ஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..?!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்டெல் நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டு நிறுவனமான இன்டெல் கேபிடல், ஜியோ நிறுவனத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் சுமார் 1894.50 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 0.39 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இது ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் 11வது முதலீட்டாளர் ஆகும்.

 

இதுவரை முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ, டிஜிட்டல் மற்றும் டெலிகாம் சேவை துறையில் 25.09 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 1,17,588.45 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற்றுள்ளனர். இன்டெல் கேபிடல் முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.91 கோடி ரூபாயாகவும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் முகேஷ் அம்பானி 3 முக்கியத் திட்டத்தை இன்டெல் நிறுவனத்தின் மூலம் சாதித்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

 "திவால்" ஆன OneWeb நிறுவனத்தில் ஏர்டெல் முதலீடு.. புதிய இலக்கு புதிய பயணம்..!

திட்டம் 1

திட்டம் 1

ஜியோ நிறுவனத்தில் தற்போது 388 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை 2023ல் 500 மில்லியனாகவும், 2025ல் 609 மில்லயனாக அதிகரிக்கும் என Bernstein ஆய்வு கூறுகிறது. இந்த அதிரடி வளர்ச்சி தான் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய ஈர்க்கும் முக்கியக் காரணமாகவும் உள்ளது.

ஆய்வறிக்கை கூறுவது போலவே நடந்தால் மிகப்பெரிய அளவிலான தரவுகள் ஜியோ நிறுவனத்திற்குக் கிடைக்கும் இதைச் சரியான முறையில் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் இன்டெல் போன்ற பெரிய நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய உதவி நிச்சயம் தேவை.

 

 செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

ஏற்கனவே முகேஷ் அம்பானி அறிவித்ததைப் போல் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் முதல் பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்குவதால் cross-platform approach முறை நிச்சயம் பயன்படுத்தப்படும், இதைச் சரியான முறையில் செய்ய இன்டெல் நிறுவனம் பெரிய அளவில் உதவிடும். இன்டெல் நிறுவனத்தின் இந்த முதலீடு வெறும் முதலீடு அல்ல, எதிர்கால வளர்ச்சிக்கு முகேஷ் அம்பானி போடும் அடித்தளம்.

இதுமட்டும் அல்லாமல் இன்டெல் கேப்பிடெல் கடந்த சில வருடங்களாகச் செய்து வந்த முதலீடு அனைத்தும், செயற்கை நுண்ணறிவு பிரிவில் அதிகமாக இருந்தது குறிப்பிடதக்கது.

 

திட்டம் 2
 

திட்டம் 2

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு வர ஜியோ ஏற்கனவே திட்டமிட்டு அதற்கான பணிகளையும், சோதனைகளையும் செய்து வரும் நிலையில், அதை இன்றைய இந்திய கட்டமைப்பில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயமில்லை.

2020இன் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாகக் கருதப்படும் 5ஜி தொழில்நுட்பத்தில் ஏற்கனவே இன்டெல் பணியாற்றி வருகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனத்தில் இன்டெல் செய்துள்ள முதலீட்டின் மூலம் இன்டெல் நிறுவனம் தற்போது தலைசிறந்து விளங்கும் ORAN மற்றும் OpenRAN ஆகிய இரு மென்பொருளின் உதவியுடன் ஜியோ தனது டெலிகாம் நொட்வொர்க்-ஐ அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கு எளிதாக மாற்றிவிட முடியும்.

மேலும் ORAN மற்றும் OpenRAN ஆகிய மென்பொருளும் 5ஜி தொழில்நுட்பத்திற்கான Open Source மென்பொருள்.

 

 திட்டம் 3

திட்டம் 3

கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சிறந்து விளங்கும் இன்டெல், முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய கனவை இந்த முதலீட்டின் வாயிலாக நினைவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவில் மொபைல் விற்பனை சந்தையில் LYF மொபைல் மூலம் குறிப்பிடத்தக்க அளவிலான சந்தையைப் பெற்று கலக்கி வரும் ஜியோ, இன்டெல் கூட்டணியில் லேப்டாப் அறிமுகம் செய்யவும் முடியும்.

 

ஜியோ லேப்டாப்

ஜியோ லேப்டாப்

லேப்டாப் பிரிவில் இன்டெல் நிறுவனம் உலகளாவிய சந்தையை வைத்திருக்கும் நிலையில் இன்டெல் கூட்டணியால் ஜியோ இந்தியாவில் லேப்டாப், டேப்லெட், கேமரா ஆகியவற்றை அறிமுகம் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக Greyhound ஆய்வறிக்கை கூறுகிறது.

லேப்டாப்

லேப்டாப்

இந்தியாவின் லேப்டாப் சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கச் சீனாவின் சியோமி மற்றும் ஹூவாய் தயாராகி வரும் நிலையில் இன்டெல் நிறுவனத்தின் முதலீடும், முகேஷ் அம்பானியின் ஜியோவுக்குப் புதிய வாய்ப்பும் கிடைத்துள்ளது.

ஆனால் சியோமி மற்றும் ஹூவாய் லேப்டாப்-கள் தரத்திலும் சரி, விலையிலும் சரி A1. இதை எப்படி இந்தியச் சந்தையும், இந்திய மக்களும் பார்க்கப்போகிறார்கள் என்பது தான் இப்போதைய கேள்வி.

நீங்க சொல்லுங்க ஜியோ லேப்டாப் வந்தால் நீங்க வாங்குவீங்களா..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio laptop: New hope for Mukesh Ambani's Jio after Intel investment

Jio laptop: New hope for Mukesh Ambani's Jio after Intel investment
Story first published: Sunday, July 5, 2020, 8:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X