ஜப்பானில் 4வது கொரோனா அலை.. அடுத்தடுத்து மரண செய்தி.. கோபத்தில் மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜப்பானில் கொரோனா 4வது அலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்றால் வீட்டில் இருக்கும் பல அடுத்தடுத்து உயிரிழந்து வரும் காரணத்தால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமலும், மருத்துவத் துறை மொத்தமாக ஸ்தபிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ஹிரோஷிமா நாகசாகி அணுக் குண்டை தாங்கிய ஜப்பான் தற்போது கொரோனா 4வது அலையில் மீண்டும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

 ஜப்பானில் 4வது கொரோனா அலை

ஜப்பானில் 4வது கொரோனா அலை

ஜப்பானில் அடுத்த 10 வாரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ள நிலையில், மக்களுக்குச் சரியான முறையில் தடுப்பு மருத்து அளிக்காமலும், தொற்று ஏற்பட்டுள்ள மக்களுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்காமல் ஜப்பான் அரசு இருக்கும் காரணத்தால் மக்கள் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

 கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்

ஜப்பான் நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளோர் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவமனையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கப்படும் படுக்கைகள் இல்லை, இது ஜப்பானில் பெரும் பிரச்சனையாக உள்ளது என ஓசாகா சிட்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Yasutoshi Kido தெரிவித்துள்ளார்.

 18 கொரோனா நோயாளிகள் மரணம்

18 கொரோனா நோயாளிகள் மரணம்

இதனால் கொரோனா தொற்று உடன் வீட்டிலேயே இருக்கும் பல நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருகிறார்கள். மார்ச் 1ஆம் தேதி முதல் Osaka Prefecture பகுதியில் வீட்டிலிருந்த 18 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர். இதில் 17 பேர் highly infectious strains கோவிட் தொற்று உடையவர்கள்.

 ஜப்பான் மருத்துவக் கட்டமைப்பு

ஜப்பான் மருத்துவக் கட்டமைப்பு

தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ள காரணத்தால் புதிய நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க முடியாத நிலையில் ஜப்பான் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது.

 கேன்சர், இருதய நோயாளிகள்

கேன்சர், இருதய நோயாளிகள்

ஜப்பான் நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் இருக்கும் கேன்சர் நோயாளிகள், இருதய நோயாளிகளையும் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர், இந்தப் படுக்கைகள் கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan coronavirus fourth wave: deaths at home surge, hospitals out of beds

Japan coronavirus fourth wave: deaths at home surge, hospitals out of beds
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X