பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட ரிலையன்ஸ், அதானி உயர் அதிகாரிகள்.. புதிய ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒட்டுமொத்த இந்தியாவைப் புரட்டிப்போட்ட பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சனையில் அடுத்தடுத்து முக்கியத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பெயர் வெளியாகி வருகிறது. இதனால் மொத்த கார்பரேட் நிறுவனமும் தற்போது கடுப்பில் உள்ளது.

 

ஏற்கனவே பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் பலரின் பெயர்கள் வெளியான நிலையில், தற்போது இந்தியாவின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பெயர்கள் வெளியில் வருகிறது.

 பெகாசஸ் ஸ்பைவேர்

பெகாசஸ் ஸ்பைவேர்

சமீபத்தில் வெளியான பட்டியலில் இஸ்ரேல் நாட்டின் NSO நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல், கெயில் இந்தியா முன்னாள் தலைவர் பிசி திரிபாத்தி, ஸ்பைஸ்ஜெட் சேர்மன் மற்றும் நிர்வாகத் தலைவர் அஜய் சிங், எஸ்ஸார் குரூப் தலைவர் பிரசாத் ரூயா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

 ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல்

ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல்

2018ல் அதீத கடன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவையில் இருந்து தரையிறங்கியது, இதன் பின்பு நரேஷ் கோயல் பெகாசஸ் ஸ்பைவேர் டார்க்கெட் லிஸ்ட்-ல் சேர்க்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் பின்பு 2019ல் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகக் குழுவில் இருந்து விலகினார்.

 அமலாக்க துறை விசாரணை
 

அமலாக்க துறை விசாரணை

இதேகாலகட்டத்தில் தான் ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயலிடம் அமலாக்கத் துறை வெளிநாட்டுப் பணப் பரிமாற்ற முறைகேடு குறித்து விசாரணையைத் துவங்கியது. 2020ல் பணச் சலவை குறித்த விசாரணையும் நரேஷ் கோயலிடம் அமலாக்கத் துறை துவங்கியது குறிப்பிடத்தக்கது.

 கடன் மோசடி

கடன் மோசடி

மேலும் கடன் மோசடியில் ஈடுபட்டு உள்ள ரோடோமேட்டிக் பென் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, அவரது மகன் ராகுல் கோத்தாரி, ஏர்செல் நிறுவனத் தலைவர் சி சிவசங்கர் ஆகியோரின் பெயரும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் டார்கெட் பட்டியலில் உள்ளது.

 ரிலையன்ஸ், அதானி உயர் அதிகாரிகள்

ரிலையன்ஸ், அதானி உயர் அதிகாரிகள்

இதோடு லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா, குஜராத் நர்மதா வேலி, ஆகிய நிறுவனங்களின் முன்னாள் நிர்வாகத் தலைவர்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வி சுப்பிரமணியம், ரிலையன்ஸ் ADA குரூப் ஏஎன் சேதுராமன், அதானி குரூப், Franklin Templeton, DSP BlackRock, Motilal Oswal உயர் அதிகாரிகள் பெயரும் தற்போது உளவு பார்க்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways, Reliance, Adani officials were spied on Pegasus spyware

Jet Airways, Reliance, Adani officials were spied on Pegasus spyware
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X