு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி, இந்திய பாராளுமன்றத்தின் தனிப் பெரும்பான்மை உடன், ஆட்சிக்கு வந்தது.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அவர்கள் செய்த சில மிக நல்ல திட்டங்களில் ஒன்று தான் இந்த பிரதான் மந்திரி ஜன் தன் திட்டம்.

இந்த திட்டத்தின் கீழ், நிறைய ஏழை எளிய மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதை நாம் அறிவோம்.

கொரோனா வைரஸால் இந்திய ஜிடிபிக்கு பெரிய பாதிப்பு இல்லை!கொரோனா வைரஸால் இந்திய ஜிடிபிக்கு பெரிய பாதிப்பு இல்லை!

அறிக்கை

அறிக்கை

'The real story of women's financial inclusion in India' என்கிற தலைப்பில் மைக்ரோ சேவ் கன்சல்டிங் (Microsave Consulting) என்கிற அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிகையில் அப்படி என்ன சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள் என ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

77 சதவிகித பெண்கள்

77 சதவிகித பெண்கள்

2014-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் சுமார் 43 சதவிகித பெண்களுக்கு தான் சொந்தமாக வங்கிக் கணக்கு இருந்ததாம். ஆனால் 2017-ம் ஆண்டு வாக்கில் சுமார் 77 சதவிகித இந்திய பெண்களுக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு இருக்கிறதாம். அதோடு Financial Inclusion விகிதத்திலும் இந்தியா முன்னேறி இருக்கிறதாம்.

ஆண் பெண் விகிதம்

ஆண் பெண் விகிதம்

Financial Inclusion என்றால், இந்தியாவின் நிதி சேவைகளில் அனைவரும் இணைக்கப்பட வேண்டும் என்பது தான். பிரதமரின் ஜன் தன் திட்டத்தால், இந்த Financial Inclusion-ல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் இருந்த இடைவெளியை சுமாராக 14 சதவிகித புள்ளிகள் குறைத்து இருக்கிறதாம்.

வங்க தேசம் & பாகிஸ்தான்

வங்க தேசம் & பாகிஸ்தான்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்களுக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு இருப்பது அதிகமாக இருக்கிறதாம். வங்கதேசத்தில் 36 % மற்றும் பாகிஸ்தானில் 7 % பெண்களுக்கு மட்டுமே சொந்தமாக வங்கிக் கனக்கி இருக்கிறதாம்.

செயல்படாத கணக்குகள்

செயல்படாத கணக்குகள்

அதே நேரத்தில், இந்தியாவில், பிரதான் மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட சில பல கணக்குகள் செயல்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறது மைக்ரோ சேவ் கன்சல்டிங் நிறுவனத்தின் அறிக்கை. வங்கிக் கணக்கை வைத்திருப்பது எல்லாம் ஓகே, இப்போது அந்த வங்கிக் கணக்கில் பணம் புழங்க வேண்டுமே. அதற்கும் அரசு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jan dhan yojana played important role 77 percent indian women have bank account now

Central governments Pradhan Mantri Jan Dhan Yojana, helped to include more women to have bank account. Now 77 percent of indian womens are having bank account.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X