சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய செயல் தலைவராக ஜே ஒய் லீ நியமனம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய செயல் தலைவராக ஜே ஒய் லீ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மதிப்புமிக்க நிறுவனமான சாம்சங், ஸ்மார்ட்போன், டிவிகள், ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.

இந்த நிறுவனத்தின் புதிய செயல் தலைவராக ஜே ஒய் லீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரின் வயது 54 வயதாகும்.

7 ஆண்டுகளுக்கு பின் 4 இலக்கங்களில் சன் ஃபார்மா.. இன்னும் உயரும் என தகவல்!7 ஆண்டுகளுக்கு பின் 4 இலக்கங்களில் சன் ஃபார்மா.. இன்னும் உயரும் என தகவல்!

லீ-யின் நியமனம்

லீ-யின் நியமனம்

இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ பியுங் பங்க் குடும்பத்தை மூன்றாவது தலைமுறை நபராவர். லீ-யின் இந்த நியமனம் அவரது தந்தை மறைந்த தேசபக்தரும், சாம்சங் குழுமத்தின் தலைவருமான லீ குன் மறைவுக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ளார்.

வலுவான தேவை

வலுவான தேவை

தென் கொரியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக லீ 2012ல் இருந்து வருகின்றார்.

இந்த குழுமம் தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ஒரு வலுவான பொறுப்பின் தேவையினை உணர்ந்து நிறுவனம் இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மெதுவான வளர்ச்சி

மெதுவான வளர்ச்சி

மெமரி சிப் தொடங்கி ஸ்மார்ட்போன் வரையில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருந்து வரும் சாம்சங், அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி விகிதம், பொருளாதார மந்த நிலை, உலகளாவிய தொழில்நுட்ப தேவை சரிவுக்கு மத்தியில் பெரும் வணிகப் பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பானது வந்துள்ளது.

லாபம் சரிவு

லாபம் சரிவு

இதற்கிடையில் சாம்சங் நிறுவனம் மூன்றாவது காலாண்டு லாபத்தில் 31% சரிவினைக் கண்டுள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் வந்துள்ளது.

ஏனெனில் உலகளாவிய அளவில் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இது மின்னணு பொருட்களுக்கான தேவையினை குறைத்துள்ளது. இதற்கிடையில் தான் மின்னணு நிறுவனத்தின் விற்பனையானது சரிவினைக் கண்டுள்ளது.

தேவையானது சரிவு

தேவையானது சரிவு

அடுத்த ஆண்டிலும் தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரம் சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: samsung சாம்சங்
English summary

Jay Y Lee appointed as the new executive chairman of Samsung Electronics

Jay Y Lee appointed as the new Executive chairman of Samsung Electronics, South Korea's largest business conglomerate.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X