Jio Fiber vs Airtel Xstream Fiber! யாருடைய திட்டம் உங்களுக்கு ஒத்து வரும் பாருங்க?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2015 காலத்தில் எல்லாம், பணக்காரர்கள் மற்றும் மேல் நடுத்தர மக்கள் மட்டுமே, வீட்டில் பிராட்பேண்ட் வைத்திருப்பார்கள்.
ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது.

கிட்டத்தட்ட கீழ் நடுத்தர மக்கள் வரை, இன்று இந்தியாவில் பிராட்பேண்ட் சேவையை வீட்டில் வைத்து இருக்கிறார்கள்.

வீட்டில் எப்படி டிவி, குளிர்சாதனப் பெட்டி, வாசிங் மிஷின், ஸ்மார்ட்ஃபோன் எல்லாம் ஒரு அத்தியாவசியப் பொருளாக இருக்கிறதோ, அதே போல் இன்று பிராட்பேண்ட் இணைய சேவைகளும் அத்தியாவசிய தேவையாக மாறி இருக்கின்றன.

வீட்டில் இருந்தே எல்லாம்

வீட்டில் இருந்தே எல்லாம்

குறிப்பாக வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டிய சூழல் வந்த பின், பிராட்பேண்டின் தேவை கணிசமாக அதிகரித்து. இன்று அலுவலக வேலைகள் மட்டுமின்றி, பள்ளி மற்றும் கல்லூரி பாடம் படிப்பது தொடங்கி ஆன்லைனில் விளையாடுவது, ஓடிடி யூடியூப் போன்ற பொழுது போக்கு... என எல்லாமே இணையத்தை நம்பித் தான் இருக்கிறது. எனவே பிராட்பேண்டும் அத்தியாவசியமாகிவிட்டது.

பிராட்பேண்ட் ஒப்பீடு

பிராட்பேண்ட் ஒப்பீடு

ஆக பிராட்பேண்ட் சேவைகள், ஒரு சாமானிய இந்தியருக்கு கூட அத்தியாவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த நிலை வந்த பின், எந்த பிராட்பேண்ட் நமக்கு ஒத்து வருகிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே ரிலையன்ஸ் ஜியோவின் Jio Fiber மற்றும் பார்தி ஏர்டெல்லின் Airtel Xstream Fiber திட்டங்களை ஒப்பிடப் போகிறோம்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

எதையும், அதிரடியாக செய்வது தானே நம் முகேஷ் அம்பானியின் ஸ்டைல். அதே அதிரடியை தன் Jio Fiber பிராட்பேண்டிலும் காட்டி இருக்கிறார். Jio Fiber-ன் திட்டங்களை சமீபத்தில் தான் மாற்றி அமைத்தார்கள். அதில் FUP லிமிட் இல்லாமல் அன்லிமிடெட் இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறது ஜியோ ஃபைபர்.

ஏர்டெல்-க்கு வழி இல்லை

ஏர்டெல்-க்கு வழி இல்லை

ரிலையன்ஸின் ஜியோ ஃபைபர், தன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் சேவை வழங்குகிறார்கள் என்பதால், பார்தி ஏர்டெல்லும் தன் திட்டங்களை மாற்றி அமைத்து, FUP இல்லாமல் அன்லிமிடெட் இணையத்தை வழங்கத் தொடங்கி இருக்கிறது. டேட்டா அன்லிமிடெட் என்பதால், இப்போது இரண்டு கம்பெனிகளின் விலை மற்றும் இணைய வேகத்தை மட்டுமே ஒப்பிட முடியும். வாருங்கள் அதையும் பார்த்து விடுவோம்.

Jio Fiber பிராட்பேண்ட் திட்டங்கள்

Jio Fiber பிராட்பேண்ட் திட்டங்கள்

30 Mbps வேகத்தில் 399 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா
100 Mbps வேகத்தில் 699 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா
150 Mbps வேகத்தில் 999 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா
300 Mbps வேகத்தில் 1,499 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா
500 Mbps வேகத்தில் 2,499 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா
1 Gbps வேகத்தில் 3,999 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா. இது 18% ஜிஎஸ்டி சேர்க்காத விலை விவரம்

Airtel Xstream Fiber பிராட்பேண்ட் திட்டங்கள்

Airtel Xstream Fiber பிராட்பேண்ட் திட்டங்கள்

40 Mbps வேகத்தில் 499 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா
100 Mbps வேகத்தில் 799 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா
200 Mbps வேகத்தில் 999 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா
300 Mbps வேகத்தில் 1,499 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா
1 Gbps வேகத்தில் 3,999 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா. இது 18% ஜிஎஸ்டி சேர்க்காத விலை விவரம்

ஒப்பீடு விளக்கம்

ஒப்பீடு விளக்கம்

வழக்கம் போல ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ ஃபைபர், குறைந்த விலை மூலம் வாடிக்கையாளர்களை வளைக்கப் பார்க்கிறார்கள். ஏர்டெல், வேகத்தின் வழியாக, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பார்க்கிறார்கள். ஆக எது யாருக்குத் தேவையோ, அவர்கள், அந்தந்த திட்டங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Jio Fiber மற்ற சலுகைகள்

Jio Fiber மற்ற சலுகைகள்

ஜியோ ஃபைபரில் 999 ரூபாய் முதலான திட்டங்களுக்கு AMAZON PRIME VIDEO, DISNEY+ HOTSTAR VIP, SONYLIV, ZEE5, SUNNXT, VOOT, ALTBALAJI, HOICHOI, SHEMAROOME, LIONSGATE PLAY, JIOCINEMA & JIOSAAVN போன்ற பல ஓடிடி-க்களின் சப்ஸ்கிரிப்ஷன் வேறு இலவசமாகக் கொடுக்கிறார்கள்.

Airtel Xstream Fiber சலுகைகள்

Airtel Xstream Fiber சலுகைகள்

பார்தி ஏர்டெல்லின் Airtel Xstream Fiber பிராட்பேண்ட் திட்டங்களை வாங்குபவர்களுக்கு (999 ரூபாய் திட்டம் முதல்) Prime Video, Disney+ Hotstar, ZEE5 போன்ற ஓடிடி-க்களில் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கிறார்களாம். மற்ற வசதிகள், எல்லாம் தெரிந்து கொள்ள, டெலிகாம் கம்பெனிகளின் வலைதளங்களைப் பாருங்கள். 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio Fiber vs Airtel Xstream Fiber broadband which is best and suitable for you

We have compared the Reliance Jio Fiber and Airtel Xstream Fiber broadband plans. You can choose which is best for you according to the speed of internet and price of the plans.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X