அம்பானியுடன் இணைந்து ஈ-காமர்ஸ் வணிகம்.. டிஃப்பனியின் அதிரடி விரிவாக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி மிகப்பெரிய வணிகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமம், தொடர்ச்சியாக பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகின்றது. தொடர்ச்சியாக அதன் வணிகத்தினை மேம்படுத்தி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தற்போது மீண்டும் மாபெரும் திட்டத்தினை கையில் எடுத்துள்ளது.

 

குறிப்பாக ஆன்லைன் சில்லறை வியாபாரம், தொலைத்தொடர்புத்துறை எண்ணெய் முதல் ரீனிவபிள் எனர்ஜி வரையிலான வணிகங்களில், புதுபுது மாற்றங்களையும், விரிவாக்கத்தினையும் செய்து வருகின்றது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்த டிஃப்பனி அண்ட் கோ நிறுவனம் தற்போது ஈ-காமர்ஸ் வணிகத்தினையும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

ஆன்லைனில் விற்பனை

ஆன்லைனில் விற்பனை

மிக பிரபலமான நகை பிராண்டான டிஃப்பனி அண்ட் கோ நிறுவனம் பல விலைமதிப்பு ஆடம்பர நகைகளையும் விற்பனை செய்து வருகின்றது. தற்போது ஆஃப்லைனில் மட்டுமே விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், தற்போது ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து ஆன்லைனிலும் விற்பனையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பல்வேறு பிராண்டிங் நகைகள் பட்டியல்

பல்வேறு பிராண்டிங் நகைகள் பட்டியல்

குறிப்பாக இந்த நகை பிராண்டில் விலை உயர்ந்த் கற்கள் பதித்த நகைகள், வைரம், கைவினை நகைகள் என பலவற்றையும் இந்த இணையத்தில் பதிவிடும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது டி1 மற்றும் டி அடிப்படையில் பல வகையான பிராண்டிங் நகைகளை பட்டியலிட்டுள்ளது. இது கடந்த 1980ல் இருந்தே பிராண்டிங் நகைகளை உருவாக்குவதில் மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது.

யார் யாருக்கு நகைகள்
 

யார் யாருக்கு நகைகள்

இந்த இணையதளத்தில் ஹார்ட்வியர் நகைகள், விக்டோரியா, ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பரிசுகள், இது தவிர இன்னும் பல அம்சங்களையும் இந்த இணையத்தின் பக்கத்தில் கொண்டுள்ளது. இது தவிர வைரங்கள் பற்றிய ஆலோசனைகளுக்கு நிபுணர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்து தருதல், வாழ் நாள் முழுவதுமான இலவச சர்வீசஸ் உள்ளிட்ட பல அம்சங்களையும் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈ-காமர்ஸ் வணிகம்

ஈ-காமர்ஸ் வணிகம்

இந்த நிலையில் தான் டிஃப்பனி நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து, Tiffany & Co என்ற ஈ-காமர்ஸ் இணையதளத்தினை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

தற்போது டிஃப்பனி நிறுவனம் சர்வதேச அளவில் 300-க்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தக கடைகளை கொண்டுள்ள நிலையில, இந்தியாவில் அதன் ஆஃப்லைன் வணிகம் என்பது குறைவாகவே உள்ளது.

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்

இந்த நிலையில் தான் அதன் வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக வணிகத்தினை விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டே கொரோனா காலத்தில் இந்திய சந்தையில் கூட்டாக நுழைந்தாலும், தற்போது தான் விரிவாக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.

விரிவாக்கம் செய்ய உதவும்

விரிவாக்கம் செய்ய உதவும்

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் பிரெஞ்ச் பேஷன் நிறுவனமான, LVMH Moët Hennessy Louis Vuitton என்ற நிறுவனத்தினை டிஃப்பனி கையகப்படுத்தியது. இதன் மதிப்பு 16.2 பில்லியன் டாலராகும். கையகப்படுத்தப்பட்ட இந்த நிறுவனம், மேலும் அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய உதவும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்துடன் சேர்ந்த இந்திய சந்தையில் தனது ஆடம்பர நகை ஆதிக்கத்தினை நிலை நிறுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jewellery brand Tiffany & Co launches E-commerce platform with reliance group

Reliance tiffany latest updates in tamil.. Jewellery brand Tiffany & Co launches E-commerce platform with reliance group
Story first published: Tuesday, October 19, 2021, 19:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X