பெரிய அளவிலான கடன் பிரச்சனையால் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒரு கட்டத்தில், கடனையும் திரும்ப செலுத்த முடியாமல், ஊழியர்களுக்கு சம்பளத்தினையும் கொடுக்க முடியாமல் தவித்து வந்தது.
தனியார் விமானத் துறையிலேயே கணிசமான பங்குகளை கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ், அனைத்து விதமான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்த பிறகு, கடந்த ஆண்டு தனது சேவையினை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வந்தது. சொல்லப்போனால் போதிய நிதியினை திரட்ட முடியாத பட்சத்தில் தான் செயல்பாட்டினை முடக்கியது.
இந்த நிலையில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை ஏலத்தில் விட எஸ்பிஐ தலைமையிலான வங்கிக் குழு, தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
அரசின் அசத்தலான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. வங்கி டெபாசிட்டினை விட சிறந்தது ஏன்?

ஜெட் ஏர்வேஸ் சேவையை தொடங்க கோரிக்கை
இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல்ஸ் மீண்டும் சேவையை தொடங்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி உள்ளனர். இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனத்தில், மிகப்பெரிய அளவில் இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஆண்டு மிகப்பெரிய கடன் பிரச்சனையில் தவித்த நிலையில், தனது சேவையினை நிறுத்தியது.

புதிய பொறுப்பு
இதனையடுத்து இந்த நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளரான நரேஷ் கோயல், இயக்குனர் குழுவில் இருந்து விலக்கப்பட்டு கடன் கொடுத்தவர்கள் நிறுவனத்தை ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையில் தான் எஸ்பிஐ தலைமையிலான வங்கிக் குழு மீண்டும் இந்த நிறுவனத்தினை இயக்க முயற்சித்தனர். இந்த நிலையில் தான் ஏலத்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல் நிறுவனத்தின் கூட்டமைப்பு தற்போது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.

மீண்டும் சேவையை தொடங்க விண்ணப்பம்
இந்த நிலையில் தான் சேவையை தொடங்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த ஒப்புதல் கிடைத்த உடன் வரும் கோடை காலத்தில் மீண்டும் அதன் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வந்த உள்நாட்டு சேவை மற்றும் வெளிநாட்டு சேவைகளையும் மீண்டும் தொடரவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இது மிக நல்ல விஷயம்
உண்மையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்கும் போது பல ஆயிரம் ஊழியர்கள் மீண்டும் தங்களது திரும்ப தங்களது வேலைகளையும் திரும்ப பெறுவர். இது மிக மிக நல்ல விஷயம்.
ஒரு முடங்கிபோன இந்திய நிறுவனம், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இயங்க போகிறது என்றால் நிச்சயம் அது வரவேற்கதக்க நல்ல விஷயமே.