முகேஷ் அம்பானியை இனி கையில் பிடிக்க முடியாது.. இந்தியா முழுக்க EV சார்ஜிங் ஸ்டேஷன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசலை ரீடைல் முறையிலான விற்பனையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், விற்பனை கிளைகளை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானி தனது ஜியோ நிறுவனத்துடன் BP நிறுவனத்தை இணைத்து புதிய கூட்டணி நிறுவனத்தை மறக்க முடியாது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி 75,000 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய கிரீன் எனர்ஜி திட்டத்தைக் கையில் எடுத்துள்ள நிலையில், இத்துறை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காகவும், மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாகப் புதிய திட்டத்தை ஜியோ - BP கூட்டணி நிறுவனத்தின் வாயிலாகச் செய்ய முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

ஜியோ - BP கூட்டணி

ஜியோ - BP கூட்டணி

ஜியோ - BP கூட்டணியில் உருவான நிறுவனம், இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் நெட்வொர்க் அமைக்கும் திட்டத்திற்காக BluSmart என்ற எலக்ட்ரிக் டாக்ஸி சேவை நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. எதற்காக BluSmart நிறுவனத்துடன் கூட்டணி..? அப்படி இந்த நிறுவனத்தில் என்ன ஸ்பெஷல்..?

BluSmart நிறுவனம்

BluSmart நிறுவனம்

BluSmart நிறுவனம் என்பது இந்தியாவில் இருக்கும் பிற ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனம் தான், ஆனால் சிறு வித்தியாசம். இந்ந நிறுவனத்தில் இருக்கும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் கார்கள் தான். இதைத் தாண்டி BluSmart நிறுவனம் டெல்லி என்சிஆர் முழுக்கப் பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் வைத்துள்ளது. இந்தக் கூட்டணி மூலம் இந்தப் பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

 சார்ஜிங் ஸ்டேஷன்

சார்ஜிங் ஸ்டேஷன்

ஜியோ - BP - BluSmart கூட்டணி நாடு முழுவதும் அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களும் சார்ஜ் செய்யும் வகையில் சார்ஜி ஸ்டேஷன் அமைக்க உள்ளது. முதல்கட்டமாக NCR பகுதியில் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், ஒவ்வொரு சார்ஜிங் ஸ்டேஷனிலும் 30 வாகனங்கள் சார்ஜ் செய்யும் அளவிற்குத் தளத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது இக்கூட்டணி.

BP PULSE அனுபவம் இந்தியாவில்

BP PULSE அனுபவம் இந்தியாவில்

இதற்கிடையில் BP நிறுவனம் பிரிட்டன் நாட்டில் மிகப்பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் நெட்வொர்க்-ஐ தனது BP PULSE நிறுவனத்தின் மூலம் அளித்து வருகிறது. தற்போது BluSmart உடன் இணைந்து BP PULSE நிறுவனத்தின் படிப்பினை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் மிகப்பெரிய நெட்வொர்க்-ஐ அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக JIO-BP நிறுவனத்தின் தலைவர் ஹரிஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

JIO-BP நிறுவனம்

JIO-BP நிறுவனம்

இந்த மாபெரும் திட்டத்திற்காக JIO-BP நிறுவனம் OEM, தொழில்நுட்பம் மற்றும் பிளாட்பார்ம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இந்தத் திட்டம் நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை உயர்த்துவது மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் நாடு முழுவதும் எளிதாகப் பயணிக்கத் தேவையான கட்டமைப்பை உருவாக்க முடியும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2019 கூட்டணி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2019 கூட்டணி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ரீடைல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை அதிகரிக்கப் பிரிட்டன் BP நிறுவனத்துடனான கூட்டணியை 2019 ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் BP கூட்டணியில் உருவாகிய புதிய JIO-BP நிறுவனத்தில் 49 சதவீத பங்குகள் BP கட்டுப்பாட்டிலும், 51 சதவீத பங்குகள் ரிலையன்ஸ் நிறுவன கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.

500 பெட்ரோல் பங்குகள் இலக்கு

500 பெட்ரோல் பங்குகள் இலக்கு

இக்கூட்டணி நிறுவனம் நாட்டின் முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் சுமார் 5500 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட உள்ளது இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் சுத்திகரிக்கும் பெட்ரோல், டீசல் விற்பனையை அதிகரிக்க முடியும் என்பதே அடிப்படை திட்டம். ஆனால் தற்போது எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் பிரிவில் இறக்கியுள்ளது.

ஸ்விக்கி உடன் கூட்டணி

ஸ்விக்கி உடன் கூட்டணி

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி தனது டெலிவரி வாகனங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணியில் இயங்கும் ஜியோ-BP நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் BP மொபிலிட்டி லிமிடெட் ஒப்பந்தம் செய்துள்ளது.

 பேட்டரி ஸ்வாப் ஸ்டேஷன்

பேட்டரி ஸ்வாப் ஸ்டேஷன்

இந்த ஒப்பந்தம் மூலம் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்கள் பயன்படுத்தும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி ஸ்வாப் ஸ்டேஷனை ஜியோ BP நெட்வொர்க் அமைக்க உள்ளதாக அறிவித்து இருந்தது. இப்படி ரிலையன்ஸ் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து விதமானப் பணிகளையும் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JIO-BP joint venture tieup with BluSmart to Set up EV Charging Station all over India

JIO-BP joint venture tieup with BluSmart to Set up EV Charging Station all over India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X