Yamazaki 55: ஒரு கிளாஸ் விஸ்கி 4.7 கோடி ரூபாய் மட்டுமே.. அப்போ ஒரு பாட்டில்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Yamazaki 55 என்னும் மிகவும் பழமையான மதுபானத்தை 2020ல் லாக்டவுன் நேரத்தில் வருமானத்தையும் வர்த்தகத்தையும் அதிகரிக்க முதல் முறையாக 100 பாட்டில்களை லாட்டரி சிஸ்டம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2021ல் மீண்டும் 100 பாட்டில்களை உலகம் முழுவதும் உள்ள முக்கிய டிராவல் ரீடைல் பார்ட்னர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில் ஒன்று இஸ்தான்புல் விமான நிலையத்தில் உள்ள ஒரு டூட்டி ஃப்ரீ ஸ்டோரில் 488,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது. இது இந்திய ரூபாயில் 4.14 கோடி ரூபாயாகும்.

இதைத் தொடர்ந்து Sotheby நிறுவனத்தில் ஒரு பாட்டில் Yamazaki 55 விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

 Yamazaki 55 விஸ்கி

Yamazaki 55 விஸ்கி


Yamazaki 55 ஜப்பானில் இதுவரை பாட்டில்களில் விற்பனை செய்யப்பட்ட மிகவும் பழமையான மற்றும் மதிப்புமிக்க விஸ்கி ஆகும். இந்த ஆண்டு 750 மிலி Yamazaki 55 விஸ்கி உலகின் மிகவும் பிரபலமான ஏல நிறுவனமான Sotheby-யில் ஏலம் விடப்பட்டு உள்ளது.

65.2 கோடி ரூபாய்

65.2 கோடி ரூபாய்


மது பிரியர்கள் உலகளவில் இருக்கும் காரணத்தால் சோதேபி நிறுவனத்தின் ஏலத்தில் Yamazaki 55, 750 மிலி ஒரு பாட்டில் 8,00,000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் இந்த ஒரு பாட்டில் 65.2 கோடி ரூபாய், அப்படியென்றால் இந்த Yamazaki 55 மதுபானம் ஒரு ஷாட்-ன் விலை மட்டும் சுமார் 4.7 கோடி ரூபாய்.

3 சிங்கிள் மால்ட் விஸ்கி
 

3 சிங்கிள் மால்ட் விஸ்கி

1960 ஆம் ஆண்டில் முதன்முதலில் வடிகட்டப்பட்ட இந்த யமசாகி 55 என்பது ஹவுஸ் ஆஃப் சன்டோரி-யின் மிகவும் பழமையான சிங்கிள் மால்ட் விஸ்கி ஆகும். மேலும் இது 1960 களில் சன்டோரி-யின் நிறுவனர் ஷின்ஜிரோ டோரியின் மேற்பார்வையின் கீழ் 3 சிறப்பான சிங்கிள் மால்ட் விஸ்கி-யின் கலவையாகும். மேலும் அதை Mizunara casks-ல் சேமித்துப் பதப்படுத்தப்பட்டுள்ளது.

சன்டோரி நிறுவனம்

சன்டோரி நிறுவனம்


சன்டோரி (Suntory) என்பது நாட்டின் பழமையான மதுபான நிறுவனம் 1899 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஓசாகா மாநிலத்தில் துவங்கப்பட்டது. இதை Shinjiro Torii என்பவர் துவங்கினார், தற்போதைய தலைவர் Nobuhiro Torii. சன்டோரி நிறுவனம் விஸ்கி தயாரிப்பதில் பெயர் போனவை.

விற்பனை

விற்பனை

Yamazaki 55 மதுபானத்தை இந்நிறுவனத்தின் 5வது தலைமுறை பிலென்டர் Shinji Fukuyo மற்றும் 3ஆம் தலைமுறை தலைவர் Shingo Torii இணைந்து 3 மிகச் சிறந்த சிங்கிள் மால்ட் விஸ்கி-ஐ சேர்த்து உருவாக்கப்பட்ட கலவையாகும். இந்த மதுபானம் சுமார் 55 ஆண்டுப் பாதுகாப்பாகப் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japanese Yamazaki 55 whiskey bottle sold for 65.2 crore in Sotheby’s auction; Single Shot cost Rs 4.7 crore

Japanese Yamazaki 55 whiskey bottle sold for 65.2 crore in Sotheby’s auction; Single Shot cost Rs 4.7 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X