இந்தியாவின் முதல் அழகுசாதன நிறுவனம்.. உருவாக்கியது யார் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. உற்பத்தியில் துவங்கி சேவை துறை வரை அனைத்து தொழில்களும் வர்த்தகத்தை இழந்து புதிய முதலீட்டுக்காக காத்திருந்தது.

இக்காலகட்டத்தையும் நெருக்கடியையும் பயன்படுத்திப் பல துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் வரத் துவங்கியது, ஆனால் இவை அனைத்தும் இந்திய நிறுவனங்களின் வளர்ச்சியால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறியது.

ஆனால் ஒரு துறையில் மட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இது தான் அழகுசாதனப் பொருட்கள் சந்தை.

கேட்டதை விட அதிகமா கொடுக்குற மனசு இருக்கே.. டாடா-வுக்கு ஜாக்பாட் தான்..! கேட்டதை விட அதிகமா கொடுக்குற மனசு இருக்கே.. டாடா-வுக்கு ஜாக்பாட் தான்..!

 அழகுசாதனப் பொருட்கள்

அழகுசாதனப் பொருட்கள்

1950களில் இந்திய அழகுசாதனப் பொருட்கள் சந்தை மிகப்பெரியதாக இல்லையென்றாலும், இருந்து சிறிய அளவிலான சந்தையும் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

 இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

ஏற்கனவே இந்திய பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், அதிகளவிலான அழகுசாதனப் பொருட்களை வெளிநாட்டு சந்தையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் அன்னிய செலாவணி பெரிய அளவில் பாதிக்கப்பட்டும், ரூபாய் மதிப்பு சரியும் என்பதை ஆரம்பக்கட்டத்திலேயே உணர்ந்தார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.

  இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு,

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு,

இந்த பிரச்சனையைச் சமாளிக்க இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1950 ஆம் ஆண்டில் உள்நாட்டு அழகுசாதன பிராண்டைத் தொடங்க தொழிலதிபர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடாவை (JRD TATA) அணுகினார். ஜவஹர்லால் நேரு-வின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுப் பணிகளை துவங்கினார் JRD டாடா.

 JRD டாடா

JRD டாடா

JRD டாடா முதலில் அழகுசாதன பொருட்கள் தயாரிப்புக்கான நிறுவனத்தை டாடா ஆயில் மீல் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகத் துவங்கினார். பின்னாளில் செல்வம் மற்றும் அழகின் தெய்வமாக போற்றப்படும் லக்ஷ்மி கடவுளில் ஆங்கில யெபரான Lakmé என பெயரிடப்பட்டு பிராண்டிங் செய்யப்பட்டது.

 Lakmé நிறுவனம்

Lakmé நிறுவனம்

அப்போதைய காலகட்டத்தில் பணக்காரர்கள் மற்றும் உயர் தட்டு நடுத்தர மக்கள் மட்டுமே அழகுசாதன பொருட்களை அதுவும் வெளிநாட்டு அழகுசாதன பொருட்களை வாங்கி வந்தனர். மற்ற அனைத்து தரப்பு பெண்களும் டேல்கம் பவுடர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்த சூழ்நிலையை சுதேசி பிராண்டான Lakmé மொத்தமாக மாற்றியது.

நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர் குழு

நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர் குழு

பொதுவாக வெளிநாட்டு அழகுசாதன பொருட்கள் அனைத்தும் வெள்ளை நிறம் கொண்டவர்களுக்காக தயரிக்கப்படும் காரணத்தால் இந்தியர்களுக்கு அது சரியாக இருக்காது. இதை ஆரம்பக்கட்டத்தாலேயே உணர்ந்த JRD டாடா இந்தியர்களின் நிறத்திற்கான அழகு சாதன பொருட்களை தயாரிப்பதற்காக நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழுவை அமைத்தார்.

 இந்தியாவும், இந்தியர்களும்

இந்தியாவும், இந்தியர்களும்

இந்தியாவில் மேக்-அப் பெரிய அளவில் ஆதரிக்காத நேரத்திலும், மேக்-அப் தவறான பெண்களுக்கான என்ற எண்ணம் பெரிய அளவில் இருந்த போது, அதை மாற்ற வேண்டும் என திட்டமிட்ட டாடா குழுமத்திற்கு பெரிய அளவில் உதவியது ஒரு பெண்.

 சிமோன் நேவல் டாடா

சிமோன் நேவல் டாடா

சுவிஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவரும், நேவல் ஹெச்.டாடா-வின் மனைவியுமான சிமோன் நேவல் டாடா-வுக்கு 1960ல் Lakmé-யின் தோற்றத்தை மொத்தமாக மாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டது. நேர்த்தியான உடைகள் மற்றும் கவர்ச்சியான மேக்-அப் பிராண்டுகள் மீதான அவரது ஆர்வம், ஈடுபாடு Lakmé பிராண்டை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல பெரிய அளவில் உதவியது.

 வெளிநாட்டு பயணம்

வெளிநாட்டு பயணம்

சிமோன் நேவல் டாடா தான் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்கு செல்லும் போது அங்கு இருக்கும் முன்னணி பிராண்டுகளின் அழகுசாதன பொருட்களை வாங்கி Lakmé ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்துத் தரத்தை ஈடு செய்ய முயற்சி செய்தோம் என அவரே 2007ல் நடந்த ஒரு பேட்டியில் கூறினார்.

தடைகள்

தடைகள்

Lakmé நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட பணியாளர்கள் இருந்த போதிலும், இந்நிறுவனத்தின் வளர்ச்சி பாதை எளிதாக இல்லை.

  100 சதவீத கலால் வரி

100 சதவீத கலால் வரி

1980களில் இந்திய அரசு வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்படும் அழகுசாதன பொருட்கள் உடன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்களுக்கு 100 சதவீத கலால் வரியை விதித்தது. இது Lakmé நிறுவனத்தின் சரிவுக்கு முதல் படியாக இருந்தது.

 மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்காக சிமோன் நேவல் டாடா அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்-யிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 பட்ஜெட் கூட்டம்

பட்ஜெட் கூட்டம்

மத்திய அரசின் உயர் கலால் வரி நியாயமற்றது என்று கூறும் நபர்களின் கையொப்பங்களைப் பெற்றுக் கொண்டு வரும்படி மன்மோகன் சிங், சிமோன் நேவல் டாடா-விடம் கூறினார். இதை உடனடியாக செய்தார் சிமோன் நேவல் டாடா, அடுத்த பட்ஜெட் கூட்டத்திலேயே வரி குறைக்கப்பட்டது.

 Lakmé நிறுவன தயாரிப்புகள்

Lakmé நிறுவன தயாரிப்புகள்

Lakmé நிறுவனம் மஸ்காரா, ஃபேஸ் பவுடர், லிப்ஸ்டிக், ஃபவுண்டேஷன் கிரீம்கள், காம்பாக்ட்ஸ், நெயில் எனாமல், டோனர்கள் மற்றும் பல பொருட்களை தயாரித்து வந்தது.

 பிராண்ட் வேல்யூ

பிராண்ட் வேல்யூ

சிமோன் நேவல் டாடா இந்தியர்கள் மத்தியில் மேக்-அப் மீது இருக்கும் வெறுப்பையும், கண்ணோட்டத்தையும் மாற்ற வேண்டும், இதோடு Lakmé நிறுவனம் பிராண்ட் வேல்யூ-வையும் மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.

 ஷியாமலி வர்மா விளம்பரம்

ஷியாமலி வர்மா விளம்பரம்

இதற்காக 80களில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த சூப்பர் மாடல் ஷியாமலி வர்மா-வை Lakmé நிறுவன பொருட்களின் விளம்பரத்தில் நடிக்க வைத்தார்.

இதுமட்டும் அல்லாமல் இந்தியர்களின் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக சித்தார் மற்றும் புல்லாங்குழல் போன்ற இந்திய இசை கருவிகளை இசைக்கும் வண்ணம் விளம்பரங்களை திட்டமிட்டார்.

 

 ரேகா, ஐஸ்வர்யா ராய்

ரேகா, ஐஸ்வர்யா ராய்

Lakmé நிறுவன தயாரிப்புகளின் விலையும் குறைவாக இருந்த காரணத்தாலும், சிறப்பான விளம்பர உத்திகள் பயன்படுத்தப்பட்டதாலும் 1950 முதல் 1996 வரையில் தொடர்ந்து டாடா கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கியது. டாடா இந்நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு முன்பு Lakmé நிறுவனத்தின் வர்த்தகம் மந்தமாக தான் இருந்தது.

 குறைவான விலை

குறைவான விலை

Lakmé நிறுவன தயாரிப்புகளின் விலையும் குறைவாக இருந்த காரணத்தாலும், சிறப்பான விளம்பர உக்திகள் பயன்படுத்தப்பட்டதாலும் 1950 முதல் 1996 வரையில் தொடர்ந்து டாடா கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கியது. டாடா இந்நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு முன்பு Lakmé நிறுவனத்தின் வர்த்தகம் மந்தமாக தான் இருந்தது.

விற்பனை

விற்பனை

1996ஆம் ஆண்டு டாடா குழுமம் Lakmé நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் அனைத்தையும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

 ஹிந்துஸ்தான் யூனிலீவர்

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

இன்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் கீழ் Lakmé பிராண்டில் 300 பொருட்களை சுமார் 70 நாடுகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. Lakmé பிராண்டின் கீழ் தற்போது வெறும் 100 ரூபாயில் துவங்கி பல ஆயிரங்களுக்கு வரையில் அழகுசாதன பொருட்கள் உள்ளது.

 மீண்டும் டாடா

மீண்டும் டாடா

இந்தியாவில் ஆன்லைன் ஆப்லைன் சந்தையில் அழகு சாதன பொருட்களின் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், டாடா குழுமம் 23 வருடத்திற்கு முன்பு இத்துறை வர்த்தகத்தில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் இறங்க முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jawahar Lal Nehru request JRD Tata made it possible lakme

Jawahar Lal Nehru request JRD Tata made it possible lakme நேரு-வின் அந்த கோரிக்கை.. உடனே ஓகே சொன்ன JRD டாடா..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X